Thursday, May 14
Shadow

“அங்கீகாரத்திற்காக ஓடும் வீரனின் போராட்டம்” – கவனம் கவரும் ‘அங்கீகாரம்’ டிரெய்லர்!

“அங்கீகாரத்திற்காக ஓடும் வீரனின் போராட்டம்” – கவனம் கவரும் ‘அங்கீகாரம்’ டிரெய்லர்!

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையில் பதக்கங்கள் மட்டும் இல்லை… அவமானங்கள், நிராகரிப்புகள், அங்கீகாரம் கிடைக்காத வேதனைகளும் உள்ளன என்பதை உணர்ச்சிப்பூர்வமாக பதிவு செய்ய வருகிறது ‘அங்கீகாரம்’ திரைப்படம். தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து பாராட்டுகளை குவித்து வருகிறது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை, இயக்குனர் அவர்களிடம் துணை இயக்குனராக பணியாற்றிய தென்பாதியான் இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக புதிய முகமான K.J.R அறிமுகமாகிறார்.

தடகள விளையாட்டை மையமாக கொண்டு பல உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள இப்படம், விளையாட்டு வீரர்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் மற்றும் அதிகார அமைப்புகளின் அலட்சியத்தை தைரியமாக பேசுகிறது. குறிப்பாக “தனக்கான அங்கீகாரத்தை பெற ஒரு வீரன் நீதிமன்றம் வரை போராட வேண்டிய நிலை” என்ற மையக்கரு, டிரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் வலிமையாக வெளிப்படுகிறது.

வெளியான டிரெய்லரில் கோர்ட் காட்சிகள், உணர்ச்சிமிக்க வசனங்கள், போராட்ட மனநிலையை பிரதிபலிக்கும் காட்சியமைப்புகள் ஆகியவை ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அதிலும், 75 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமான கோர்ட் வளாக செட் அமைத்து படமாக்கப்பட்டிருப்பது படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

K.J.R உடன் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ஆண்டனி, , , மோகன்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் இசையில் டிரெய்லர் மேலும் தீவிரமான உணர்வை ஏற்படுத்துகிறது. ஒளிப்பதிவை A.விஸ்வநாத் கவனித்துள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். தினேஷ்குமார் படத்தொகுப்பு, ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகிய தொழில்நுட்பக் குழுவினரின் பங்களிப்பும் படத்திற்கு வலுசேர்த்துள்ளது.

பிரசாந்த், அஜித்பாஸ்கர், அருண்முருகன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் ரசிகர்களிடையே “இது ஒரு சாதாரண ஸ்போர்ட்ஸ் படம் அல்ல… உண்மைக்கான குரல்” என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

டிரெய்லர் லிங்க்

 

“A Runner’s Fight for Recognition” – ‘Angikaram’ Trailer Wins Widespread Praise!

Medals are not the only thing athletes earn in life — they also endure humiliation, rejection, and the pain of being overlooked. Bringing this emotional reality to the screen is Angikaram, whose newly released trailer has now started receiving strong appreciation from both audiences and film circles across social media.

Produced by Swasthik Visions, the film is directed by Thenpathiyan, a former associate director of acclaimed filmmaker . The movie marks the acting debut of K.J.R as the lead protagonist.

Based on several real-life incidents and set against the backdrop of athletics, Angikaram highlights the struggles faced by sports personalities and boldly addresses the negligence and injustice within the sports system. The core idea of “an athlete being forced to fight in court for the recognition he deserves” stands out powerfully throughout the trailer.

The emotionally charged courtroom sequences, impactful dialogues, and intense visuals showcased in the trailer have significantly raised expectations for the film. Adding to the scale, the makers reportedly constructed a massive courtroom set worth ₹75 lakhs exclusively for the film’s shoot, reflecting the team’s commitment to authenticity.

Alongside K.J.R, the film features performances by Viji Venkatesh, Ajith Goshi, Sindhoori Viswanath, Antony, , , Mohanram, and several others in pivotal roles.

The music composed by adds emotional intensity to the trailer, while cinematography is handled by A. Viswanath. Renowned stunt choreographer has designed the action sequences. Editing by Dineshkumar, art direction by Ramu Thangaraj, sound design by Sampath Azhwar, and choreography by Sheriff further strengthen the film technically.

Produced jointly by Prashanth, Ajith Bhaskar, and Arun Murugan under the Swasthik Visions banner, Angikaram is expected to announce its official release date soon. With its hard-hitting theme and emotionally driven storytelling, the trailer has already created the impression that this is not just another sports drama, but a powerful voice for justice and recognition.

Trailer Link: