Sunday, May 19
Shadow

3:33 திரைவிமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

தன்அம்மா மற்றும் சகோதரியுடன் ஒரு புதிய வீட்டுக்குக் குடிவருகிறார் கதிர் (சாண்டி). குடியேறிய முதல் நாளிலிருந்தே அந்த வீட்டில் ஏதோ ஒரு வித்தியாசமான அதிர்வலை இருப்பதைத் தெரிந்து கொள்கிறார். தொடர்ந்து சில கெட்ட கனவுகளும் அவருக்கு வருகின்றன. அதிகாலை 3:33 மணிக்குப் பிறந்ததால் அவருக்கு அந்த வீட்டில் சரியாக அதிகாலை 3:33 மணிக்கு இவை நடக்கின்றன. மறுநாள் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பி மீண்டும் வேறு மாதிரியான அசம்பாவிதங்கள் நடக்கின்றன. ஆனால், இவை எதுவும் சாண்டியைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லை. இவையே மீண்டும் மீண்டும் நடந்து கொண்டிருக்கின்றன. இவை எதனால் நடக்கின்றன? அப்படியானால், அந்த பயமுறுத்தும் நிகழ்வுகள் கதிரின் கற்பனையா?இதிலிருந்து சாண்டியால் மீள முடிந்ததா என்பதே ‘3:33’ படத்தின் திரைக்கதை.

படம் இது வரை நம்மை ஆட்கொள்ள வைக்கிறது. பின்னர், அந்த இடத்தில் ஏதோ ஒரு தீமை இருப்பதை அது தெளிவாகக் குறிப்பிடுகிறது. கதிர் தனது கனவுகளில் இருந்து எழுந்து இயற்கைக்கு அப்பாற்பட்டதை அனுபவிக்கும் போது இயக்குனர் நம்பிக்கை சந்துரு நமக்கு இரண்டு அமானுஷ்ய தருணங்களை (விளக்குகளையும் நிழல்களையும் திறம்பட பயன்படுத்துகிறார்) கொடுக்கிறார். மேலும், அவர்கள் என்ன எதிர்கொள்கிறார்கள் என்பதை உணர்ந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்களின் நடிப்பு நம்பத்தகுந்ததாக இல்லை. ஒரு பேயோட்டுபவர் (மைம் கோபி) உடன் ஒரு காட்சியில் வந்து போகிறார்.

நடன இயக்குநர் சாண்டிக்கு நாயகனாக முதல் படம். தன்னால் முடிந்த அளவு சிரமப்பட்டு நடிக்க முயன்றுள்ளார். படம் முழுக்க சிரிக்கவே சிரிக்காத சீரியஸான கதாபாத்திரம் என்பதால் அதற்கேற்ப கோபமான காட்சிகளிலும், பயப்படும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். சாண்டியின் அக்காவாக வரும் ரேஷ்மா, தாயாக வரும் ரமா, காதலியாக வரும் ஷ்ருதி செல்வம் ஆகியோர் படத்துக்குத் தேவையான நடிப்பைக் கொடுத்துள்ளனர். படத்தின் இறுதியில் வரும் கௌதம் மேனன் ஒரு ஸ்டைலிஷ் பேயோட்டியாக வந்து தனது வழக்கமான ஆங்கிலம் கலந்த தமிழில் பேசுகிறார்.