Tuesday, November 17
Shadow

தந்தை – மகள் பாசத்தை உணர்வுப்பூர்வமாகப் பேசும் ‘அப்பா குட்டி’ – விஜய் ஆண்டனி!

தந்தை – மகள் பாசத்தை உணர்வுப்பூர்வமாகப் பேசும் ‘அப்பா குட்டி’ – விஜய் ஆண்டனி!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேடையேறிய ஃபாத்திமா விஜய் ஆண்டனி – நெகிழ்ச்சியுடன் நடைபெற்ற முன்வெளியீட்டு விழா!

சென்னை: தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான அன்பு, பாசம், பிரிவு, உணர்வுகள் என குடும்ப உறவுகளின் ஆழத்தைப் பேசும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், மீரா விஜய் ஆண்டனி வழங்கும் இப்படத்தை ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.

விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி கதாநாயகியாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளதுடன் படத்தொகுப்பையும் கவனித்துள்ளார். ராஜீவ் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஊட்டி மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் இசை வெளியீடு மற்றும் முன்வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விஜய் ஆண்டனி, ஃபாத்திமா விஜய் ஆண்டனி, இயக்குநர் மு. மாறன், ப்ரீத்தி அஸ்ராணி உள்ளிட்ட படக்குழுவினருடன் இயக்குநர்கள் சசி, சுசீந்திரன், மோகன் ராஜா, தங்கர் பச்சான், நிதிலன் சாமிநாதன், மந்திரமூர்த்தி, தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

 

இந்த விழா வழக்கமான திரைப்பட விளம்பர நிகழ்ச்சியாக மட்டுமின்றி, குடும்ப உறவுகள், மனிதநேயம், தனிப்பட்ட வாழ்க்கையின் வலிகள், சினிமாவின் சமூகப் பொறுப்பு எனப் பல்வேறு உணர்வுகள் பகிரப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வாக அமைந்தது.

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேடையில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி!

இந்த நிகழ்வின் முக்கியமான தருணமாக அமைந்தது தயாரிப்பாளர் ஃபாத்திமா விஜய் ஆண்டனியின் உரை. ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலக நிகழ்ச்சியில் பங்கேற்பதாகக் குறிப்பிட்ட அவர், வாழ்க்கையில் ஏற்பட்ட இழப்புக்குப் பிறகு மீண்டும் பொதுவெளியில் இயங்குவதற்கு விஜய் ஆண்டனியும் இயக்குநர்கள் சசி, சுசீந்திரன், தனஞ்செயன், தங்கர் பச்சான் உள்ளிட்ட நண்பர்களும் துணையாக இருந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அளித்த ஆதரவையும் அன்பையும் ஒருபோதும் மறக்க முடியாது என்றார். மேலும், தங்களது குடும்பத்தில் மீராவின் நினைவுகள் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், மீரா பயன்படுத்திய பொருட்களையும் அவரது அறையையும் அப்படியே பாதுகாத்து வருவதாகப் பகிர்ந்துகொண்டார்.

விஜய் ஆண்டனி இன்றும் செருப்பு அணியாமல் இருப்பதற்கும், மீரா வாங்கிக் கொடுத்த கடிகாரத்தை மட்டுமே பயன்படுத்துவதற்கும் பின்னால் இருக்கும் தனிப்பட்ட உணர்வுகளை அவர் பகிர்ந்துகொண்டபோது அரங்கமே நெகிழ்ச்சியில் ஆழ்ந்தது.

தமிழில் பெயர் வைப்பது அவசியம் – தங்கர் பச்சான் வலியுறுத்தல்!

இயக்குநர் தங்கர் பச்சான் பேசும்போது, ‘அப்பா குட்டி’ எனத் தமிழில் பெயர் வைத்ததற்காக விஜய் ஆண்டனியைப் பாராட்டினார். தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தமிழ்ப் பெயர்கள் சூட்டப்படுவது அவசியம் என்றும், இதற்குத் திரையுலகத்தினரும் ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்றைய வாழ்க்கையில் மனிதர்கள் உறவுகளுக்குக் கொடுக்க வேண்டிய நேரத்தைக்கூட பணம் சம்பாதிப்பதற்காகச் செலவிடுவதாகக் கவலை தெரிவித்தார். குழந்தைகளின் மகிழ்ச்சியும் இயல்பான வாழ்க்கையும் கைபேசிகளுக்குள் சுருங்கிவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகளின் உலகம், அன்பு, பாசம் போன்றவற்றைப் பேசும் திரைப்படங்கள் இன்றைய சூழலில் மிகவும் அவசியம் என்றார்.

