Monday, October 3
Shadow

தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் திடீர் ராஜினாமா

தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ் திரைப்பட நடிகர் சங்கம் என்று மாற்ற வேண்டும் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்தலுக்கு முன்பு கோரிக்கையாக வைத்திருந்தார். முதல்வர் ஜெயலலிதாவும் கூட இதே கோரிக்கையை தன்னை சந்தித்த நாசர் மற்றும் விஷால் குழுவிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கோரிக்கையை நடிகர் சங்கம் கண்டு கொள்ளவே இல்லை. மேலும், நடிகர் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பை சன் டி.வி.க்கு கொடுத்ததும் ஜெயலலிதாவை கடும் கோபத்தில் ஆழ்த்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கத் துணைத் தலைவர் பதவியிலிருந்து நடிகர் கருணாஸ் விலகி விட்டதாகவும், தனது ராஜினாமா கடிதத்தை சங்க நிர்வாகிகளுக்கு அவர் அனுப்பி வைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வர் ஜெயலலிதா நடிகர் சங்கம் மீது கடும் கோபத்துடன் இருப்பதாலும், நடிகர் சங்க செயல்பாடு குறித்து அதிருப்தி அடைந்ததாலும், கருணாஸ் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறப்படுகிறது.

Leave a Reply