
ஜாம்பிகள் ஒரு பக்கம்… வடிவேலுவின் காமெடி ஒரு பக்கம் – ‘பேங் பேங்’ டீசரில் மிரட்டும் பிரபுதேவா, வடிவேலு!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இணைந்திருக்கும் ‘பேங் பேங்’ திரைப்படத்தின் புதிய டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வழக்கமான காமெடி அல்லது ஆக்ஷன் களத்தைத் தாண்டி, ஜாம்பிகள் மற்றும் எரிமலைப் பின்னணியில் உருவாகியிருக்கும் வித்தியாசமான கதைக்களத்தை டீசர் அறிமுகப்படுத்துகிறது.
டீசரின் தொடக்கக் காட்சிகளே படத்தின் உலகம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகின்றன. எரிமலை வெடித்து லாவா வெளியேறும் ஆபத்தான நிலப்பரப்பு, அதைச் சுற்றியிருக்கும் பதற்றமான சூழல் என ‘பேங் பேங்’ திரைப்படம் பிரம்மாண்டமான சாகசப் பயணத்திற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்கிறது.
இந்த ஆபத்தான சூழலுக்குள் பிரபுதேவாவும் வடிவேலுவும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகின்றனர். அவர்களை ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் துரத்த, அவர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிகள் டீசருக்கு வேகத்தையும் பரபரப்பையும் கூட்டுகின்றன.
ஆனால், முழுக்க முழுக்க சீரியஸான ஆக்ஷன் அனுபவமாக படம் நகரவில்லை என்பதையும் டீசர் தெளிவாகச் சொல்கிறது. பதற்றமான சூழலுக்கு நடுவே வடிவேலுவின் வழக்கமான உடல்மொழியும் நகைச்சுவையும் இடம்பெறுவது, படத்தின் முக்கியமான கமர்ஷியல் அம்சமாக அமைந்துள்ளது.
ஒருபுறம் பிரபுதேவாவின் ஸ்டைலான தோற்றமும் அதிரடி காட்சிகளும் ரசிகர்களை கவரும் வகையில் இருக்க, மறுபுறம் வடிவேலுவின் காமெடி காட்சிகள் அந்த ஆக்ஷன் களத்திற்கு முற்றிலும் மாறுபட்ட சுவையை வழங்குகின்றன. இதனால் ஆக்ஷன், ஹாரர், அட்வென்ச்சர் மற்றும் காமெடி ஆகியவை கலந்த வித்தியாசமான பொழுதுபோக்கு படமாக ‘பேங் பேங்’ உருவாகியிருப்பதற்கான அறிகுறிகள் டீசரில் தெரிகின்றன.
குறிப்பாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் மீண்டும் ஒரே படத்தில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இவர்களின் முந்தைய கூட்டணியை ரசித்த ரசிகர்களுக்கு, முற்றிலும் புதிய களத்தில் இருவரையும் பார்ப்பது கூடுதல் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வெளியான டைட்டில் டீசரில் துப்பாக்கியுடன் இருவரும் ஜாம்பிகளுக்கு நடுவே தோன்றிய காட்சிகள் கவனம் பெற்றிருந்தன. தற்போது வெளியாகியுள்ள புதிய டீசர், அந்த எதிர்பார்ப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் அமைந்துள்ளது.
‘பேங் பேங்’ திரைப்படத்தை சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். KRG கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்திற்கு தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக உள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, H.C. வேணு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பையும், டான் பாலா கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
இந்தோனேசியாவின் புகழ்பெற்ற Mount Bromo எரிமலைப் பகுதி மற்றும் மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ள இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மொத்தத்தில், வித்தியாசமான ஜாம்பி உலகம், எரிமலைப் பின்னணி, அதிரடி ஆக்ஷன் காட்சிகள் மற்றும் அதற்குள் இணையும் பிரபுதேவா – வடிவேலுவின் காமெடி கூட்டணி என ‘பேங் பேங்’ டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கணிசமாக அதிகரித்துள்ளது.

Zombies on One Side, Vadivelu’s Comedy on the Other: Prabhu Deva and Vadivelu Make a Striking Comeback in ‘Bang Bang’ Teaser
The new teaser of Bang Bang, featuring the much-awaited reunion of Prabhu Deva and Vadivelu, has been released and is already attracting attention. Moving beyond the usual comedy and action formula, the film introduces a unique world of zombies, volcanoes and adventure.
The teaser immediately establishes the unusual setting of the film. A dangerous landscape surrounded by volcanic eruptions and flowing lava sets the stage for what appears to be an action-packed adventure.
Prabhu Deva and Vadivelu are seen in distinctive looks as they find themselves caught in a dangerous situation. With zombie-like humans chasing them, the duo is seen attempting to escape, adding plenty of action and excitement to the teaser.
However, Bang Bang does not appear to be a serious action thriller alone. Vadivelu’s trademark comic timing, expressions and body language find their place amid the tense situations, providing a humorous contrast to the otherwise dangerous environment.
While Prabhu Deva’s stylish appearance and action sequences bring a mass appeal to the film, Vadivelu’s comedy adds an entirely different flavour. The combination of action, horror, adventure and comedy appears to be one of the major attractions of Bang Bang.
The reunion of Prabhu Deva and Vadivelu after several years is another major highlight. The duo has previously entertained audiences with their memorable combination, and their return together in a completely different genre has created considerable curiosity among fans.
The earlier title teaser had already grabbed attention with glimpses of the two actors wielding guns while surrounded by zombies. The latest teaser takes the excitement further by offering a closer look at the film’s unusual world and its blend of action and comedy.
Written and directed by Sam Rodriguez, Bang Bang is produced by KRG Kannan Ravi, with Deepak Ravi serving as co-producer. Yuvan Shankar Raja is composing the music, while H.C. Venu handles cinematography. Suresh has choreographed the stunt sequences, Antony is in charge of editing and Don Bala takes care of the art direction.
The film was shot in Indonesia’s iconic Mount Bromo volcanic region as well as in Malaysia. The entire shoot has been completed. Actor Babloo Prithiveeraj is also part of the cast in a key role.
With its unusual zombie setting, volcanic backdrop, action-packed sequences and the much-loved Prabhu Deva–Vadivelu combination, the Bang Bang teaser has certainly raised expectations for this unique entertainer.