வன்முறை, போதைப்பொருள், மதுப் பழக்கம் போன்றவற்றைக் காட்சிப்படுத்துவதற்குப் பதிலாக மனிதநேயத்தையும் குடும்ப உறவுகளையும் பேசும் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், ‘அப்பா குட்டி’ திரைப்படம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

எதிர்பாராத திருப்பங்களுடன் உணர்வுபூர்வமான கதை – இயக்குநர்கள் பாராட்டு!

இயக்குநர் சசி பேசும்போது, படத்தின் பாடல்கள் கதையோடு மிகவும் இயல்பாகப் பொருந்தியிருப்பதாகக் குறிப்பிட்டார். அப்பா – மகள் உறவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு புதிய அம்சத்தை இயக்குநர் மு. மாறன் கையாண்டிருப்பதே இப்படத்தின் தனித்துவம் என்றார்.

இயக்குநர் மோகன் ராஜா, விஜய் ஆண்டனியின் மனிதநேய உணர்வுகள் இப்படத்தில் சிறப்பாக வெளிப்பட்டிருப்பதாகப் பாராட்டினார். படத்தின் கதை எதிர்பாராத தளங்களுக்குப் பயணிப்பதும், நடிகர்களின் தேர்வும், குறிப்பாக ப்ரீத்தி அஸ்ராணியின் நடிப்பும் சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்தார். நடுத்தர பட்ஜெட் திரைப்படங்களின் வெற்றி திரைத்துறையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர் சுசீந்திரன், படத்தின் இரண்டாம் பாதி தன்னைப் பெரிதும் ஆச்சரியப்படுத்தியதாகக் கூறினார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கதையை மு. மாறன் உணர்வுபூர்வமாகவும் சுவாரசியமாகவும் கையாண்டிருப்பதாகப் பாராட்டினார். குறிப்பாக நீதிமன்றக் காட்சிகள், கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் சிறப்பாக அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

உணர்வுகளைக் கடத்தும் காட்சிகள் – நெகிழ்ந்த திரையுலகப் பிரபலங்கள்!

இயக்குநர் நிதிலன் சாமிநாதன், சிக்கலான உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை இயக்குநர் மு. மாறன் மிகுந்த பக்குவத்துடன் கையாண்டிருப்பதாகப் பாராட்டினார். குழந்தைகளுக்காகச் செய்யப்படும் விஷயங்களில்கூட நேர்மை இருக்க வேண்டும் என்ற கருத்தைத் திரைப்படம் அழகாக வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.

இயக்குநர் மந்திரமூர்த்தி, படத்தின் இறுதிக்காட்சிகள் தன்னை மட்டுமின்றி திரையரங்கில் இருந்த அனைவரையும் உணர்ச்சிவசப்பட வைத்ததாகக் கூறினார். குறிப்பாக நீதிமன்றத்தில் இடம்பெறும் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகப் பாராட்டினார்.

தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், படத்தைப் பார்த்த பெண்கள் கண்கலங்கியதைச் சுட்டிக்காட்டி, இப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொடும் வகையில் உருவாகியிருப்பதாகத் தெரிவித்தார். விஜய் ஆண்டனியின் விடாமுயற்சி, உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகியவற்றையும் பாராட்டினார்.

விஜய் ஆண்டனியின் நட்பையும் மனிதநேயத்தையும் பாராட்டிய திரையுலகம்!

