
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு எனக்கு பேரதிர்ச்சியாக இருக்கின்றது என தமிழகத்தின் சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.அம்மையார் ஜெயலலிதா மறைந்தது பேரதிர்ச்சியாகும். தமிழக மக்களுக்கு முதல்வரை இழந்து வாடும் அதிமுக தோழர்கள், தொண்டர்கள் அனைவருக்கும் எனது சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன்.
தமிழகத்தில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்கு கலைஞர் திரைவசனம் எழுதி அதன் மூலம் கிடைத்த தொகையை முதல்வர் நிவாரண் நிதிக்கு நான் முதல்வர் ஜெயலலிதாவிடம் கொடுத்தபோது என்னையும், தலைவர் கலைஞரையும் அன்புடன் விசாரித்ததை இப்போது நான் நினைவு கூறுகின்றேன். முதல்வர் பதவியேற்பு விழாவில் எனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் எனக்கு சட்டசபையில் இருக்கை ஒதுக்கீட்டில் எனக்கு அவமதிப்பு நடந்ததாக கருதினேன். அதை புரிந்துக்கொண்ட முதல்வர் சில நாடகள் கழித்து சட்டசபையில் எனை சந்தித்தபோது அதுகுறித்து வருத்தம் தெரிவித்தது எனக்கு மறக்க முடியாத ஒன்று.ஒரு பெண்ணாக எதையும் எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் நான் கட்டாயம் எதிர்க்கட்சித் தலைவனாக கலந்துக்கொள்ளவிருக்கின்றேன் என்றார் திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான ஸ்டாலின்.
