
“நட்சத்திரங்கள் ‘மனிதர்கள்’ ஆகும் மேடை – சன் நெக்ஸ்டின் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ ஏப்ரல் 30 முதல்!”
தமிழ் டிஜிட்டல் பொழுதுபோக்கு உலகில் ஒரு புதிய முயற்சியாக, சன் நெக்ஸ்ட் தனது முதல் பிரத்யேக நட்சத்திர நிகழ்ச்சியான *‘ஜாலி ஓ ஜிம்கானா’*வை ஏப்ரல் 30ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. வழக்கமான பேட்டி நிகழ்ச்சிகளின் கட்டுப்பாடுகளை உடைத்து, நட்சத்திரங்களின் இயல்பான முகத்தைக் காட்டும் ஒரு புத்தம் புதிய களமாக இது அமைகிறது.
இந்நிகழ்ச்சி, ரசிகர்கள் திரையில் பார்த்து ரசித்த பிரபலங்களை, அவர்களின் உண்மையான தனிப்பட்ட குணங்களோடு நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை வழங்குகிறது. முன் தயாரிப்புகள், scripted உரையாடல்கள் போன்றவற்றை தவிர்த்து, தன்னிச்சையான நகைச்சுவை, விளையாட்டுகள் மற்றும் சுவாரஸ்யமான செயல்பாடுகள் மூலம் நட்சத்திரங்கள் தங்கள் இயல்பான முகத்தை வெளிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடி கலைஞர் ஜெகன் கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி, சிரிப்பும் சுறுசுறுப்பும் நிறைந்த ஒரு நட்பு சூழலை உருவாக்குகிறது. அவருடன் ‘ஆபிஸ் கானா’ இசைக் குழுவின் இசை இணைந்து நிகழ்ச்சிக்கு ஒரு தனித்துவமான துடிப்பை வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் தேவி ஸ்ரீ பிரசாத், ஐஸ்வர்யா ராஜேஷ், துருவ் விக்ரம், ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, ஹரிஷ் கல்யாண், மகத் ராகவேந்திரா, வைபவ், அஸ்வின் கக்குமனு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரபலங்களும், டிஜிட்டல் உலகின் பிரபலங்களான கோபி–சுதாகர் ஆகியோரும் கலந்துகொள்கிறார்கள்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ரவி மோகன், ரசிகர்களுடன் நடந்த விளையாட்டின் மூலம், அவர்கள் தன்னைப் பற்றிய அறிவு எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதை உணர்ந்ததாக தெரிவித்தார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இதுவரை வெளிப்படாத தனது தனிப்பட்ட பரிமாணங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொணர்ந்ததாக பகிர்ந்துகொண்டார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத், “இங்கே நான் ஒரு இசையமைப்பாளர் அல்ல… சிரித்து மகிழ்ந்த ஒரு சாதாரண மனிதன்” என தனது அனுபவத்தை சுருக்கமாக விவரித்தார்.
‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சி, நீண்டகாலமாக சன் டிவி நிகழ்ச்சிகளை ரசித்து வந்த குடும்ப பார்வையாளர்களுக்கும், புதிய தலைமுறை டிஜிட்டல் பார்வையாளர்களுக்கும் சமமாக கவர்ச்சியாக அமையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி மட்டுமல்ல… நட்சத்திரங்களின் மறுபக்கத்தை அறிய ஒரு நெருக்கமான அனுபவமாகும்.
சன் நெக்ஸ்ட் தளத்தில் ஏற்கனவே பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொடர்கள் மற்றும் நேரலை சேனல்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த புதிய முயற்சி அதன் உள்ளடக்க தரத்தையும், புதுமையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
‘ஜாலி ஓ ஜிம்கானா’ – ஏப்ரல் 30 முதல், சன் நெக்ஸ்டில்.

“Where Stars Become Real – Sun NXT’s ‘Jolly Oh Gymkhana’ Premieres April 30!”
In a fresh addition to the Tamil digital entertainment space, Sun NXT is set to launch its first exclusive celebrity show, ‘Jolly Oh Gymkhana’, on April 30. Breaking away from the usual format of interview-based programs, this show promises to present celebrities in their most natural and unfiltered avatars.
Unlike conventional talk shows, Jolly Oh Gymkhana creates a relaxed and spontaneous environment where stars drop their guarded personas and reveal their true selves. With no scripted conversations or pre-planned responses, the show blends fun games, engaging activities, and witty banter to bring out genuine moments from its guests.
Hosted by popular stand-up comedian , the show thrives on humor and lively interactions. Adding to its vibrant tone is the energetic presence of the Office Gaana music band, which enhances the overall entertainment quotient.
The show features an exciting lineup of celebrities including , , , , , , , , , and , along with popular digital creators Gopi and Sudhakar.
Sharing his experience, mentioned that a game with fans made him realize how deeply they understand him, leaving him both humbled and amused. noted that the show revealed a side of her personality that audiences had never seen before. Meanwhile, summed it up by saying, “I wasn’t a music composer here… I was just a happy person.”
Designed to appeal to both long-time television audiences and the younger digital generation, Jolly Oh Gymkhana offers a refreshing, intimate, and entertaining experience. It is not just a show—it’s a window into the real lives behind the stardom.
With a vast library of films, TV shows, and live channels across multiple languages, Sun NXT continues to expand its content offerings. This new show marks a significant step forward in delivering innovative and high-quality entertainment.
‘Jolly Oh Gymkhana’ streams from April 30, exclusively on Sun NXT.