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், கல்லூரிக் காலத்திலிருந்தே விஜய் ஆண்டனியுடன் தனக்கு நட்பு இருப்பதாகவும், ‘கொலைகாரன்’ திரைப்படத்தின் மூலம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான வாய்ப்பை வழங்கியவர் விஜய் ஆண்டனி என்றும் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

அதேபோல், தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, ‘அப்பா குட்டி’ திரைப்படம் விஜய் ஆண்டனியின் மகள் மீதான அன்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார். தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட சிறந்த திரைப்படங்களின் வரிசையில் இப்படமும் இடம்பெறும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

நல்ல திரைப்படங்களுக்கு ஆரம்பத்தில் திரையரங்குகள் குறைவாகக் கிடைத்தாலும், ரசிகர்களின் வரவேற்பைப் பொறுத்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும், இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

‘அப்பா குட்டி’ – நடிகர்களின் அனுபவப் பகிர்வு!

நடிகர் நடராஜன், இப்படத்தில் நீதிபதியாக நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். குழந்தை தனது தந்தையைத் தேடி வந்து ‘அப்பா குட்டி’ என்று அழைக்கும் காட்சியில் நடித்தபோது தன்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வந்ததாகக் குறிப்பிட்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்குத் தந்தை என்பதால் அந்த உணர்வை இயல்பாகவே தன்னால் புரிந்துகொள்ள முடிந்ததாகத் தெரிவித்தார்.

நடிகர் பகவதி பெருமாள், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் தான் நடிக்கும் நான்காவது படம் இது என்றும், படத்தின் பின்னணி இசை மிகவும் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளதாகவும் பாராட்டினார்.

நடிகர் மூணாறு ரமேஷ், இதுவரை காவல்துறை அதிகாரி போன்ற கதாபாத்திரங்களில் பார்த்த தன்னை இயக்குநர் மு. மாறன் இப்படத்தில் வித்தியாசமான பரிமாணத்தில் நடிக்க வைத்துள்ளதாகக் கூறினார்.

நடிகர் முருகானந்தம், படத்தின் இறுதிக்காட்சியைப் பார்த்தபோது தானே கண்கலங்கியதாகவும், விஜய் ஆண்டனியின் நகைச்சுவை உணர்வும் இயல்பான நட்பும் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

நடிகை லிஸ்ஸி ஆண்டனி, விஜய் ஆண்டனியின் வித்தியாசமான கதைத் தேர்வுகளைப் பாராட்டியதுடன், அவர் ஒரு அழகான காதல் கதையிலும் நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

மகளின் பேச்சால் நெகிழ்ந்த விஜய் ஆண்டனி!

விழாவில் விஜய் ஆண்டனியின் மகள் லாரா பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ‘அப்பா குட்டி’ திரைப்படத்திற்காகத் தனது தந்தை இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைத்ததை நேரில் பார்த்ததாகக் குறிப்பிட்ட அவர், தந்தை தனது குழந்தை மீது வைத்திருக்கும் அன்பைப் பேசும் படமாக இது அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள் தங்களது தந்தையின் அன்பையும் உழைப்பையும் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையையும் அவர் பகிர்ந்துகொண்டார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசும்போது, இப்படம் தனிப்பட்ட முறையில் தனக்கு மிகவும் நெருக்கமான உணர்வுகளைக் கொண்ட திரைப்படம் என்றார். குடும்ப உறவுகளையும் உணர்வுகளையும் பேசுவதுடன், சுவாரசியமான திருப்பங்களும் கமர்ஷியல் அம்சங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உலகில் உள்ள அனைத்து மீராக்களுக்கும் இப்படம் சமர்ப்பணம்!

இயக்குநர் மு. மாறன் தனது உரையில், இப்படம் சிறப்பாக உருவாக விஜய் ஆண்டனி மற்றும் ஃபாத்திமா விஜய் ஆண்டனி அளித்த முழுமையான ஒத்துழைப்பே முக்கியக் காரணம் என்றார். படப்பிடிப்பில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியதாகவும் தெரிவித்தார்.

