Wednesday, October 28
Shadow

ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பை பற்றி தமிழக முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்


கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா என்பது பற்றிய முடிவை தாமதிக்காமல் அறிவிக்க வேண்டும். கொரோனா சமூக பரவலுக்கு உட்பட்டுவிட்டதா என்பது பற்றி தமிழக அரசும் மத்திய அரசும் முரண்பட்ட தகவலை கூறுகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்படுவோரின் வாழ்வாதாரத்துக்கு தேவையானவற்றை உறுதி செய்ய வேண்டும்.

விரைவு பரிசோதனை கருவிகள் இல்லாததால் முழு பாதிப்பு தெரியாமல் மக்கள் அச்சப்படுகின்றன. கொரோனா நோய் பேரிடரில் இருந்து தமிழக மக்கள் மீள்வதற்கு நடவடிக்கை தேவை. ஏழை மக்கள் அன்றாட நடவடிக்கைகளை தொடர ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தனிமனித இடைவெளியுடன், தனித்திருத்தல்மட்டும்தான் மக்களால் செய்ய முடிந்தது. மற்றவை அனைத்தையும் அரசுதான் ஏற்று செய்து தர வேண்டும். அரசுக்கு ஆலோசனைகளை சொல்ல, ஒத்துழைக்க, உதவிகள் வழங்க திமுக தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எம்எல்ஏக்களின் தொகுதி நிதியில் தலா ரூ.1 கோடியை பிடித்தம் செய்வது கண்டிக்கத்தக்கது. எம்எல்ஏக்களின் தார்மீகு உரிமையை தமிழக அரசு பறித்திருப்பது சரியல்ல. அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் கோல்டன் ப்ரீயட்தான், அதை சரியாக பயன்படுத்தியாக வேண்டும். மத்திய அரசிடம் நிதி கேட்டு கடிதம் எழுதுவதோடு மாநில அரசின் கடமை முடியவில்லை. கேட்ட நிதியை பெறுவதற்கு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை தமிழக அரசு முனைய வேண்டும். எம்.பி தொகுதி நிதி ரத்து செய்திருப்பதை தமிழக அரசு கண்டிக்க வேண்டும். திமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்பதை மீண்டும் தெரிவித்து கொள்கிறேன் என்றும் கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.