
‘பார்ச்டு’ படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே இருவருக்கும் இடையே படுக்கையறை காட்சிகள் இணையத்தில் வெளியாகின. இக்காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், ஸ்வாட்ச் கடிகாரங்கள் அறிமுக விழாவில் கலந்து கொண்டார் ராதிகா ஆப்தே. அவரிடம் ஒரு பத்திரிகையாளர் ‘பார்ச்டு’ வீடியோ தொடர்பான கேள்வியை எழுப்பினார்.
இதற்கு ராதிகா ஆப்தே “மன்னிக்கவும். உங்களது கேள்வி கேலிக்குரியதாக இருக்கிறது. சர்ச்சைகள் உங்களைப் போன்றவர்களால் தான் உருவாக்கப்படுகிறது. நீங்கள் அந்த வீடியோவைப் பார்த்து, அடுத்தவர்களுடன் பகிர்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் சர்ச்சையை உண்டாக்குகிறீர்கள்.
நான் ஒரு நடிகர். எனது வேலைக்கு தேவை என என்ன செய்யச் சொன்னாலும் நான் செய்வேன். நீங்கள் கூட்டைவிட்டு வெளியே வந்து உலக சினிமாவைப் பாருங்கள். அதை வெற்றிகரமாக அங்கு எப்படி செய்து வருகிறார்கள் என்பதை பாருங்கள். அப்படி பார்த்தீர்கள் என்றால் இந்தக் கேள்வியை எல்லாம் கேட்டிருக்க மாட்டீர்கள்.
நான் எதற்கும் தயங்கவில்லை. தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். உங்களுக்கு நிர்வாண உடம்பை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால் என்னுடைய வீடியோவை பார்ப்பதை விட்டுவிட்டு, உங்களையே கண்ணாடி முன்பு நின்று பார்த்துக் கொள்ளுங்கள். அதற்குப் பிறகு நாம் பேசலாம்” என்று கடுமையாக சாடினார்.