மேலும், விஜய் ஆண்டனியின் எளிமை மற்றும் எந்தச் சூழலுக்கும் தன்னைப் பொருத்திக்கொள்ளும் இயல்பைப் பற்றியும் சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

இறுதியாகப் பேசிய விஜய் ஆண்டனி, இயக்குநர் மு. மாறனின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் பாராட்டினார். கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி சவாலான கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும், இப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் தங்களது தந்தைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு செய்து பேசுவார்கள் என்று நம்புவதாகக் கூறினார். படத்தில் இடம்பெற்றுள்ள ‘அப்பாவைப் போல இங்கே யாரிருக்கா?’ பாடலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்றார்.

தந்தை – மகள் உறவின் ஆழத்தையும், குடும்பத்தின் அன்பையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

‘Appa Kutty’ Celebrates the Emotional Bond Between a Father and Daughter – Vijay Antony!

Fatima Vijay Antony Returns to the Spotlight After Five Years at an Emotional Pre-Release Event!

Chennai: Exploring the beautiful bond between a father and his daughter, along with love, affection, separation and family emotions, ‘Appa Kutty’ is an upcoming family entertainer produced by Vijay Antony Film Corporation and presented by Meera Vijay Antony. Written and directed by M. Maran, who previously helmed films such as ‘Iravukku Aayiram Kangal’, ‘Kannai Nambathey’ and ‘Blackmail’, the film promises an emotionally engaging cinematic experience.

Vijay Antony plays the lead role, while Preethi Asrani stars as the female lead. The film also features Baby Lithanya, Bhagavathi Perumal, Haripriya, Aruvi Madhan, Chitra Lakshmanan and Sreeja Ravi in pivotal roles. Vijay Antony has composed the music and handled the editing, while Rajeev Rajendran is the cinematographer. Shot across Ooty and Chennai, the film is scheduled for a worldwide theatrical release on November 20, 2026.

The audio launch and pre-release event of ‘Appa Kutty’ was held in Chennai with the participation of Vijay Antony, Fatima Vijay Antony, director M. Maran, Preethi Asrani and several prominent personalities from the film industry. Directors Sasi, Suseenthiran, Mohan Raja, Thangar Bachan, Nithilan Saminathan and Mandhiramoorthy, along with producer Dhananjayan, were among those who attended.

Rather than being just another film promotional event, the gathering turned into an emotional occasion where personalities from the industry shared their thoughts on family relationships, humanity, personal struggles and the social responsibility of cinema.

Fatima Vijay Antony Returns to the Stage After Five Years

One of the most emotional moments of the event was producer Fatima Vijay Antony’s address. Returning to a film industry gathering after five years, she expressed her gratitude to Vijay Antony and her close friends, including directors Sasi, Suseenthiran, Dhananjayan and Thangar Bachan, for supporting her through a difficult phase in life.

She also thanked members of the press and media for their continued love and support over the years. Sharing some deeply personal memories of her daughter Meera, Fatima revealed that the family continues to preserve Meera’s belongings and her room as cherished memories.

She also spoke about the emotional reasons behind Vijay Antony’s decision to stop wearing footwear and his choice to wear only a watch gifted to him by Meera. Her heartfelt words moved everyone present at the event.

Tamil Titles for Tamil Films Are Important: Thangar Bachan

Director Thangar Bachan appreciated Vijay Antony for choosing a Tamil title for the film. He emphasised that Tamil films produced in Tamil Nadu should carry Tamil titles and expressed concern over the declining use of Tamil names in the industry.

He also spoke about how modern society is increasingly prioritising money over relationships, leaving people with little time to spend with their loved ones. Children, he observed, are gradually losing their natural world of happiness and becoming increasingly dependent on mobile phones.

He stressed the importance of films that celebrate love, family bonds and humanity, rather than repeatedly glorifying violence, drugs and alcohol. He expressed confidence that ‘Appa Kutty’ would emerge as a successful film.

Directors Praise the Film’s Emotional Storytelling and Unexpected Twists

Director Sasi appreciated the way the songs were integrated into the narrative, adding that they gained greater emotional significance after watching the complete film. He described the unique portrayal of the father-daughter relationship as the film’s biggest strength.

Director Mohan Raja praised Vijay Antony’s performance and the film’s underlying human emotions. He also appreciated the unexpected progression of the story, the casting and Preethi Asrani’s performance. He highlighted the importance of the success of medium-budget films in maintaining a healthy film industry.

