Friday, May 22
Shadow

“சிரிப்புக்குள் மர்மம்… குடும்பத்துக்குள் கலாட்டா!” – பாண்டிராஜ் புதிய உலகத்தை திறக்கும் ‘பரிமளா & கோ’

“சிரிப்புக்குள் மர்மம்… குடும்பத்துக்குள் கலாட்டா!” – பாண்டிராஜ் புதிய உலகத்தை திறக்கும் ‘பரிமளா & கோ’

 

தமிழ் சினிமாவில் குடும்ப உணர்வுகளையும், இயல்பான நகைச்சுவையையும், வாழ்க்கை நெருக்கமான கதாபாத்திரங்களையும் ரசிகர்களுக்கு தொடர்ந்து பரிசளித்து வரும் இயக்குநர் பாண்டிராஜ், இந்த முறை முற்றிலும் புதிய பாணியில் ரசிகர்களை சந்திக்கத் தயாராகியுள்ளார்.

அவரின் 12வது படைப்பான “பரிமளா & கோ”, வழக்கமான குடும்பக் கதையைத் தாண்டி, திரில்லர், டார்க் காமெடி, உணர்ச்சி மற்றும் மர்மம் கலந்து உருவாகியுள்ள வித்தியாசமான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது.

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை நகரில் நடைபெற்றது. ஆனால் அது ஒரு சாதாரண பத்திரிகையாளர் சந்திப்பு அல்ல — படக்குழுவினர் பேசிக்கொண்ட விதத்திலேயே, இந்த படம் எவ்வளவு உற்சாகத்துடனும் அன்புடனும் உருவாகியுள்ளது என்பது தெளிவாக உணரப்பட்டது.

“இந்த படத்தின் உண்மையான ஹீரோ – கதை!”

படத்தில் நடித்த ஒவ்வொருவரும் ஒரே கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினர் — “பரிமளா & கோ”வில் நட்சத்திரங்களைக் காட்டிலும் கதையே பெரிய ஹீரோ!

ஜெயராம் தனது பேச்சில்,

> “பாண்டிராஜ் சார் பாதி கதை சொன்னபோதே இது ஸ்பெஷலான படம் என்று தோன்றியது”

என்று கூறினார்.

அதேபோல் ஊர்வசி,

> “ஒரு நடிகராக சில கதைகள் மட்டும் ‘இது நிச்சயம் வேலை செய்யும்’ என்ற நம்பிக்கையை தரும். அந்த உணர்வு இந்த கதையில் இருந்தது”

என்று பகிர்ந்துகொண்டார்.

குடும்பத்தோடு பார்க்கும் ‘டார்க் காமெடி’

பாண்டிராஜ் படங்களில் வழக்கமாக இருக்கும் குடும்ப நகைச்சுவை இந்த படத்திலும் இருக்கிறது. ஆனால் இந்த முறை அதனுடன் மர்மமும் சேர்ந்து வருகிறது.

சென்னை முதல் கோயம்புத்தூர், பாலக்காடு வரை பயணிக்கும் இந்த கதை, ஒரு விசித்திரமான குடும்பத்தைச் சுற்றி நகர்கிறது. அந்த குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித்துவமான குணங்களும், அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத சம்பவங்களும் கதையை நகர்த்துகின்றன.

திரைக்கதையின் தனித்துவம் பற்றி மிஷ்கின் பேசும்போது,

> “பாண்டிராஜின் மிகப்பெரிய பலம் மொழி. மக்கள் பேசும் இயல்பான வார்த்தைகளை அவர் உயிரோடு திரையில் கொண்டு வருகிறார்”

என்று பாராட்டினார்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபல ஜோடி

இந்த படத்தின் மிகப்பெரிய ஆச்சரியம் — நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணையும் ஜெயராம் – ஊர்வசி கூட்டணி.

பல ஆண்டுகளாக ரசிகர்கள் ரசித்த இந்த ஜோடி, இப்போது முற்றிலும் புதிய குடும்ப சூழலில் திரும்பியிருக்கிறது.

இவர்களுடன் சேர்ந்து யோகி பாபு, சாண்டி மாஸ்டர், மிஷ்கின், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் இணைந்துள்ளனர்.

இளம் தலைமுறை நடிகைகளான சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் அனந்திகா சனில்குமார் குறித்து பாண்டிராஜ் கூறியபோது,

“இவர்கள் உண்மையிலேயே அக்கா-தங்கச்சிகளா என்று பலர் கேட்டார்கள்”

என்று சிரித்தபடி பகிர்ந்தார்.

செட்டே ஒரு குடும்பம்!

