
மகள்களின் கனவுகளுக்காக உருவான ‘ஆகாயம் ஒரு தாரகை’ – துல்கர் சல்மான் நெகிழ்ச்சி!
“இது தமிழ், தெலுங்கு மொழிகளைக் கடந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான கதை!” – சென்னையில் நடைபெற்ற படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் நம்பிக்கை!
துல்கர் சல்மான், ஜி.வி. பிரகாஷ் குமார், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள ‘ஆகாயம் ஒரு தாரகை’ திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று (நவம்பர் 17) சென்னை வெஸ்டின் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், நடிகர் துல்கர் சல்மான், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், நடிகை சத்வீரா வள்ளி, நடிகர் சின்னி மற்றும் பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் உருவான விதம், அதன் பின்னணியில் இருக்கும் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்துப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் துல்கர் சல்மான், “ஆதாயம் ஒரு தாரகை” திரைப்படம் ஒரு குறிப்பிட்ட மொழிக்கான படமாக இல்லாமல், இந்தியாவின் எந்தவொரு சிறிய நகரத்திலும் நடைபெறக்கூடிய எளிய மனிதர்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் கதையாக உருவாகியுள்ளது. வசூல் கணக்குகளையும் வணிக நோக்கங்களையும் முதன்மைப்படுத்தாமல், சினிமா மீதான அன்புடனும் ஆர்வத்துடனும் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பின்போது ஒட்டுமொத்தக் குழுவினரும் ஒரு குடும்பத்தைப் போலப் பழகினோம். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய அந்த அனுபவம் மறக்க முடியாதது.
படத்தின் டீசர் வெளியான பிறகு கிடைத்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. ஒரு பெரிய நட்சத்திரக் கூட்டணியுடன் உருவான பிரம்மாண்டமான வணிகப் படத்திற்குக் கிடைக்கும் வரவேற்பைப் போல ரசிகர்களிடமிருந்து அழைப்புகளும் பாராட்டுகளும் வந்தன. சினிமாவின் அழகே அதுதான்; அதன் வெற்றியை முன்கூட்டியே கணிக்க முடியாது. நம்முடைய கதையை உண்மையான ஈடுபாட்டுடன் சொல்ல வேண்டும். அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
இந்தப் படத்தில் பணியாற்றியவர்களில் பெரும்பாலானோர் பெண் குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பவர்கள். எனக்கும், அல்லு அரவிந்த் சாருக்கும், ஜி.வி. பிரகாஷ் சாருக்கும் பெண் குழந்தைகள் உள்ளனர். எங்களுடைய மகள்கள் மட்டுமின்றி, ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் பெண்களின் கனவுகளையும் மனதில் வைத்தே இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். ரசிகர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் பேசுகையில், திரைத்துறையில் தனது 50 ஆண்டுகால அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டதுடன், ஜி.வி. பிரகாஷைத் தமிழ்த் திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி தெரிவித்தார். அவரது இயல்பான நடிப்பையும், கதாபாத்திரத்துடன் ஒன்றிப்போகும் திறனையும் பாராட்டினார். இந்தத் திரைப்படம் ஜி.வி. பிரகாஷுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், துல்கர் சல்மான் இந்தப் படம் கதாநாயகனை மையப்படுத்தியதா அல்லது கதாநாயகியை மையப்படுத்தியதா என்று தன்னிடம் கேட்டதாகக் குறிப்பிட்ட அல்லு அரவிந்த், இது கதாநாயகனின் திரைப்படம் என்று கூறியதாகவும், ஆனால் துல்கர் தனது நடிப்பால் படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் பாராட்டினார்.
இந்தப் படத்தின் முக்கியக் கதாபாத்திரத்திற்குப் புதுமுகத்தைத் தேடியபோது, அமெரிக்காவின் சிகாகோவில் வளர்ந்த தமிழ்ப் பெண்ணான சத்வீரா வள்ளி இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகமானதாகவும், தற்போது அவர் இரண்டு தமிழ்ப் படங்களிலும் இரண்டு தெலுங்குப் படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தெரிவித்தார். ஒரு சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணின் கனவுகளையும், அவற்றை நனவாக்க அவர் எதிர்கொள்ளும் பயணத்தையும் பேசும் கதையாக இப்படம் அமைந்துள்ளது என்றும் கூறினார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பேசுகையில், துல்கர் சல்மான் தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் சிறந்த திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகப் பாராட்டினார். ஏற்கெனவே ‘லக்கி பாஸ்கர்’ படத்தில் அவருடன் பணியாற்றிய அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், ‘ஆகாயம் ஒரு தாரகை’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதுடன், காலத்தைக் கடந்து நிற்கும் சிறந்த படைப்பாகவும் அமையும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். ‘யூத்’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’, ‘இருமுடி’, ‘மண்டாடி’ உள்ளிட்ட படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படமும் தனது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமையும் என்றும் தெரிவித்தார்.
