
ஜல்லிகட்டுக்கை மீட்டெடுப்பதன் மூலம் நம் உரிமைக்காக தமிழக இளைஞர்கள் கடந்த ஐந்து நாட்களாக வீதியில் இறங்கி போராடி வருகிறார்கள். பணக்காரர்கள், ஏழைகள், பிரபலங்கள், குழந்தைகள் என பாகுபாடு இல்லாமல் உலகமே திரும்பிப்பார்க்கும் வகையில் ஒரு அறவழி போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.
இது ஒருபக்கம் இருக்க பீட்டா அமைப்பை சேர்ந்த ராதா ரஞ்சன், இலவச செக்ஸ்க்கு கூடத்தான் இத்தனை பேர் கூடுவார்கள் என்று கொச்சையாக பேசினார். இதை கண்டித்த நடிகர் சதீஷ், ” பீட்டாவுக்கு எதிரா போராடும் எங்களை ஒரு பாட்டிக்கு எதிரா போராட வெக்காத” என தனக்கேயுரிய பாணியில் கலாய்த்துள்ளர்.
ராதா ரஞ்சன் ஒரு பெண் என்றும் பார்க்காமல் வெக்கம் கேட்ட பேச்சை பேசி இருக்கிறார் ஆனாலும் என் இன தமிழ் மக்கள் அமைதி காத்து வருகின்றனர். காரணம் தமிழ் கலாச்சாரம் கெட்டு போய்விடக்கூடாது என்று சத்தியமாக இந்த பெண் நல்ல குடும்பத்தை சார்ந்தவராக இருக்க மாட்டார்.
சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் கொடுத்துள்ள புகார் மனு அளித்துள்ளார்.
அதில் ‘சுப்பிரமணியன் சுவாமி மற்றும் ராதா ராஜன் ஆகியோர் தங்கள் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்கள் மூலம் கடந்து ஒரு வாரமாக தமிழகத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து பதிவு செய்து வருகிறார்கள்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த ஒரு வாரமாக அமைதியான முறையில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் கருத்துப்பதிவு செய்த இருவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகார் மனுவைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி, ராதா ராஜன் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.
