Thursday, October 29
Shadow

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு வயசு 10

கையளவு இதயம், அதில் கடலளவு சோகம்! இதுதான் விண்ணைத்தாண்டி வருவாயா.

காதலில் விழுந்தவர்களை மட்டுமல்ல, விழாதவர்களை கூட போட்டு தாக்கிவிட்டு போன படமது.

த்ரிஷாவும், சிம்புவும் உரசிக் கொள்ளும்போதெல்லாம் பெரும் நெருப்பில் குளிர்காய்ந்தான் ரசிகன்.

கவுதம் வாசுதேவ மேனனின் இந்த படம் பிக்காசோ ஓவியம் போல எந்த பக்கம் பார்த்தாலும் அழகு!

ஒரு படம் ரிலீஸ் ஆன உடனே முன்னாடி ரசிகர்கள் சேர்ந்து ட்விட்டர்ல ட்ரெண்ட் பண்ணுனதும் இப்போ ட்ராக்கர்ஸ் எனப்படும் கூலியாட்கள் மூலம் இந்தியா ட்ரெண்ட், வேர்ல்ட் ட்ரெண்டு என்ற ரேஞ்சில் அலப்பறை நடக்கும். ஆனா அதெல்லாம் மேக்சிமம் 10-வது நாள் வரைக்கும் கூட கண்டினியூ ஆகாது.

ஆனா இந்த படம் ரிலீஸ் ஆன 2010-ல இருந்து இப்போ வரைக்கும் திடீர், திடீர்-ன்னு தமிழ்நாட்டுலயும் சரி, இந்தியா அளவுலயும் சரி, ஒரு ட்ரெண்டிங் டாக் இருந்துகிட்டே இருக்கு. ஆமாமுங்க இன்னிக்கும் யாராவது பெஸ்ட் லவ் படம் பேர் சொல்லுங்கனு கேட்டா இன்னிக்கும் 10ல 3 பேர் விடிவி சொல்றாங்க.

இத்தனிக்கும் இந்த ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ கதை முதலில் தனுஷுக்குத்தான் சொல்லப்பட்டது. பிறகுதான் சிம்புவுடன் கமிட் ஆகி சூப்பர் ஹிட் ஆனது

இன்னிவரைக்கும் ம் இணையத்திலும், சமூக வலைதளங்களிலும் அதிகமான காதல் ஸ்டேட்டஸ்களில் விடிவி புகைப்படம் தான்.

விண்ணைத்தாண்டி வருவாயா ஃபுல் மூவி ஹச்.டி, விடிவி படக்காட்சிகள். விடிவி பாடல்கள், விடிவி திரிஷா ஆகியவை அதிக ட்ரெண்டிங் வார்த்தைகளில் இடம் பிடித்துள்ளன.

இந்த காதல் காவியம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது தான் இதற்கெல்லாம் காரணம்.

கெளதம் மேனன் இந்த படத்துக்கு பின்னால் பல படங்களை இயக்கினாலும் இது தான் கெளதம் மேனனின் பெஸ்ட் என சொல்லும் படம், சிம்பு, திரிஷா இருவரது கேரியரிலும் இது ஒரு பெஞ்ச் மார்க் படம்.

அப்பேர்பட்ட படம் ரிலீஸாகி இன்னிக்கும் ட்ரெண்டிங்காகி வருது!