அம்மா கிரியேஷன் டி.சிவா தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ராஜேஷ்.M இயக்கத்தில் நவம்பர் 10ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் “ கடவுள் இருக்கான் குமாரு “
தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன் டி.சிவா பேசியது , அம்மா கிரியேஷன் நிறுவனம் துவங்கி 25வருடம் ஆகிறது. இந்த 25 வருடத்தில் நான் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்துவிட்டேன். இந்த 25வது வருடத்தில் கடவுள் இருக்கான் குமாரு திரைப்படத்தை தயாரிப்பது எனக்கு பெருமையாக உள்ளது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் 100% மிகச்சிறந்த நடிகர். நிக்கி கல்ராணியின் டைமிங் மற்றும் நடிப்பு மிக அருமையாக இருக்கும். ஆனந்தி குழந்தை போன்றவர் நிச்சயம் அவர் சினிமாவில் மிகப்பெரிய உயரங்களை தொடவேண்டும். இவர்களோடு இப்படத்தில் என்னுடைய நெருங்கிய நண்பன் பிரகாஷ் ராஜ் மனதில் நிற்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிக்க டப்பிங் செய்ய என எல்லாவற்றுக்கும் அவர் ஆர்வத்தோடு விமானத்தில் வந்து அவருடைய பணியை சரியாக முடித்துவிட்டு சென்றார் அவருக்கு நன்றி. இப்படத்தில் நடித்திருக்கும் ரோபோ சங்கரின் பாத்திரம் பேசப்படும். ஆர்.ஜே.பாலாஜியின் கதாபாத்திரம் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெறும். இனிமேல் இங்கு எல்லாமே கூட்டு முயற்சியில் தான் நடைபெறும். இப்படத்தில் என்னுடன் இனைந்து பணியாற்றிய சரவணனுக்கு நன்றி என்றார் டி.சிவா.
இயக்குநர் ராஜேஷ் பேசியது , கடவுள் இருக்கான் குமாரு ஒரு நல்ல தலைப்பு , ஜி.வி.பிரகாஷின் நடிப்பை த்ரிஷா இல்லைனா நயன்தாரா திரைப்படத்தில் பார்த்து தான் இந்த கதையில் அவர் தான் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். நானே அவரை நேரில் சந்தித்து இப்படத்தின் கதையை கூறினேன். அவருக்கும் கதை பிடித்து போக உடனே இப்படம் துவங்கியது. இன்றைய இளைஞர்கள் அனைவரும் தங்களை ஜி.வி.பிரகாஷ் குமாருடன் தொடர்புபடுத்தி கொள்கிறார்கள். அது தான் அவருடைய மிகப்பெரிய பலம். இப்படமும் அவருடைய ரசிகர்களான இளைஞர்கள் மற்றும் குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும் ஒரு படைப்பாக இருக்கும். ஜி.வி.பிரகாஷ் நடித்து “ U “ சான்றிதழ் பெற்று வெளிவரும் முதல் திரைப்படம் இதுவாக தான் இருக்கும். ஜிவியின் இசையில் பாடல்கள் அனைத்தும் இன்று அனைத்து பண்பலைகளிலும் சக்க போடு போட்டு வருகிறது. இப்படத்தில் நடித்துள்ள ஆர்.ஜே.பாலாஜிக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது அவர்கள் அனைவரையும் கவரும் வகையில் அவருக்கு இப்படத்தில் மிகமுக்கியமான கதாபாத்திரம் தரப்பட்டுள்ளது. இப்படத்தில் ஜீவா கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக ஜி.வி.பிரகாஷ் உடன் நிக்கி கல்ராணி மற்றும் ஆனந்தி படத்தின் இரண்டு நாயகிகளும் அவருடன் இனைந்து நடனமாடியுள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் பேசியது , ஆனந்தி மிகவும் அமைதியான பெண் , நிக்கி கல்ராணி ரவுடி பொண்ணு. நாங்கள் இப்படத்தின் படபிடிப்பில் இருக்கும் போது மிகப்பெரிய ஒரு விபத்தில் இருந்து தப்பித்தோம். நான் என்னுடைய வாழ்நாளில் வேலை செய்த மிகச்சிறந்த டீம் “ கடவுள் இருக்கான் குமாரு “ படத்தின் டீம் தான். இப்படத்தை பார்த்துவிட்டு சென்சார் குழுவினர் அனைவரும் படத்தை பற்றி நல்ல விதமாக என்னிடம் கூறினார்கள். இப்படம் வருகிற வியாழன் அன்று வெளியாகுகிறது. வியாழன் எப்போதும் எனக்கு ராசியான நாள் அதாலால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்.