Thursday, May 14
Shadow

“ஒரு பாடல்… ஒரு படத்தின் தாக்கம்!” — ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீட்டில் குவிந்த பாராட்டுகள்

“ஒரு பாடல்… ஒரு படத்தின் தாக்கம்!” — ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஆல்பம் வெளியீட்டில் குவிந்த பாராட்டுகள்

திரைத்துறையில் புதிய முயற்சிகள் தொடர்ந்து கவனம் பெற்று வரும் நிலையில், ஒரு முழுநீள திரைப்படத்தின் தரத்தையும் உணர்வையும் வெறும் ஒரு பாடல் ஆல்பத்தின் மூலம் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாக உருவாகியுள்ளது ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ இசை ஆல்பம்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராஜா பத்மநாபன் இயக்கத்தில், பலராம் ஜெ. பாலாஜி நடித்துள்ள இந்த ஆல்பத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் மற்றும் ஐக்கி பெர்ரி குரல் கொடுத்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு விழா, ஒரு சாதாரண ஆடியோ லாஞ்ச் நிகழ்வாக இல்லாமல், புதிய தலைமுறை சினிமா உருவாக்கம் குறித்த கலந்துரையாடலாக மாறியது.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சரண், “இது ஒரு பாடல் மாதிரி தெரியவில்லை; ஒரு முழு திரைப்படத்தின் டிரெய்லர் பார்த்த உணர்வு கிடைத்தது. இந்த கதையை இரண்டு மணி நேர திரைப்படமாக எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்வியே எனக்கு முதலில் தோன்றியது,” என்று பாராட்டினார். மேலும், ஒரு பாடலை மக்கள் மனதில் பதியச் செய்வதில் நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டரின் பங்களிப்பு மிகப்பெரியது என்றும் குறிப்பிட்டார்.

இயக்குநர் பேரரசு, கதாநாயகன் பலராம் ஜெ. பாலாஜியின் திரைநடிப்பு திறமையை பாராட்டியதுடன், “ஒரு ஹீரோவாக உருவாக வேண்டிய அனைத்து அம்சங்களும் அவரிடம் இருக்கின்றன” என்றார். அதேசமயம் தமிழ் திரைத்துறையின் தற்போதைய சூழ்நிலைகள், அரசின் ஆதரவு, விருதுகள் வழங்கும் முறை போன்ற பல்வேறு விஷயங்களையும் உரையாடலுக்குள் கொண்டு வந்தார்.

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், “ஒரு பாடல் பார்த்து முழு படத்தின் உணர்வை பெற முடிந்தால், அது அந்தக் குழுவின் வெற்றி” என்று கூறி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இயக்குநர் எழில், “ஒரு புதிய ஹீரோவையும், புதிய படைப்பாளிகளையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல ஆல்பம் என்பது புத்திசாலித்தனமான முயற்சி” எனக் குறிப்பிட்டார்.

நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர், “பாடல் மிகுந்த உழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் பார்த்து ஆதரிக்க வேண்டும்” என்றார்.

இசையமைப்பாளர் அஸ்வமித்ரா, “இசையும், காட்சிகளும் எதிர்பார்த்ததை விட சிறப்பாக வந்திருக்கிறது” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

இயக்குநர் ராஜா பத்மநாபன், “இந்த ஆல்பம் கடந்த ஆண்டு டிசம்பரிலேயே படமாக்கப்பட்டது. ஆனால் இன்றைய சமூக சூழலுக்கும் மிகவும் பொருத்தமாக இருக்கிறது. இது மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றார்.

இந்த நிகழ்ச்சியின் மையமாக இருந்த நடிகர் பலராம் ஜெ. பாலாஜி, தனது வாழ்க்கைப் பயணத்தை மிகவும் உணர்ச்சிபூர்வமாக பகிர்ந்துகொண்டார். குடும்ப பொறுப்புகளால் சினிமா கனவு சில ஆண்டுகள் தள்ளிப் போனாலும், அதை விடாமல் பிடித்து நிற்க உதவியது நண்பர்களின் ஊக்கம்தான் என்றார். “நேராக ஹீரோவாக வருவதற்குப் பதிலாக, முதலில் என்னை மக்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த ஆல்பம் உருவானது” என்று அவர் கூறியது கவனம் பெற்றது.

மொத்தத்தில், ‘சைலண்ட் இன்ஃபுளூயன்சர்’ ஒரு பாடல் வெளியீட்டு விழாவைத் தாண்டி, புதிய தலைமுறை படைப்பாளிகள் எப்படி தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள் என்பதை வெளிப்படுத்திய ஒரு சிறப்பு நிகழ்வாக அமைந்தது.

“One Song… The Impact of a Full-Length Film!” — ‘Silent Influencer’ Album Launch Receives Widespread Praise

At a time when innovative cinematic experiments are gaining attention in the industry, the ‘Silent Influencer’ music album has emerged as a striking example of how a single song can carry the emotional weight and visual richness of an entire feature film.

Produced by Sri Venkateswara Creations, directed by Raja Padmanaban, and featuring Balaram J. Balaji in the lead, the album includes vocals by G. V. Prakash Kumar and Iykki Berry. The recently held press meet for the album turned out to be much more than a routine promotional event, evolving into a lively conversation about new-age filmmaking and emerging talent in Tamil cinema.

Director praised the project, saying, “This doesn’t feel like just a song. It gives the experience of watching a trailer for a complete feature film. My immediate question to the director was — when are you making the full movie?” He also highlighted choreographer for his ability to make songs visually memorable and commercially impactful.

Director appreciated lead actor , stating that he possesses all the qualities needed to succeed as a hero. He also spoke about the current challenges faced by the Tamil film industry and the importance of stronger support systems for cinema.

Veteran filmmaker remarked that the team had successfully delivered the satisfaction of experiencing an entire film through a single track. Director described the album format as a smart and effective way to introduce fresh actors and filmmakers to audiences before launching a full-length movie.

Choreographer shared that the song was created with immense effort and passion, while music composer expressed happiness over the way the visuals and music had come together.

Director revealed that the album had actually been shot in December last year, but interestingly, its theme feels even more relevant in today’s social climate. “Our biggest hope is that this reaches the people and connects with them,” he said.

The emotional highlight of the event came from actor , who opened up about his personal journey. He shared how family responsibilities forced him to step away from his cinema dreams for a few years following the unexpected demise of his father. However, encouragement from friends motivated him to pursue his passion once again. “Instead of directly launching myself as a hero, I wanted to first create an identity among the audience. That thought led to the creation of Silent Influencer,” he explained.

Overall, the ‘Silent Influencer’ press meet stood out not merely as a music launch event, but as a celebration of fresh creative ambition, teamwork, and the evolving ways in which new-generation filmmakers are introducing themselves to audiences.