படக்குழுவினரின் பேச்சில் அதிகம் ஒலித்த வார்த்தை — “குடும்பம்”.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சிரிப்பு, கலாட்டா, நெருக்கம், தன்னிச்சையான improvisation என ஒரு வீட்டுச் சூழல் நிலவியதாக அனைவரும் கூறினர்.

சாண்டி மாஸ்டர் கூறியதாவது,

“ஷூட்டிங்கில் சாப்பிட நேரம் தெரியாம வேலை செய்தோம்… ஆனா அது கஷ்டமா இல்ல, ஜாலியா இருந்தது!”

புதிய இசையமைப்பாளரின் அறிமுகம்

இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக Foxn அறிமுகமாகிறார். அவரைப் பற்றி பாண்டிராஜ்,

 

“இன்னொரு அனிருத் மாதிரி தனித்துவமான எனர்ஜி இருக்கிறது”

என்று நம்பிக்கையுடன் பேசினார்.

தொழில்நுட்ப தரத்திலும் வித்தியாசம்

ஜார்ஜ் C. வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படம், பாண்டிராஜ் படங்களில் மிகவும் தரமான visuals கொண்ட படமாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

 

“பரிமளா & கோ” திரைப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்க, Tamilkumaran Productions Pvt Ltd மற்றும் Pasanga Productions இணைந்து தயாரித்துள்ளன.

திரில்லர், நகைச்சுவை, குடும்ப உணர்வு, மர்மம் — இந்த நான்கையும் ஒரே நேரத்தில் குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய வகையில் கலந்து வழங்கும் முயற்சியாக “பரிமளா & கோ” உருவாகியுள்ளது.

இப்போது இந்த குடும்பத்தின் கதவைத் திறக்க ரசிகர்களும் தயாராக காத்திருக்கிறார்கள்.

“Mystery Wrapped in Laughter… Chaos Inside a Family!” – Pandiraj Opens a New World with ‘Parimala & Co’

Known for consistently delivering heartwarming family entertainers filled with relatable emotions and natural humour, director is now stepping into an entirely fresh territory with his latest film “Parimala & Co.”

Marking his 12th directorial venture, the film is not just another family drama. Blending thriller elements, dark comedy, emotions, and mystery, “Parimala & Co” promises to offer audiences a completely different cinematic experience.

The recently held press meet in Chennai turned out to be much more than a routine media interaction. The way the cast and crew spoke about the film itself reflected the warmth, excitement, and emotional connection they shared while making it.

“The Real Hero of This Film Is the Story!”

One statement echoed repeatedly throughout the event — the biggest star of “Parimala & Co” is its screenplay.

revealed,

“Even before Pandiraj sir finished narrating the story, I felt this was something truly special.”

Similarly, shared,

“As an actor, only a few stories instantly give you confidence that they will work. This script gave me that feeling right away.”

A Dark Comedy Meant for Families

While Pandiraj’s trademark family humour remains intact, this time he adds mystery and thriller elements into the mix.

The story revolves around an unusual family and the bizarre incidents they encounter during a journey that stretches from Chennai to Coimbatore and Palakkad. Each member of the family comes with unique characteristics, making the narrative both entertaining and unpredictable.

Speaking about the screenplay, praised Pandiraj saying,

“Pandiraj’s greatest strength is language. He captures the way ordinary people speak and brings it alive on screen.”

Jayaram–Urvashi Reunion After Decades

One of the film’s biggest highlights is the reunion of iconic actors and after many years.

The beloved duo, who have delivered numerous memorable films together in the past, are now returning in a completely fresh family setup.

Joining them are , , , and several others in unique roles.

Speaking about young actresses and , Pandiraj jokingly remarked,

“People kept asking if they were real sisters because of how naturally they performed.”

A Film Set That Felt Like Home

The word most repeated by the entire team during the event was — family.

The actors described the shooting spot as a place filled with laughter, fun, improvisation, and genuine bonding.

humorously said,

“We worked so joyfully that we often forgot even meal timings!”

Introducing a New Musical Talent

The film also marks the debut of music composer .

Speaking about him, Pandiraj confidently stated,

“He has an incredible energy. I believe he can become a unique composer in the league of Anirudh.”

Strong Technical Backbone

Shot by cinematographer , the makers believe “Parimala & Co” will feature some of the finest visuals ever seen in a Pandiraj film.

The film is produced by , headed by , in association with Tamilkumaran Productions Pvt Ltd and Pasanga Productions.

Blending thriller, comedy, emotions, and family entertainment into one engaging package, “Parimala & Co” is expected to offer audiences a refreshing theatrical experience.

Now, audiences eagerly await the chance to step into the world of this delightfully unusual family.