Thursday, April 25
Shadow

தள்ளாடும் ஹன்சிகா கை கொடுத்த விஷ்னு விஷால்

நடிக்க வந்த புதிதில் ஹன்சிகாவின் நிலைமையே வேறு. விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் கொடிகட்டிப் பறந்தார். அப்போது இளம் நடிகர்களுடன் ஹன்சிகா நடிக்கிறார் என்றாலே ஆச்சரியமாக பார்த்தது திரையுலகம். அப்படிதான் ‘மான் கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஹன்சிகா நடித்தபோது ஆச்சரியமாகப் பார்த்தது. ஆனால் இப்போது நிலைமை அப்படியே தலைக்கீழாக மாறிவிட்டது.
ஹன்சிகாவுக்கு தமிழில் இப்போது ஒரே ஒரு படம் தான் இருக்கிறது. அதுவும் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அதற்கப்புறம் சொல்லும்படி ஒன்றுமே இல்லை… அதனால் சில முன்னணி நடிகர்களுக்கு போன் போட்டு ஹன்சிகா வாய்ப்பு கேட்டு வந்த நிலையில், தற்போது விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க ஹன்சிகாவை அப்ரோச் செய்திருக்கிறார்களாம்.
தற்போது புதுமுக இயக்குநர் முருகானந்தம் இயக்கிவரும் ‘கதாநாயகன்’ படத்தில் நடித்துவருகிறார் விஷ்ணு விஷால். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மீண்டும் முருகானந்தம் இயக்கத்திலே நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விஷ்ணு விஷால்.
இப்படத்தில் நாயகியாக சில முன்னணி நடிகைகளை இயக்குநர் அப்ரோச் செய்து வந்த நிலையில், ஹீரோ விஷ்ணு விஷாலுக்கு ஹன்சிகாவின் நியாபகம் வந்திருக்கிறது. இதை இயக்குநரிடம் தெரிவிக்க, அவரும் ஹன்சிகாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தற்போதைய தகவல்படி, முதலில் யோசித்த ஹன்சிகா தன் நிலைமையை அறிந்து விஷ்ணு விஷாலுக்கு ஓகே சொல்லிவிட்டாராம். அப்புறம் என்ன, மகிழ்ச்சியில் தள்ளாடுகிறார் விஷ்ணு.

Leave a Reply