
தனுஷ் நடித்து வரும் ‘விஐபி 2’ படத்தில் விக்ரம் பிரபு ஹீரோயின் ஒருவர் இணைந்திருக்கிறார். அதுகுறித்த விவரங்களை கீழே பார்ப்போம்.தனுஷ், அமலாபால், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடிப்பில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி ஹிட்டடித்த படம் ‘வேலையில்லாப் பட்டதாரி’. சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தற்போது இப்படத்தின் 2-வது பாகம் உருவாகி வருகிறது.தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் கதை, வசனம் எழுத ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் ‘சிகரம் தொடு’ பட ஹீரோயின் மோனல் கஜ்ஜார் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகத்தில் இரண்டாவது ஹீரோயினாக சுரபி நடித்து போல, இப்படத்தில் மோனல் கஜ்ஜார் வரும் காட்சிகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
