Saturday, March 22
Shadow

முடிஞ்சா இவன புடி திரைவிமர்சனம் (பழய மசாலா )

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ கிச்சா சுதீப் – நித்யா மேனன் ஜோடி நடிக்க, பல பழையபடங்களின் சாயலில் வந்திருக்கும் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் படம் தான் “முடிஞ்சா இவனபுடி”.

கதை

இப்படக் கதைப்படி, கதாநாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் பதுக்கல் கூடாரத்தில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்துவருகிறார். அவ்வாறு சுதீப் செய்யக்காரணம், அப்பாவை இழந்த அவரது இளம் வயது கொடூர வாழ்க்கைதான்… எனும் நிலையில், பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் பங்களாவில்புகுந்து, அவர் பதுக்கிவைத்திருக்கும் கறுப்பு பணத்தையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார். கொள்ளைபோனது கறுப்பு பணம் என்பதால் முகேஷ் திவாரியால் போலீசில் முறையாக புகார் அளிக்கமுடியவில்லை.

இருப்பினும், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி சாய்ரவிமூலமாக அந்த பணத்தை திருடியவனை தேடும் முயற்சியில்ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், போலீசுக்கு ஒருரகசிய சி.டி. ஒன்று கிடைக்கிறது. அதில் சுதீப் திருடிய பணத்தை நண்பர்களுடன் பங்கிட்டுகொள்ளும் காட்சி பதிவாகியிருக்கிறது. அதில் தெரியும் சுதீப்பை பார்க்கும் ஒரு கைதி, சுதீப், ரியல் எஸ்டேட் செய்து வருவதாகவும், மிகவும் நல்லமனிதர் எனவும் கூறுகிறார்.

ஆனாலும், இதையடுத்து, சுதீப்பை கைது செய்யும் போலீசார், அவரை அடித்து உதைத்து விசாரிக்கின்றனர். அப்போது, சுதீப் அந்த வீடியோவில் இருப்பது, தான், இல்லையென்றும், தனது சாயலிலேயே இருக்கும் தனது சகோதரன்… என்றும், தாங்கள், இரட்டை பிறவிகள் என்றும் அதில் தான், ஒரு அப்பாவி என்றும் கூறுகிறார். இதனால்குழப்பமடைகிற போலீஸ் அவரைவிடுதலை செய்கிறது. இந்நிலையில், மற்றொரு தொழிலதிபரான சரத்லோகித்சவாவின் வீட்டிலும் கறுப்பு பணம் கொள்ளை போகிறது.

இதற்கு காரணமும் சுதீப்தான் என்று முறையிட்டும் போலீசார் கண்டுகொள்ளவில்லை. இதனால், கோபமடைந்த முகேஷ்திவாரியும், சரத் லோகித்சவாவும் கொள்ளைபோன தங்களது பணத்தை தாங்களேமீட்டெடுக்க நினைக்கிறார்கள். அதன்படி, சுதீப்பை தூக்க ஸ்கெட்ச் போடுகிறார்கள்.

இறுதியில், அந்த கறுப்பு பணத்தையெல்லாம் சுதீப்பிடம் இருந்து மீட்டார்களா? இல்லையா? உண்மையில் சுதீப் தான் இந்த கொள்ளைகளுக்க கெல்லாம் காரணமா…? என்பதை வித்தியாசமாகவும் விறுவிறுப்பாகவும்
சொல்லியிருக்கிறார்கள்… மீதிக் கதையில்.

விமர்சனம்

கிச்சா சுதீப், சிவனாகவும், சத்யமாகவும் புகுந்து விளையாடியிருக்கிறார். மேலும், சுதீப் படத்தின் கதையை பலமாக தாங்கி நிற்கிறார். அப்பாவித்தனம், அடி தடி என இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ப்ளாட் புரமோட்டரான தன்னிடம் இடம் வாங்க, தன் அண்ணியுடன் வரும் நித்யா மேனனிடம் அடக்கம் ஒடுக்கமாக அன்பு காட்டி காதல் வயப்படுவதில் தொடங்கி, பெரும்புள்ளிகளின் பிளாக்மணியை இருந்த இடத்தில் இருந்தே ஸ்கெட்ச் போட்டு தன் ஆட்களை விட்டு ஸ்டைலாக, கோடி கோடியாக கொள்ளை அடிப்பது வரை… ஒவ்வொரு காட்சியிலும் சரியாக நடித்திருக்கிறார்.

