
“யுவன் தான் எங்கள் நட்பின் ‘கனெக்டிங் பாயிண்ட்’!” – சிவா & பிரேம்ஜி கலகலப்பில் கலக்கிய ‘ஜாலி ஓ ஜிம்கானா’
டிஜிட்டல் பொழுதுபோக்கு தளமான -இல் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான கலாட்டா நிகழ்ச்சி ‘ஜாலி ஓ ஜிம்கானா’, இந்த வாரம் ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க சிரிப்பும் சுவாரஸ்யமும் நிறைந்த எபிசோடை பரிசளித்துள்ளது. இந்த எபிசோடில் நடிகர் மிர்ச்சி சிவா மற்றும் இசையமைப்பாளர்-நடிகர் பிரேம்ஜி அமரன் இணைந்து கலந்துகொண்டு தங்களின் நகைச்சுவை பேச்சாலும், எதிர்பாராத அனுபவங்களாலும் ரசிகர்களை கவர்ந்தனர்.
நிகழ்ச்சியின் தொடக்கம் முதலே இருவரின் இயல்பான கலகலப்பும், ஒருவரை ஒருவர் கலாய்க்கும் பாணியும் அரங்கையே சிரிப்பால் நிரப்பியது. குறிப்பாக, திருமணத்திற்கு பிறகு பிரேம்ஜியில் ஏற்பட்ட மாற்றம் குறித்து பேசப்பட்ட தருணங்கள் ரசிகர்களிடையே அதிக கவனம் பெற்றன.
ஒருகாலத்தில் ஷூட்டிங் முடிந்ததும் நண்பர்களை பார்ட்டிக்கு அழைத்துச் செல்வது வழக்கமாக இருந்த பிரேம்ஜி, தற்போது “வேலை முடிந்ததும் நேராக வீட்டிற்கே போக வேண்டும்” என்ற குடும்ப மனப்பான்மையுடன் பேசினார். இதைக் கேட்டு நிகழ்ச்சியில் இருந்தவர்களே ஆச்சரியப்பட்டனர். “மச்சி ஓபன் தி பாட்டில்” என்ற இமேஜில் இருந்த பிரேம்ஜி, இன்று “மாமி ஓபன் தி ஊறுகாய் ஜார்” நிலைக்கு மாறிவிட்டார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் நகைச்சுவையாக கருத்து பகிரத் தொடங்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சிவாவும் பிரேம்ஜியும் தங்களது நீண்டநாள் நட்பின் ரகசியத்தை பகிர்ந்தனர். “எங்களை இணைத்தது யுவன் ஷங்கர் ராஜாதான். அவருடைய ஸ்டுடியோவில் இருக்கும் தருணங்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்கும். ரசிகர்கள் பார்க்காத யுவனின் இன்னொரு முகத்தை நாங்கள் நெருக்கமாக பார்த்திருக்கிறோம்,” என்று இருவரும் ஒரே குரலில் பகிர்ந்தது நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது.
மேலும், நிகழ்ச்சியில் பிரேம்ஜி திடீரென கரகாட்டம் ஆடி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இசையில் மட்டுமல்ல, நடனத்திலும் தன்னிடம் தனி திறமை இருப்பதை அவர் ரசிகர்களுக்கு நினைவூட்டிய தருணமாக அது அமைந்தது.
அதே நேரத்தில், மிர்ச்சி சிவாவும் ரசிகர்களுக்கு ஒரு சுவாரஸ்ய அப்டேட்டை வழங்கினார். தனது கேரியரில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படத்தின் அடுத்த பாகம் உருவாகி வருவதாகவும், அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த தகவல் ரசிகர்களிடையே புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியின் மற்றொரு சுவாரஸ்யமான பகுதி என்னவெனில், உடன் திரை பகிர்ந்த அனுபவம் முதல் உடன் நடனமாடிய தருணம் வரை பல மறக்க முடியாத சம்பவங்களை சிவா நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார்.
‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சி தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக ஒளிபரப்பான எபிசோடுகளில் , , உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்திருந்தனர்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும் ‘ஜாலி ஓ ஜிம்கானா’, தற்போது ரசிகர்களின் வாராந்திர பொழுதுபோக்கு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

“Yuvan Is the Reason Behind Our Friendship!” – Shiva & Premgi Steal the Show on ‘Jolly O Gymkhana’
The popular entertainment talk show ‘Jolly O Gymkhana’, streaming on , delivered yet another laughter-filled episode this week featuring actor Mirchi Shiva and music composer-actor Premgi Amaren. The duo entertained audiences with their trademark humour, witty banter, and fun-filled conversations throughout the show.
From the very beginning, Shiva and Premgi’s effortless chemistry and playful roasting kept the atmosphere lively and engaging. One of the major highlights of the episode was the noticeable transformation in Premgi after marriage, which became a talking point among fans.
Known earlier for taking co-stars and friends to parties after shoots, Premgi surprised everyone by revealing how family has now become his top priority. He mentioned that after work, he now prefers heading straight home instead of partying late into the night. His candid confession left both the audience and viewers amused. Fans have already begun joking online that the man who once said “Machi, open the bottle” has now transformed into someone saying “Mami, open the pickle jar!”
The episode also gave viewers a heartwarming glimpse into Shiva and Premgi’s long-standing friendship. Speaking about how they became close friends, both revealed in unison that music composer was the connecting force behind their bond.
“Whenever we are at Yuvan’s studio, the entire place becomes lively and joyful. We have personally witnessed a side of Yuvan that many people don’t know about,” they shared, making it one of the most memorable moments of the show.
Adding more excitement to the episode, Premgi unexpectedly performed a traditional Karagattam dance, leaving everyone pleasantly surprised. The energetic performance proved that his talents extend beyond music and comedy, showcasing his entertaining stage presence as well.
Meanwhile, Mirchi Shiva treated fans to an exciting update about his upcoming projects. He revealed that work is currently progressing on the next installment of the blockbuster parody franchise , which had previously earned him immense popularity and the humorous title of “Universal Superstar.”
Shiva also shared several interesting behind-the-scenes experiences from his career, including moments spent sharing screen space with and dancing alongside Bollywood superstar . His humorous storytelling and lively narration added even more charm to the episode.
‘Jolly O Gymkhana’ continues to gain popularity among audiences for its lighthearted and candid celebrity interactions. Previous episodes featured popular personalities including , , and , who shared entertaining and personal moments with viewers.
Streaming exclusively every Thursday on , ‘Jolly O Gymkhana’ has steadily become one of the most engaging weekly entertainment shows for digital audiences.