Director Suseenthiran said that the second half of the film pleasantly surprised him with its engaging narrative and unexpected twists. He particularly appreciated the courtroom sequences, natural performances and emotional climax.

Emotional Sequences Leave Industry Personalities Moved

Director Nithilan Saminathan appreciated the maturity with which M. Maran had handled a complex story inspired by a real-life incident. He said the film conveyed an important message about maintaining honesty even in matters concerning children.

Director Mandhiramoorthy revealed that the climax had moved not only him but also the audience who watched the film. He particularly praised the courtroom sequences and the emotional impact of the final portions.

Producer Chitra Lakshmanan pointed out that several women in the audience had become emotional while watching the film, reflecting its ability to connect with viewers. He also praised Vijay Antony’s determination, dedication and perseverance.

Industry Personalities Appreciate Vijay Antony’s Friendship and Humanity

Director Andrew Louis recalled his college days with Vijay Antony and thanked him for giving him an important opportunity through the film ‘Kolaiyuthir Kaalam’ (Kolaiyuthir Kaalam is not the film; the correct film is ‘Kolai’?).

He described Vijay Antony as a genuine friend who had played a significant role in his professional journey.

Producer Dhananjayan described ‘Appa Kutty’ as an expression of Vijay Antony’s love for his daughter. He expressed confidence that the film would join the list of memorable Tamil films centred on the father-daughter relationship.

He also observed that even if a good film initially receives a limited number of theatres, positive audience feedback can gradually increase its screen count. He expressed optimism about the film’s box-office prospects.

Cast Members Share Their Experiences

Actor Natarajan, who plays a judge in the film, shared his experience of portraying the character. He recalled becoming emotional during a scene in which a child searches for her father and calls out to him as ‘Appa Kutty’. Being a father of two daughters himself, he said he could deeply connect with the emotions portrayed in the scene.

Actor Bhagavathi Perumal revealed that ‘Appa Kutty’ is his fourth film with Vijay Antony Film Corporation, following ‘Pichaikkaran’, ‘Kolai’ and ‘Nooru Saami’. He particularly praised the film’s emotionally engaging background score.

Actor Munar Ramesh thanked director M. Maran for giving him a different kind of role, moving away from the police officer characters he is usually associated with.

Actor Muruganandham said he was moved to tears while watching the climax and appreciated Vijay Antony’s friendly nature and sense of humour.

Actress Lizzie Antony praised Vijay Antony’s distinctive choice of scripts and expressed her wish to see him in a beautiful romantic film.

Vijay Antony’s Daughter Laura Wins Hearts with Her Speech

One of the special moments of the evening was the speech delivered by Vijay Antony’s daughter Laura.

She revealed that her father had worked tirelessly, day and night, to bring the film to life. She said that ‘Appa Kutty’ beautifully portrays a father’s love for his child and expressed hope that children watching the film would understand and appreciate their fathers’ affection and hard work even more.

Actress Preethi Asrani described the film as a personally meaningful and emotionally relatable experience. She said that apart from its emotional core, the film also offers several engaging and commercial elements. She appreciated director M. Maran for giving every character its own importance in the narrative.

‘Appa Kutty’ Dedicated to All the Meeras in the World

Director M. Maran expressed his gratitude to Vijay Antony and Fatima Vijay Antony for their complete support throughout the making of the film. He appreciated the dedication and cooperation of the entire cast and technical team.

He also shared interesting experiences about Vijay Antony’s simplicity and his ability to adapt effortlessly to different situations.

In his address, Vijay Antony praised director M. Maran for his hard work and commitment. He appreciated Preethi Asrani for delivering a convincing performance in a challenging role and thanked the entire cast and crew for their contribution.

He said that audiences could enjoy the film with their families and expressed his belief that viewers would leave the theatres wanting to call their fathers and speak to them. He also expressed confidence that the song ‘Appavaip Pola Inge Yaar Irukka?’ would make a strong emotional impact on audiences.

With its focus on the unconditional love between a father and daughter, ‘Appa Kutty’ promises to offer an emotional and heartwarming theatrical experience.

‘Appa Kutty’ is all set for a worldwide theatrical release on November 20, 2026.