நாயகன் சுதீப். இரண்டு கெட்-அப்களுக்கும் வெவ்வேறு விதமான நடிப்பை வரவழைத்து அசரவைத்திருக்கிறார். ஹீரோவுக்கே உரித்தான மாஸ், ஆக்ஷன், மசாலா, சென்டிமென்ட்… என அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து பலே சொல்லும் அளவிற்கு படு ஸ்டைலிஷாக நடித்துக் கொடுத்திருக்கிறார். பேஷ், பேஷ்!

கதாநாயகிநித்யா மேனன், அழகுபதுமையாகவும் காதலனை நல்வழிப்படுத்தவும் வந்துசெல்கிறார். இருக்கிறது. மற்றபடி, இந்த மலையாள சேச்சியின் நடிப்பில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாது..!

நாசர், பிரகாஷ் ராஜ் ஆகிய இருவரும் தங்களுடைய காட்சிகளில் முத்திரை பதித்துள்ளார்கள். நாசர்போலீஸ் அதிகாரியாகவும் பிரகாஷ்ராஜ் பாசமானதந்தையாகவும் தனித்து நிற்கிறார்கள்.

வில்லன்கள் முகேஷ் திவாரி, சரத் லோகிஸ்டாவா, இருவரும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார்கள். சாய்ரவி, மிரட்டல் காமெடி போலீஸ், அவினாஷ், அச்சுதாராவ், லதா ராவ், சதீஷ், இமான்அண்ணாச்சி, டெல்லி கணேஷ், சிக்கன்னா… என ஏகப்பட்ட பிற நட்சத்திரங்களில் நித்யாவின் அண்ணியாக வரும் லதா ராவ் நச் சென்று இருக்கிறார். சுதீப்பின் நண்பராக வரும் சதீஷ், செய்யும் டைமிங் காமெடி நகைச்சுவைக்கு கைகொடுக்கிறது.

டி சிவக்குமாரின் கதையில் கே.எஸ்.ரவிக்குமாரின் ‘வில்லன்’ படக்கதை உள்ளிட்ட வேறு பழையபடங்களின் சாயலே பெரிதாக தெரிகிறது என்பது பலவீனம்.

டி.இமான் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடாவிட்டாலும், பின்னணி இசை அதிரடி காட்டியிருக்கிறது. ராஜரத்தினத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் குளிர்ச்சி, பிரவின் ஆன்டனியின் படத்தொகுப்பு, பாராட்டும்படியாக இல்லாதது குறை!

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் சென்டிமென்ட், ஆக்ஷன் கலந்து கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கிறார். படத்தில் அவரது பழைய படமான ‘வில்லன்’ படத்தின் சாயலும், ஜென்டில்மேன், நீரும் நெருப்பும்… உள்ளிட்ட படங்களின் சாயல், பெரிதாகதெரிவது பலவீனம்.

மற்றபடி, படத்தில் காமெடி டிராக் என்று எதுவுமே வைக்காமல், ஹீரோவை வைத்தே காமெடி டிராக்கை உருவாக்கி, படத்தை இயக்கியுள்ள விதம் அருமை.

எல்லா பிரச்சினைக்கும் பணம் தான் காரணம்…. என சிறு வயதிலேயே கருதும் சுதீப், பெரியவனானதும், அப்பா கற்றுத் தந்த இரட்டை வேடத்தை தன் நிரந்தரமாக்கிக் கொண்டு, அப்பா இழந்த பணத்தை மீட்கும் காட்சிகள்… உள்ளிட்ட புதுமை களுக்காக “முடிஞ்சா இவன புடி’ படத்தை பார்க்கலாம். ரசிக்கலாம்.
Ranking 5/2.5

Leave a Reply