
விஜய் ஆண்டனி இதுவரை 4 படங்களில் நடித்து இருக்கிறார். ‘நான்’படத்தில் இவரது ஜோடி ரூபமஞ்சரி, ‘சலீம்‘ படத்தில் அக்ஷரா பர்தன்ஷா, ‘இந்தியா பாகிஸ்தான்’ படத்தின்ஜோடி சுஷ்மாராஜ். தமிழ் தெலுங்கில் சக்கை போடு போட்ட “பிச்சைக்காரன்” படத்தில் விஜய் ஆண்டனியுடன் ஜோடி சேர்ந்தவர் சாதனாடைடஸ்.
படத்துக்குப்படம் புது நடிகைகளுடன் ஜோடி சேர்வது ஏன் என்று விஜய் ஆண்டனியிடம் கேட்டபோது …
“முன்னணி நடிகைகளின் சம்பளத்துக்கு என் படங்களின் பட்ஜெட் இடம் கொடுக்காது. அது மட்டுமல்ல எப்போதும் நான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க விரும்புவேன். புதுமுகங்கள் நடிக்கும் போது கால்ஷீட் பிரச்சினை இருக்காது. படத்தை குறிப்பிட்ட நேரத்தில் முடித்து விடலாம். நான் கதைகளைத்தான் நம்புகிறேன். கதாநாயகிகளை அல்ல. படத்தின் பட்ஜெட் அனுமதித்து, முன்னணி ஹீரோயின்கள் தான் நடிக்க வேண்டும் என்ற தேவை வரும்போது அவர்களை அணுகுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்கிறார்.