Tuesday, May 19
Shadow

“பெண்கள் பலமாக இருந்தால் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்” — ‘பிளாஸ்ட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுன் உருக்கம்!

“பெண்கள் பலமாக இருந்தால் குடும்பமும் பாதுகாப்பாக இருக்கும்” — ‘பிளாஸ்ட்’ பத்திரிகையாளர் சந்திப்பில் அர்ஜுன் உருக்கம்!

சென்னையில் நடைபெற்ற ‘பிளாஸ்ட்’ திரைப்பட பத்திரிகையாளர் சந்திப்பு வழக்கமான சினிமா புரமோஷன் நிகழ்வாக இல்லாமல், பெண்களின் பாதுகாப்பு, குடும்ப உறவுகள் மற்றும் புதிய தலைமுறை சினிமா பற்றிய கருத்துகளை முன்வைத்த ஒரு வித்தியாசமான மேடையாக மாறியது.

தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் , மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்த படம் மே 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் அர்ஜுன், “இது சாதாரண ஆக்ஷன் படம் இல்லை. குடும்ப உணர்வுகளோடு பெண்களின் தற்காப்பு திறனை பேசும் படம். கராத்தே மாஸ்டராக நடித்தது எனக்கு புதுவிதமான அனுபவம்,” என்று தெரிவித்தார். மேலும், “படப்பிடிப்பு தளத்தில் இளம் டீமின் அர்ப்பணிப்பை பார்த்து நான் கூட புதிய விஷயங்களை கற்றுக் கொண்டேன்,” என அவர் கூறியது கவனம் பெற்றது.

இயக்குநர் சுபாஷ் கே ராஜ் தனது முதல் பட வாய்ப்பை நினைவுகூர்ந்தபோது உணர்ச்சிவசப்பட்டார். “ஒரு புதுமுக இயக்குநருக்கு முழு சுதந்திரம் கொடுத்து இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி. இந்தக் கதை ஒரு ஆக்ஷன் படமாக மட்டும் இல்லாமல், ஒவ்வொரு குடும்பத்தையும் தொடும் வகையில் இருக்கும்,” என்றார்.

இசையமைப்பாளர் பேசுகையில், “தமிழ் சினிமா ஒரு கடல் மாதிரி. அதில் வேலை செய்ய முன் தயாரிப்புடன் வர வேண்டும். ‘பிளாஸ்ட்’ கதையை கேட்டவுடனே இது வித்தியாசமான முயற்சி என்று உணர்ந்தேன்,” என்று கூறினார். மேலும், “இந்தப் படத்திற்காக நான் முற்றிலும் புதிய இசை அணுகுமுறையை முயற்சி செய்துள்ளேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகை பிரீத்தி முகுந்தன், “பெண்களுக்கு சக்திவாய்ந்த ஆக்ஷன் கதாபாத்திரங்கள் அரிதாக கிடைக்கும். ‘நிலா’ கதாபாத்திரம் என்னுடைய பயணத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்,” என்று கூறினார். அதேசமயம், அபிராமி, “25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அர்ஜுனுடன் இணைந்து நடித்திருப்பது மறக்க முடியாத அனுபவம்,” என தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக இருந்தது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துக்கள். கிரியேட்டிவ் புரொடியூசர் , “ஒரு பெண் தற்காப்பு கலை கற்றுக் கொண்டால் அவள் எவ்வளவு தன்னம்பிக்கையுடன் வாழ முடியும் என்பதை இந்த படம் பேசுகிறது,” என்றார். “பெண் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்ற ஒரு சமூக பார்வையும் இதில் உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

‘பிளாஸ்ட்’ திரைப்படம் குடும்ப உணர்வுகளும், அதிரடி காட்சிகளும் கலந்த ஒரு புதிய முயற்சியாக இருக்கும் என படக்குழு முழுவதும் நம்பிக்கை தெரிவித்தது. டீசர் மற்றும் டிரெய்லருக்கு ஏற்கனவே நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், படம் திரையரங்குகளில் எப்படி வெடிக்கப் போகிறது என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“When Women Become Strong, Families Feel Safer” — Arjun Gets Emotional at ‘Blast’ Press Meet!

The press meet of the upcoming film Blast, held in Chennai, turned out to be much more than a routine movie promotion event. The gathering became a platform to discuss women’s safety, family values, and the changing face of new-age cinema.

Produced by , the film stars , , and in lead roles. Directed by debutant filmmaker , Blast is set for a worldwide theatrical release on May 28.

Speaking at the event, Arjun described the film as more than just an action entertainer. “This is not a regular action film. It speaks about family emotions and women’s self-defense. Playing a karate master was a completely new experience for me,” he shared. He also praised the young team behind the film, saying, “I learned many new things from the dedication and energy of this talented crew.”

Director Subash K Raj became emotional while recalling his journey into filmmaking. “I’m grateful to AGS Entertainment for trusting a newcomer like me and giving me complete creative freedom. Though Blast is an action film, it carries emotions that every family can connect with,” he said.

Music composer revealed that the project instantly caught his attention. “Tamil cinema is like an ocean — you must come fully prepared. The moment I heard the story of Blast, I knew it was something unique,” he explained. He further added that he experimented with an entirely fresh musical approach for the film.

Actress Preity Mukhundhan said, “Powerful action-oriented roles for women are rare. The character of Nila will remain one of the most important milestones in my career.” Meanwhile, Abhirami shared her excitement about reuniting with Arjun after 25 years, calling it a memorable experience.

One of the major talking points of the event was the film’s emphasis on women’s empowerment and safety. Creative producer stated, “The film shows how confident and secure a woman can become when she learns self-defense. It also carries an important message about how society should raise and support girl children.”

With its mix of emotional storytelling, action, and social relevance, Blast is being positioned as a refreshing theatrical experience. Since the teaser and trailer have already generated positive buzz, expectations around the film’s release continue to grow among audiences.