நடிகை சத்வீரா வள்ளி பேசும்போது, இந்தப் படம் மிகுந்த உணர்வுப்பூர்வமான அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ள பாடல்கள் பல தலைமுறைகளைக் கடந்து நினைவுகூரப்படும் என்றும், நடிகர் சின்னி உள்ளிட்ட மூத்த கலைஞர்கள் தன்னிடம் காட்டிய அன்பும் ஆதரவும் மறக்க முடியாதவை என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும், துல்கர் சல்மான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட திறமையான கலைஞர்களுடன் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், ரசிகர்கள் ஓடிடி வெளியீட்டிற்காகக் காத்திருக்காமல் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
நடிகர் சின்னி ஜெயந்த் தனது உரையில் துல்கர் சல்மானின் தீவிர ரசிகர் எனக் குறிப்பிட்டதுடன், அவர் நடிக்கும் ஒவ்வொரு மொழித் திரைப்படத்திற்கும் தானே குரல் கொடுத்து டப்பிங் பேசும் திறனைப் பாராட்டினார். பல மொழிகளில் சரளமாக நடிப்பதுடன், குரல் வழியாகவும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் துல்கர் உண்மையிலேயே சகலகலா வல்லவர் என்றார். படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை டப்பிங் பணியின்போது பார்த்தபோது, தனது மகன் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற செய்தியைக் கேட்டபோது ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போலவே உணர்ந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இந்தப் படம் அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவதுடன், தேசிய விருதுகளையும் வெல்லும் என்ற நம்பிக்கையையும் பகிர்ந்துகொண்டார்.
பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபாலன் படத்தின் அடிப்படை உணர்வைப் பற்றிப் பேசும்போது, ஒரு கணவன் தனது மனைவிக்குப் பணம், கார், வீடு எனப் பல வசதிகளை வழங்க முடியும். ஆனால், அவளுக்கென்று ஒரு கனவை உருவாக்கிக் கொடுக்க முடியாது. அவளுடைய கனவை நனவாக்குவதற்கு உறுதுணையாக நின்று ஆதரவு அளிப்பதே உண்மையான அன்பு. அத்தகைய ஆதரவு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதைத்தான் இந்தப் படம் பேசுகிறது என்றார்.
ஒருவர் தன் மீது நம்பிக்கை வைத்திருப்பது மட்டுமின்றி, தன்னைத் தாண்டி இன்னொருவர் தன் திறமை மீதும் கனவுகள் மீதும் நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய பலமாக அமையும். நமக்கென்று பெரிய கனவுகள் இல்லாவிட்டாலும், கனவு காண்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதன் மூலமே வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்க்க முடியும் என்பதே இந்தத் திரைப்படம் சொல்லும் செய்தி என்றும் அவர் குறிப்பிட்டார்.
மொழி, மாநிலம் என்ற எல்லைகளைக் கடந்து, ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் பெண்களின் கனவுகளையும் லட்சியங்களையும் மையப்படுத்தி உருவாகியுள்ள ‘ஆகாயம் ஒரு தாரகை’ திரைப்படம், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படக்குழுவினரின் உணர்வுப்பூர்வமான பேச்சுகளுடன் சென்னையில் நடைபெற்ற இந்தப் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

‘Aagayam Oru Thaaragai’ Made for the Dreams of Daughters, Says Dulquer Salmaan!
“This Is Not Just a Tamil or Telugu Story, but a Story for the Entire Nation!” – Film Team Expresses Confidence at the Pre-Release Event in Chennai
The pre-release event of ‘Aagayam Oru Thaaragai’, featuring an ensemble cast including Dulquer Salmaan, G.V. Prakash Kumar and Shruti Haasan, was held today (November 17) at the Westin Hotel in Chennai. Producer Allu Aravind, actor Dulquer Salmaan, music composer G.V. Prakash Kumar, actress Sathveera Valli, actor Chinni Jayanth, lyricist Balaji Venugopalan and other members of the film’s team attended the event and shared their experiences of making the film, the emotions behind its story and their expectations.
