
சென்னையில் கலை, ஆன்மிகம் இணையும் மேடை விழா – ‘ராஜாதிராஜ் யாத்ரா’ கிருஷ்ண லீலை நாடகம் வரவுள்ளது
சென்னையில் கலை மற்றும் ஆன்மிகம் இணையும் ஒரு பிரம்மாண்ட மேடை அனுபவமாக ‘ராஜாதிராஜ் யாத்ரா’ என்ற கிருஷ்ண லீலை நாடகம் அரங்கேறவுள்ளது. உலகத் தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த இசைநாடகம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை மற்றும் தெய்வீக பெருமைகளை கலை வடிவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக அமைந்துள்ளது.
நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் நிறுவனம், லாஃபிங் வாட்டர் புரொடக்ஷன்ஸ், ஹோம்பாலே என்டர்டெயின்மென்ட் மற்றும் கலாநேஷன் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை சென்னை நகரில் நடத்துகிறது. திரு. தன்ராஜ் நத்வானியின் கருத்துருவாக்கத்தில் உருவான இந்த நாடகம் ஏற்கனவே பல நகரங்களில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்டு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
அமெரிக்காவின் பிராட்வே மியூசிக்கல்ஸ் நிகழ்ச்சிகளின் தரத்தை ஒத்த வகையில், இசை, நடனம், நவீன விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் பிரம்மாண்ட அரங்கு அமைப்புகளுடன் இந்த மேடைநிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு கண்கவர் காட்சிகளும், காதுகளுக்கு இனிமையான இசையும் இணைந்த ஒரு முழுமையான கலை அனுபவமாக இது அமையும்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள சர் முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கில் மார்ச் 27, 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் இந்த நாடகம் அரங்கேறவுள்ளது.
காட்சி நேரங்கள்:
• மார்ச் 27 – மாலை 7.00 மணி
• மார்ச் 28 – பிற்பகல் 2.00 மணி மற்றும் மாலை 7.00 மணி
• மார்ச் 29 – காலை 11.30 மணி மற்றும் மாலை 4.30 மணி
இந்தி மொழியில் நடைபெறும் இந்த நாடகம், அனைத்து மொழி மற்றும் ஆன்மிக அன்பர்களுக்கும் புரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கோகுலத்தில் குறும்பு குழந்தையாக விளங்கிய கிருஷ்ணர் முதல் ஞானம் நிறைந்த தத்துவஞானி மற்றும் துவாரகையின் மாமன்னர் என அவரது பல்வேறு பரிமாணங்களையும் இந்த மேடைநிகழ்ச்சி காட்சிப்படுத்துகிறது. கருணை, தைரியம் மற்றும் தர்ம போதனைகளால் உலகத்தை வழிநடத்திய கிருஷ்ணரின் வாழ்க்கைச் சுவடுகளை கலை வடிவில் பதிவு செய்யும் ஒரு நினைவாக இந்த நாடகம் அமையும்.
நிகழ்ச்சிக்கான அனுமதி சீட்டுகள் ஆன்லைன் தளமான புக் மை ஷோவில் கிடைக்கின்றன.

Grand Krishna Leela Musical “Rajadhiraj Yatra” Set to Enthrall Chennai Audience
A spectacular stage production celebrating the life and glory of Lord Krishna, “Rajadhiraj Yatra”, is all set to be performed in Chennai. The grand Krishna Leela musical theatre promises a unique blend of spirituality, music, dance and cutting-edge visual effects, offering audiences an unforgettable cultural experience.
The show is being presented by NCPA’s “Noise & Grains” in collaboration with Laughing Water Productions, Hombale Entertainment and Kalanation. Conceptualized by Dhanraj Nathwani, Rajadhiraj Yatra has already received an overwhelming response in several cities and will now be staged in Chennai for the first time.
Designed on the scale of Broadway-style musical theatre, the production features elaborate stage design, live music, choreography and immersive visual storytelling. The show recreates iconic moments from Lord Krishna’s divine life, delivering a world-class theatrical experience for audiences.
The performances will take place at Sir Mutha Venkatasubba Rao Hall, Harrington Road, Chetpet, Chennai, and will run for three days only – March 27, 28 and 29.
Show Timings:
• March 27 – 7:00 PM
• March 28 – 2:00 PM & 7:00 PM
• March 29 – 11:30 AM & 4:30 PM
The Hindi-language stage musical is expected to appeal to spiritual seekers, Krishna devotees and theatre lovers across languages and cultures.
Through powerful storytelling, music and dance, Rajadhiraj Yatra portrays the many facets of Lord Krishna — from the playful child of Gokul, to the enlightened philosopher of the Bhagavad Gita, and the great king of Dwarka. The production highlights Krishna’s compassion, courage and timeless teachings, making it a grand spiritual and cultural spectacle.
Tickets for Rajadhiraj Yatra in Chennai are available on BookMyShow.
