
“வின்டேஜை விட்டு ஸ்டைலிஷ் மாஸ் அவதாரத்தில் துல்கர் சல்மான்!” — ஆகஸ்ட் 2026-ல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘ஐ அம் கேம்’
மலையாள சினிமாவில் தற்போது அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது துல்கர் சல்மான் நடிக்கும் “ஐ அம் கேம்”. தென்னிந்தியாவின் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டுள்ள இந்த ஆக்ஷன் திரில்லர், தற்போது இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் வேகமாக நடைபெற்று வருகிறது.
தனது திரைப்பயணத்தில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத அளவிற்கு முழுமையான ஸ்டைலிஷ் மாஸ் ஹீரோ அவதாரத்தில் இந்த படத்தில் தோன்ற உள்ளதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். சமீப காலங்களில் வின்டேஜ் மற்றும் மென்மையான தோற்றங்களில் ரசிகர்களை கவர்ந்த அவர், “ஐ அம் கேம்” மூலம் முற்றிலும் புதிய பரிமாணத்தில் திரையில் களமிறங்குகிறார்.
“RDX” வெற்றிக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் அடுத்த படைப்பாக உருவாகும் இந்த திரைப்படம், துல்கரின் 40வது படமாகவும் சிறப்பு பெறுகிறது. கதாபாத்திரத்தின் உடை, அணுகுமுறை, ஆக்ஷன் வடிவமைப்பு, காட்சியமைப்பு என அனைத்திலும் ஒரு சர்வதேச ஸ்டைல் மெருகை கொண்டு வர வேண்டும் என்பதே இயக்குநரின் முக்கிய நோக்கமாக இருந்ததாக கூறப்படுகிறது.
Wayfarer Films நிறுவனத்தின் தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படம், “லோகா” வெற்றிக்குப் பிறகு அந்நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரிய முயற்சியாக பார்க்கப்படுகிறது. ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
பெரும் நட்சத்திர அணிவகுப்புடன் உருவாகும் இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைக்க, அதிரடி காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு அறிவிப்பும் ரசிகர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய திரைப்படமாக “ஐ அம் கேம்” 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தொழில்நுட்ப குழு:
லைன் தயாரிப்பாளர் – பிபின் பெரும்பில்லி
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பிஜாய்
எடிட்டிங் – சமன் சாக்கோ
தயாரிப்பு வடிவமைப்பு – அஜயன் சாலிசேரி
மேக்கப் – ரோனெக்ஸ் சேவியர்
உடை வடிவமைப்பு – மஷார் ஹம்சா
VFX – தௌஃபீக் (Eggwhite)
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸ் – கண்ணன் கணபதி
போஸ்டர் வடிவமைப்பு – டென் பாயிண்ட்
மார்க்கெட்டிங் தலைவர் – விஜீத் விஸ்வநாதன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

“Dulquer Salmaan Breaks Away from Vintage Charm; Steps into a Stylish Mass Avatar with ‘I Am Game’” — Worldwide Release in August 2026
One of the most anticipated pan-Indian Malayalam films currently in the spotlight is I Am Game, starring Dulquer Salmaan. Shot across more than 100 locations in South India on a grand scale, the action thriller is now progressing rapidly through its final stages of post-production.
Dulquer Salmaan has revealed that I Am Game will showcase him in the most stylish mass-action avatar of his career so far. Having recently impressed audiences with vintage-inspired and soft-character roles, the actor is now set to present himself in an entirely new and refreshing dimension through this film.
Directed by Nahas Hidayath after the blockbuster success of RDX, the film also marks Dulquer Salmaan’s milestone 40th project. According to sources close to the production, the director’s vision was to create a globally appealing stylish action world, reflected through the character design, costumes, action staging, and visual treatment.
Produced by Dulquer Salmaan and Jom Varghese under the banner of Wayfarer Films, I Am Game is being viewed as the company’s next major venture following the massive success of Lokah. The screenplay has been written by Shahabas Rasheed and Adarsh Sukumaran.
The film features a powerful ensemble cast including Antony Varghese, Mysskin, Kayadu Lohar, Kathir, Parth Tiwari, and Samyuktha Viswanathan in pivotal roles. Music is composed by Jakes Bejoy, while the high-octane action sequences are choreographed by renowned stunt masters Anbariv.
The first-look and second-look posters released earlier had already created significant buzz across social media platforms, and the latest release announcement has further amplified audience excitement. I Am Game is slated for a worldwide theatrical release in August 2026 as a pan-Indian film in Malayalam, Tamil, Telugu, Hindi, and Kannada languages.
Technical Crew:
Line Producer – Bibin Perumbilly
Cinematography – Jimshi Khalid
Music – Jakes Bejoy
Editing – Chaman Chacko
Production Design – Ajayan Chalissery
Makeup – Ronex Xavier
Costume Design – Mashar Hamsa
VFX – Thoufeeq (Eggwhite)
Sound Design – Sync Cinema
Sound Mix – Kannan Ganapathy
Poster Design – Ten Point
Marketing Head – Vijeeth Viswanathan
PRO – Yuvraaj
