Wednesday, April 22
Shadow

மீண்டும் ‘2.0’ வெளியீடு தள்ளிப் போகிறதா? – அக்‌ஷய்குமார்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தான் ‘2.0’ படத்தின் இசை வெளியிட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது இது நாம் அறிந்த விஷயம் இந்த சூழ்நிலையில் நடிகர் அக்ஷய்குமார் இந்த படம் ரிலீஸ் தாமதம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார் .

ஆர்.பால்கி இயக்கத்தில் அக்‌ஷய்குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பேடுமேன்’. இதன் படப்பிடிப்பு முடிவுற்று, இதிகட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என படத்தின் போஸ்டருடன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அக்‌ஷய்குமார்.

இத்தகவலால் ‘2.0’ வெளியீடு மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்பது உறுதியாகியிருக்கிறது. தீபாவளி வெளியீட்டிலிருந்து, கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாத காரணத்தால் ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று லைகா நிறுவனம் தெரிவித்தது.

‘2.0’ படத்தில் ரஜினிக்குப் பிறகு மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அக்‌ஷய்குமார். ஒரே தேதியில் அவரது நடிப்பில் 2 படங்கள் வெளியாவது என்பது சாத்தியமில்லை.

முழுக்க 3டி தொழில்நுட்பத்தில் ‘2.0’ உருவாகி வருவதால், கிராபிக்ஸ் பணிகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார்கள். இதனை முழுமையாக முடித்து, கோடை விடுமுறைக்கு வெளியிட்டால், இப்படத்தின் பொருட்செலவுக்கும் சரியாக இருக்கும் என படக்குழு கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், ‘2.0’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறித்து எந்தவொரு தகவலையும் இதுவரை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. மீண்டும் ‘2.0’ வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறித்த தகவலால் ரஜினி ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.

Leave a Reply