
தமிழ் நாட்டில் கடந்த ஐந்து நாட்களாக தமிழ் உணர்வு எழுச்சி அமைதி போராட்டம் ஜல்லிகட்டுகாக நடந்து கொண்டு இருக்கிறது மத்திய அரசும் சுப்ரீம்கோர்ட் பீட்டா என்ற நிர்வாகத்துக்கு அதரவாக ஜல்லிகட்டை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தடை விதித்தனர் அதை எதிர்த்து இன்று தமிழகமே கொதித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடந்து கொண்டு வருகிறது.
இந்த போராட்டம் சென்னையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன் 5௦௦ பேராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று பத்து லட்சம் பேருக்கு மேல் கொண்ட போராட்டமாக மாறிவருகிறது முதலில் மாணவர்கள் என்று ஆரம்பித்த இந்த போராட்டம் இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் கலந்து கொள்ளும் போராட்டமாக மாறியுள்ளது ஒவ்வொரு தமிழனும் கலந்து கொள்ளும் போராட்டமாக மாறி உள்ளது இன்று உலகே இந்த போராட்த்தை பார்த்து பிரமித்துள்ளது. தமிழன் பெருமை இன்று உலகம் முழுதும் பரவியுள்ளது அதிலும் தமிழனின் கண்ணியம் கட்டுப்பாடு பரவியுள்ளது. உலகிற்கே இன்று தமிழன் எடுத்துகாட்டு ஒழுகத்தில் பெண்ணை மதிப்பதில் உலக பெண்கள் தமிழனை பாராட்டுகிறார்கள் .
இந்த போராட்டத்தில் பல நடிகர்கள் சும்மா வந்து பொய் கொண்டு இருகிறார்கள் அதில் ராகவா லாரன்ஸ் மட்டும் உடல்நிலை சரியில்லை என்றும் பாரமால் இந்த போராட்டத்தில் கலந்து கொள்கிறார் நேற்று இரவு அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் பொய் மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் காலையில் அவர் மீண்டும் போராட்டத்தில் கலந்துகொண்டார் இப்போது மீண்டும் அவர் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர். அப்படியும் அவர் போராட்டத்தை விடவில்லை நான் மீண்டும் நாளை வருவேன் கலந்து கொள்வேன் என்று தேர்வித்துவிட்டு தான் மருத்துவமனை போனார் அது மத்தும் இல்லாமல் இந்த போராட்டத்துக்கு ஒரு கோடி ருபாய் செலவுக்கு கொடுத்துள்ளார் இந்த மனிதரில் புனிதர் .
சினிமாகாரர்கள் வருவதும் போவதுமாக இருகிறார்கள் அதில் குறிப்பாக ஹிப் ஹாப் ஆதி ஆர் ஜே பாலாஜி கார்த்தி சூர்யா மயில்சாமி போன்றோர் வந்து கலந்து கொண்டு சுமார் ஒரு ஒரு மணிநேரம் கலந்து கொண்டு போனார்கள் வேறு எந்த வித உதவியும் செய்யவில்லை வேறு யாருக்கும் தைரியமும் இல்லை என்பது தான் உண்மை தமிழன் ரத்தத்தை உரிந்தவன் தான் சினிமாகாரன் அவன் பணத்தில் தான் வாழுறான் மொத்த சினிமாகாரன் இங்கேயும் விளம்பரம் தேட வந்தார் பார்த்திபன் மாணவர்கள் அவரை விரட்டி விட்டனர். நான் மேலே குறிப்பிட்ட நடிகர்கள் தவிர வேறு யாரும் வரவில்லை நடிகைகளில் சோனா என்ற கவர்ச்சி நடிகை வந்தார் அவர் கவர்ச்சி நடிகை என்றாலும் தமிழ் மீதும் மக்கள் மீதும் பாசம் கொண்டு வந்தார் அதுவே பெருமை இவருக்கு அடுத்து வந்த நடிகை நயன்தாரா தமிழ் நடிகைகள் மானம் கேட்ட பீட்டாவை ஆதரிக்கிறார்கள் அதற்க்கு உலகநாயகன் முதல் உள்ளூர் நாயகன் வரை வக்காலத்து ஆனால் ஒரு மலையாள பெண் தான் தமிழனுக்காக குரல் கொடுத்தல் என்றால் அது நயன்தாரா மட்டும் தான் என்று பெருமையாக சொல்லலாம் அவரை நம் வீட்டு பெண்ணாக இனி நாம் அவரி பாவிக்கவேண்டும் அது மட்டும் இல்லாமல் மெரினாவில் நடக்கும் போராட்டத்தில் அமைதியாக கலந்து கொண்ட பெண் நடிகையும் அவர் தான் ஆண் நடிகர்கள் கலந்து கொள்ள பயபடுகிறார்கள் அத வித அசம்பாவிதமும் நடக்காமலே ஏன் இந்த நடிகர்கள் வரவில்லை என்றால் அவர்கள் எல்லோரும் பீட்டாவிடம் விலை போனவர்கள் எனபது தான் உண்மை .