
‘லோக்கல் டைம்ஸ்’ காமெடி-டிராமா சீரிஸ் மார்ச் 13 முதல் உலகம் முழுவதும்!
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைதளங்களும் ஆன்லைன் செய்திகளும் வேகமாக வளர்ந்தாலும், இன்னும் சில இடங்களில் பழைய செய்தித்தாள்களின் மரபை காப்பாற்ற முயற்சிக்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மாதிரியான ஒரு முயற்சியை சிரிப்புடனும் உணர்ச்சியுடனும் சொல்ல வருகிறது ‘லோக்கல் டைம்ஸ்’.
ஏழு எபிசோடுகள் கொண்ட இந்த தமிழ் காமெடி-டிராமா தொடர் மார்ச் 13 முதல் Amazon Prime Video தளத்தில் இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாக இருக்கிறது.
இந்த தொடரில் ரிஷிகாந்த், அப்தூல் லீ, மௌரிஷ் தாஸ், அத்விதா அறுமுகம், R. பாண்டியராஜன், சின்னி ஜெயந்த், ரினி, நந்திதா ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நவீன் ஜார்ஜ் தாமஸ் இயக்கியுள்ள இந்த தொடரை Fanboy Production நிறுவனத்தின் சார்பில் ஜித்தின் துரை தயாரித்துள்ளார்.
கதையின் மையம்
ஒரு காலத்தில் பெயர் பெற்றிருந்த ‘நம்ம செய்தி’ என்ற பிராந்திய வார இதழ், காலப்போக்கில் சுருங்கிக் கொண்டே போகிறது. அந்த செய்தித்தாளை மீண்டும் உயிர்ப்பிக்க வேண்டும் என்ற கனவுடன் நான்கு நண்பர்கள் — வீரா, அழகு, வள்ளி, முத்து — களமிறங்குகிறார்கள்.
பணம் குறைவு, அனுபவம் குறைவு… ஆனால் நம்பிக்கை மட்டும் அதிகம்.
அவர்களின் முயற்சிகள் பல நேரங்களில் கலகலப்பான குழப்பங்களாக மாறுகின்றன. இதற்கிடையில் அவர்களை வீழ்த்த முயறும் ஒரு வலுவான எதிரியும் கதையில் தோன்றுகிறார்.
நகைச்சுவை, சண்டைகள், உணர்ச்சி தருணங்கள் மற்றும் நண்பர்களின் உறுதியான நட்பு — இவையெல்லாம் சேர்ந்து இந்த தொடரின் பயணத்தை உருவாக்குகின்றன.
“நட்பு தான் கதையின் இதயம்”
இந்த தொடரின் முக்கிய அம்சம் கதை அல்ல, அந்த நான்கு நண்பர்களின் உறவு என்று படக்குழு கூறுகிறது. சாதாரண மனிதர்கள் தங்களுடைய கனவுகளை கைவிடாமல் போராடும் கதையை எளிமையாகவும் நகைச்சுவையுடனும் சொல்ல முயன்றுள்ளோம் என்பதும் அவர்களின் கருத்து.
இயக்குநர் நவீன் ஜார்ஜ் தாமஸுக்கு இது இயக்குநராகும் முதல் முயற்சி. வழக்கமான ஹீரோக்கள் அல்லாத, குறைகளும் பிடிவாதமும் கொண்ட மனிதர்களை மையமாக வைத்து இந்த கதையை உருவாக்கியிருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகளாவிய வெளியீடு
தமிழில் உருவாகியுள்ள இந்த தொடர், ஆங்கில சப் டைட்டில்களுடன் மார்ச் 13 முதல் உலகம் முழுவதும் Amazon Prime Videoவில் வெளியாக உள்ளது.
🎬 சிரிப்பும் உணர்ச்சியும் கலந்த இந்த ‘லோகல்’ கதையை உலக பார்வையாளர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பது மார்ச் 13க்கு பிறகு தெரிய வரும்.

‘Local Times’ Tamil Comedy-Drama Series to Premiere Worldwide from March 13
In today’s fast-paced digital era where social media and online platforms dominate the news landscape, there are still people trying to preserve the legacy of traditional newspapers. ‘Local Times’ is a light-hearted yet emotional series that tells one such story.
This seven-episode Tamil comedy-drama series will premiere on March 13 on Amazon Prime Video, releasing not only in India but also across more than 240 countries and territories worldwide.
The series features Rishikanth, Abdool Lee, Maurish Dass, Adwitha Arumugam, R. Pandiarajan, Chinni Jayanth, Rini, and Nandhitha Sreekumar in important roles. It is directed by Naveen George Thomas and produced by Jithin Thorai under the banner of Fanboy Production.
Story at the Core
At the heart of the story is ‘Namma Seidhi’, a once-respected regional weekly newspaper that is now struggling to survive. Determined to revive it, four friends — Veera, Azhagu, Valli, and Muthu — come together with one shared dream.
They may lack money and experience, but they are driven by strong hope and determination. Their attempts to bring the newspaper back to life often lead to hilarious situations, unexpected problems, emotional conflicts, and the emergence of a powerful rival who wants to shut them down.
The series blends humor, friendship, struggles, and heartfelt moments as the four friends navigate their chaotic journey together.
“Friendship Is the Heart of the Story”
According to the creators, the real driving force of the series is not just the plot but the friendship between these four characters. The story focuses on ordinary people trying to hold on to their dreams despite challenges, told in a simple and entertaining way.
The series also marks the directorial debut of Naveen George Thomas. He has described the characters as imperfect and stubborn individuals who are not typical heroes, but people with flaws who deeply care about each other.
Global Release
The Tamil original series Local Times will stream exclusively on Amazon Prime Video from March 13, with English subtitles, reaching audiences across the globe.
A local story filled with humor, emotions, and friendship is now set to connect with viewers worldwide. 🎬
