
நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் தமிழ் ரசிகரகள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து வெற்றி படங்கள் அது மட்டும் இல்லாமல் நாளுக்கு நாள் ரசிகர்கள் பட்டாளம் கூடிகொண்டே போகிறது திழ் மட்டும் இல்லமல் தெலுங்கு மலையாளம் இப்படி மூன்று மொழிகளுலும் வாய்ப்புகள் வந்துகுவிகிறது.
கேரள மாநிலத்தை சேர்ந்த அவர், தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது தமிழில், பைரவா படத்தில் இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். தெலுங்கில் நானிக்கு ஜோடியாக ‘நேனு லோக்கல்’ என்ற படத்திலும் நடித்து வருகின்றார்.
ஏற்கனவே நேனு சைலஜா எனும் படத்தின் வாயிலாக தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த கீர்த்தி சுரேஷிற்கு மேலும் பல தெலுங்கு பட வாய்ப்புகள் வந்துள்ளன.
ஆனால் அதில் அதிக கவர்ச்சி காட்டும் படி கேட்டுள்ளனர். இதற்கு கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொள்ளவில்லை, அதனால், அப்பட வாய்ப்புகள் கை நழுவி சென்று விட்டது