Monday, August 10
Shadow

முப்பரிமாணம் படம் சாந்தனு பாக்யராஜ்க்கு தமிழ் சினிமாவில் முதல் பரிமாணமாக அமையும்

சாந்தனு பாக்கியராஜ் நடிக்கும் புதிய படம் முப்பரிமாணம் இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். மற்றும் ஸ்கந்தஅசோக் ரவிபிரகாஷ் தம்பிராமையாஅப்புக்குட்டி லொள்ளுசபா சாமிநாதன் மற்றும் பலர் நடிப்பில் ராசமதி ஒளிப்பதிவில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் அறிமுக இயக்குனர் அதிரூபன் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தின் இசை மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

இந்த விழாவில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரைலர் திரையிட்டனர். ட்ரைலர் பார்த்தபோது நம்மை கொன்சம் பிரமிக்கவைத்தது என்று தான் சொல்லணும் அந்த அளவுக்கு சிறப்பாக இருந்தது. இது சாந்தனு படமா என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு நன்றாக இருந்து பிறகு தான் தெரிந்தது இந்த படத்தின் இயக்குனர் பாலாவின் மாணவர் என்று காரணம் காட்சிகள் அமைப்பு சாந்தனு நடிப்பில் ஒரு தேர்ச்சி இருந்தது இதுவரை அப்பாவின் பேரை சொல்லிவந்து பொய் இருந்த சாந்தனுக்கு நிச்சயம் இந்த படம் ஒரு பேர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை இயக்குனர் அதிரூபன் மற்றும் ஒளிப்பதிவாளர் ராசமதி இந்த படத்துக்கு மிக பெரிய பலமாக தெரியுது காரணம் நாம் பார்த்த இரண்டு பாடலும் ட்ரைலர் அதுக்கு எடுத்துகாட்டு என்று சொல்லணும்.

Leave a Reply