Speaking at the event, actor Dulquer Salmaan said, “‘Aagayam Oru Thaaragai’ is not a film confined to any particular language. It is a story that reflects the lives of ordinary people and could happen in any small town across India. The film has been made out of pure love and passion for cinema, without placing box-office calculations or commercial considerations at the forefront.
“During the shoot, the entire team shared a wonderful bond, just like a family. One of the most memorable experiences was sitting together and having meals. The response to the film’s teaser was extremely encouraging. We received calls and appreciation from audiences, much like the response usually seen for a big-budget commercial entertainer featuring a star-studded cast.
“That is the beauty of cinema – you can never predict its success in advance. What matters is telling our story with genuine involvement and believing that audiences will embrace it.
“Most of the people who worked on this film are fathers of daughters. Allu Aravind sir, G.V. Prakash sir and I all have daughters. Keeping not just our own daughters but also the dreams of women in every family in mind, we have made this film. I request audiences to extend their support to the film,” he said.
Producer Allu Aravind, while sharing his five decades of experience in the film industry, expressed his happiness at introducing G.V. Prakash Kumar as a lead actor in a Tamil film. He praised G.V. Prakash’s natural acting and his ability to immerse himself completely in his characters. He also expressed confidence that the film would bring him significant recognition as an actor.
Recalling a conversation with Dulquer Salmaan, Allu Aravind mentioned that Dulquer had asked him whether the film was centred around the hero or the heroine. Although he had initially described it as a hero-oriented film, Allu Aravind appreciated how Dulquer’s performance had taken the film to another level.
He further revealed that while the team was searching for a fresh face for an important role, they discovered Sathveera Valli, a Tamil girl raised in Chicago, USA, through Instagram. He added that she has now signed two Tamil films and two Telugu films. Describing the film’s storyline, he said it revolves around the dreams of a woman from an ordinary family and the journey she undertakes to make those dreams come true.
Music composer and actor G.V. Prakash Kumar praised Dulquer Salmaan for consistently choosing distinctive stories and compelling scripts. Recalling his earlier experience of working with Dulquer in ‘Lucky Baskhar’, he expressed confidence that ‘Aagayam Oru Thaaragai’ would emerge as a major success and remain a memorable cinematic work for years to come.
He also expressed hope that the film would become another significant milestone in his career, following his recent projects, including ‘Youth’, ‘Vishwanath & Sons’, ‘Irumudi’ and ‘Mandadi’.
Actress Sathveera Valli said that the film had been made with immense emotional commitment and dedication. She expressed confidence that the songs composed by G.V. Prakash would be remembered across generations. She also fondly recalled the affection and support extended to her by senior artistes, including actor Chinni Jayanth.
She said she was delighted to have worked alongside talented performers such as Dulquer Salmaan and Shruti Haasan. She also urged audiences to watch the film in theatres rather than wait for its OTT release.
Actor Chinni Jayanth, in his address, described himself as a huge fan of Dulquer Salmaan and appreciated the actor’s ability to dub for his characters in the different languages in which he acts. Praising Dulquer’s fluency across multiple languages and his ability to bring characters to life through his voice, he described him as a true all-rounder.
Recalling his experience of watching the film’s climax during the dubbing process, Chinni Jayanth said he felt an overwhelming sense of happiness, similar to the joy he experienced when he heard the news that his son had cleared the IAS examination. He also expressed confidence that the film would achieve tremendous success across all languages and win National Awards.
Lyricist Balaji Venugopalan spoke about the central emotion of the film, saying that a husband may provide his wife with money, a car and a house, along with several material comforts, but he cannot create a dream for her. True love lies in standing by her, supporting her ambitions and helping her realise her dreams. The film explores the kind of transformation such support can bring to a woman’s life, he explained.
He further said that while having faith in oneself is important, having someone else believe in one’s abilities and dreams can provide immense strength. Even if we do not have big dreams of our own, supporting those who dare to dream can give greater meaning to life. This, he said, is the important message conveyed by the film.
With its story transcending linguistic and regional boundaries to celebrate the dreams, aspirations and ambitions of women in every family, ‘Aagayam Oru Thaaragai’ has generated considerable anticipation among audiences. The Chennai pre-release event concluded on an emotional and positive note, with the film’s team expressing confidence in the story and its universal appeal.
