Friday, May 1
Shadow

தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹீரோ அலை – ‘சூப்பர் பி மேன்’ முதல் பார்வை கவனம் ஈர்ப்பு!

தமிழ் சினிமாவில் புதிய சூப்பர் ஹீரோ அலை – ‘சூப்பர் பி மேன்’ முதல் பார்வை கவனம் ஈர்ப்பு!

சென்னை, மே 1, 2026:

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ கதைகள் மீண்டும் ஒரு புதிய பரிமாணத்துடன் வரவிருக்கும் நிலையில், அந்த வரிசையில் தனித்துவமான முயற்சியாக உருவாகி வரும் திரைப்படம் ‘சூப்பர் பி மேன்’. வழக்கமான காமர்ஷியல் படங்களிலிருந்து விலகி, ஃபேண்டஸி மற்றும் சர்வைவல் திரில்லர் அம்சங்களை இணைக்கும் இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை தரும் நோக்கத்துடன் உருவாகி வருகிறது.

புதுமையான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து கவனம் ஈர்த்துவரும் பேம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ், தனது இரண்டாவது தயாரிப்பாக ‘சூப்பர் பி மேன்’ படத்தை உருவாக்கியுள்ளது. இதற்கு முன் அவர்கள் தயாரித்த ‘3.33’ படம் சஸ்பென்ஸ் மற்றும் சைக்கலாஜிக்கல் அம்சங்களால் பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்போது அவர்கள் சூப்பர் ஹீரோ உலகிற்குள் தைரியமான முயற்சியுடன் கால் பதித்துள்ளனர்.

இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில், ‘3.33’ படத்தின் இயக்குநரான நம்பிக்கை சந்துரு, கதாநாயகனாக நடித்துள்ளார். சாதாரண மனிதனாக தொடங்கும் அவரது பயணம், சூப்பர் ஹீரோவாக மாறும் திருப்பமாக மாறுவது இப்படத்தின் முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.

படத்தின் முதல் பார்வை வெளியீடு சமீபத்தில் வெளியாகி, ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது. காட்சிகளில் ஃபேண்டஸி உலகமும், உயிர் பிழைப்பை மையமாகக் கொண்ட திரில்லர் கூறுகளும் இணைந்து காணப்படுவதால், இது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்திற்கு தொழில்நுட்ப ரீதியாக வலுவான குழு இணைந்துள்ளது. ஒளிப்பதிவை சதீஷ் மனோகரன் மேற்கொள்வதுடன், இசையமைப்பை ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் கவனிக்கிறார். எடிட்டிங் பணிகளை தீபக் எஸ் மேற்கொள்கிறார். சண்டைக் காட்சிகளை சுகன் அமைக்கிறார். காஸ்ட்யூம் வடிவமைப்பை மெல்வி ஜே மேற்கொள்கிறார். ஒலி வடிவமைப்பை சச்சின் சுதாகரன் கவனிக்கிறார்.

இப்படம் குறித்து இயக்குநர் டி. ஜீவிதா கிஷோர் கூறுகையில், “நிஜத்தன்மையும், ஃபேண்டஸியும் இணையும் ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். புதிய கதைக்களம், புதிய முகங்கள் மற்றும் தொழில்நுட்ப தரம் ஆகியவை இணைந்து, தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு அனுபவத்தை உருவாக்க முயற்சித்து வருகிறோம்,” என்றார்.

புதிய தலைமுறை பார்வையாளர்களை குறிவைத்து உருவாகி வரும் ‘சூப்பர் பி மேன்’, தமிழ் சினிமாவில் சூப்பர் ஹீரோ ஜானருக்கு ஒரு புதிய திசையை அமைக்குமா என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பார்வை வெளியீட்டுடன் இந்த படத்தின் பயணம் விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.

A New Wave of Superhero Cinema in Tamil – ‘Super B Man’ First Look Grabs Attention!

Chennai, May 1, 2026:

As superhero films begin to carve a stronger space in Tamil cinema, ‘Super B Man’ emerges as a distinctive new entrant, promising a fresh cinematic experience. Blending fantasy elements with a survival thriller narrative, the film aims to move away from routine commercial formats and offer audiences something unique on the big screen.

Produced by Bamboo Trees Productions, known for backing innovative storytelling, ‘Super B Man’ marks the company’s second venture. Their debut production ‘3.33’ received attention for its supernatural and psychological themes. With this new project, the banner takes a bold leap into the superhero genre.

Directed by T. Jeevitha Kishore, the film features ‘3.33’ director Nambikkai Chandru in the lead role. His character reportedly undergoes a compelling transformation from an ordinary man into a superhero, which is expected to be one of the film’s key highlights.

The recently released first look has already sparked curiosity among audiences. The visuals hint at a gripping mix of a fantasy world and intense survival elements, suggesting a fresh and immersive cinematic experience.

The film boasts a strong technical team. Cinematography is handled by Satheesh Manoharan, while music is composed by Harshavardhan Rameshwar. Editing is by Deepak S, action choreography by Sugan, costume design by Melvy J, and sound design by National Award-winning technician Sachin Sudhakaran.

Speaking about the film, director T. Jeevitha Kishore said, “Our aim is to create a world that blends realism with fantasy. With a new storyline, fresh faces, and strong technical support, we are working towards delivering an experience that Tamil cinema hasn’t seen before.”

Targeting new-age audiences, ‘Super B Man’ is expected to bring a fresh direction to the superhero genre in Tamil cinema. With its intriguing first look now out, the film’s journey has begun on an exciting note.