Tuesday, May 19
Shadow

“விளையாட்டா…? உயிர் போராட்டமா…? – ராம் சரணின் ‘பெத்தி’ டிரெய்லர் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது!”

“விளையாட்டா…? உயிர் போராட்டமா…? – ராம் சரணின் ‘பெத்தி’ டிரெய்லர் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்தது!”

மெகா பவர் ஸ்டார் நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” தற்போது இந்திய சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமத்து பின்னணியில் விளையாட்டு, அதிகாரம், மனித உணர்வுகள் மற்றும் உயிர் பிழைப்பின் போராட்டத்தை இணைத்து உருவாகியுள்ள இப்படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர், மும்பையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

இயக்குநர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், சாதாரண ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இல்லாமல், “வாழ்க்கையே ஒரு விளையாட்டு மைதானம்” என்ற உணர்வை மையமாக கொண்டு நகர்கிறது. டிரெய்லர் தொடங்கும் முதல் நொடியிலிருந்தே மண் வாசனை கலந்த கிராமத்து உலகம், கடின உழைப்பு, போட்டி மனப்பான்மை மற்றும் மனித உறவுகளின் ஆழம் ஆகியவை பார்வையாளர்களை கதைக்குள் இழுத்துச் செல்கின்றன.

ஹீரோவின் மாஸ் அறிமுகத்தைக் காட்டிலும், கதையின் உலகத்தையே முதலில் அறிமுகப்படுத்தும் விதமாக டிரெய்லர் அமைந்துள்ளது. “பெத்தி” என்ற கதாபாத்திரம் கிரிக்கெட், மல்யுத்தம், ஓட்டப்பந்தயம் என பல்வேறு விளையாட்டுகளில் தன் உடல் வலிமையாலும் தன்னம்பிக்கையாலும் வாழ்வை கட்டியெழுப்பும் வீரராக காட்சியளிக்கிறார். கிராமத்து மக்களின் அன்பையும் மரியாதையையும் பெற்ற அவரது வளர்ச்சி, அதிகாரம் மிக்க ஜமீன்தாரின் அகங்காரத்தைத் தூண்டும் தருணங்கள் கதைக்கு பரபரப்பை கூட்டுகின்றன.

இந்த திரைப்படத்தில் முழுக்க மாறுபட்ட உடல் மொழி மற்றும் ஆழமான உணர்ச்சிகளுடன் தோன்றுகிறார். சேற்றில் நடக்கும் மல்யுத்தப் போட்டிகளிலிருந்து, இரவு விளக்குகளில் மின்னும் கிரிக்கெட் மைதான காட்சிகள் வரை, ஒவ்வொரு ஃப்ரேமிலும் அவர் “பெத்தி”யாகவே வாழ்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது.

நாயகியாக பாரம்பரிய அழகும் மென்மையான நடிப்பும் கலந்த தோற்றத்தில் கவர்கிறார். மேலும் , , , உள்ளிட்ட நட்சத்திரங்கள் கதையின் வலிமையை அதிகரிக்கின்றனர்.

தொழில்நுட்ப ரீதியாகவும் “பெத்தி” மிக உயர்ந்த தரத்தில் உருவாகியுள்ளது. தயாரிப்பு வடிவமைப்பாளர் உருவாக்கிய கிராமத்து உலகம் இயல்பும் பிரம்மாண்டமும் கலந்ததாக உள்ளது. ஒளிப்பதிவாளர் ஒவ்வொரு காட்சியையும் வண்ணமயமான ஃப்ரேம்களுடன் உயிரோட்டமாக பதிவு செய்துள்ளார். இசையமைப்பாளர் வழங்கிய பின்னணி இசை, டிரெய்லரின் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் தருணங்களை இன்னும் பலப்படுத்துகிறது.

சமீப காலங்களில் வெளியான டிரெய்லர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தை வழங்கும் “பெத்தி”, பெரிய திரையில் கண்டுகளிக்க வேண்டிய ஒரு சினிமா கொண்டாட்டமாக உருவாகி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். டிரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

நடிகர்கள் :

, , , , ,

தொழில்நுட்பக் குழு :

இயக்கம் & திரைக்கதை –
தயாரிப்பு – விருத்தி சினிமாஸ்
வழங்குபவர்கள் – ,
தயாரிப்பாளர் – வெங்கட சதீஷ்

இசை. – ஏ ஆர் ரகுமான்
ஒளிப்பதிவு – ரத்தினவேல்
படத்தொகுப்பு – நவீன் நூலி
மார்க்கெட்டிங் – ஃபர்ஸ்ட் ஷோ
மக்கள் தொடர்பு – யுவராஜ்

டிரெய்லர் :

 

“Sport… or a Fight for Survival? – Ram Charan’s ‘Peddi’ Trailer Leaves the Film Industry Stunned!”

The much-awaited pan-India film “Peddi”, starring Mega Power Star Ram Charan, has now become one of the most talked-about upcoming films across India. Blending sports, power, emotions, and survival against a rustic rural backdrop, the film’s grand theatrical trailer was unveiled at a special event in Mumbai and has already gone viral on social media.
Directed by Buchi Babu Sana, the film goes beyond being just another sports drama. Instead, it presents life itself as a battlefield where passion, struggle, and resilience define every moment. From the very first frame, the trailer pulls audiences into an earthy rural world filled with hard work, fierce competition, and deeply rooted human emotions.
Rather than focusing on a conventional mass hero introduction, the trailer first establishes the powerful world of the story. The character “Peddi” is portrayed as a multi-talented athlete who builds his life through sheer physical strength and determination. Whether it is cricket, wrestling, or sprinting, he survives and earns respect through relentless dedication to sport. His growing popularity among villagers and children gradually sparks jealousy in a dominant landlord, adding intense conflict to the narrative.
Ram Charan appears in one of his most physically demanding and emotionally layered roles to date. From mud-wrestling sequences to high-energy cricket moments under dazzling floodlights, every frame showcases his complete transformation into the character of Peddi.
Leading lady Janhvi Kapoor brings elegance and warmth to her role with graceful screen presence. The trailer also offers glimpses of a powerful supporting cast including Shiva Rajkumar, Jagapathi Babu, Divyenndu Sharma, and Boman Irani, all of whom add strength and depth to the story.
Technically, Peddi appears to be mounted on a spectacular scale. Production designer Avinash Kolla has created a richly detailed rural world that feels both authentic and cinematic. Cinematographer R Rathnavelu captures every frame with vibrant visuals, sweeping shots, and dynamic movement. Adding further emotional power is the impactful score by music maestro A. R. Rahman, which elevates both the action and emotional moments throughout the trailer.
Film lovers are already calling Peddi a completely fresh cinematic experience unlike any recent trailer release. With massive appreciation pouring in within minutes of its launch, the excitement surrounding the film has now reached peak levels.
Cast:
Ram Charan, Janhvi Kapoor, Shiva Rajkumar, Jagapathi Babu, Divyenndu Sharma, Boman Irani
Technical Crew:
Writer & Director – Buchi Babu Sana
Production Banner – Vriddhi Cinemas
Presented by – Mythri Movie Makers, Sukumar Writings
Producer – Venkata Satish Kilaru
Music – A. R. Rahman
Cinematography – R Rathnavelu
Editing – Navin Nooli
Marketing – First Show
PRO – Yuvraaj
Trailer: