
திருப்புமுனையை கொண்டுவந்த படங்கள் துப்பாக்கி, கத்தி. இந்த இரண்டு படங்களையுமே இயக்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ்தான். இந்த கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணையவுள்ளது.
இப்படத்தை கத்தி படத்தை தயாரித்த லைக்கா நிறுவனத்துடன் இணைந்து முருகதாஸும் தயாரிப்பார் எனவும் மேலும் லிங்கா படத்தில் நடித்த பாலிவுட் நாயகி சோனாக்ஷி சின்ஹா இப்படத்தில் ஹீரோயினாகவும் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்வார் எனவும் கூறப்பட்டுள்ளது.
“ஆனால் இவை யாவும் உண்மையில்லை.. அடுத்ததாக விஜய் படத்தை இயக்குகிறேன். இதுமட்டுமே நிஜம். இதுவரை வேறு யாரும் இந்த படத்தில் ஒப்பந்தமாகவில்லை” என முருகதாஸ் தரப்பு கூறியுள்ளது.
