
“1 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கோவிந்தம்மா’… மீண்டும் ஹிட் மோடில் ஹிப்ஹாப் ஆதி!”
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் “மீசைய முறுக்கு 2” படத்துக்கு இசைதான் பெரிய பலம் என்பதைக் மீண்டும் நிரூபித்திருக்கிறது புதிய பாடலான “கோவிந்தம்மா”. வெளியான சில நாட்களிலேயே இந்த பாடல் 1 மில்லியன் பார்வைகளை தாண்டி ரசிகர்களின் கொண்டாட்ட பாடலாக மாறியுள்ளது.
ஏற்கனவே “ஆரா 10/10” மற்றும் “பப்பாளி பழமே” ஆகிய இரண்டு பாடல்களும் இணையத்தில் பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வந்துள்ள “கோவிந்தம்மா” பாடலும் அதே வேகத்தில் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. குறிப்பாக, கிராமிய இசைத் தாளத்துடன் கலந்த மாஸ் பாணி, ஆதியின் வித்தியாசமான தோற்றம், உற்சாகமான காட்சியமைப்பு ஆகியவை பாடலுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன.
இந்த பாடலில் ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் கௌஷிக் கிரிஷ், கானா வினோத், கானா உலகம் தரணி மற்றும் கானா சுதாகர் இணைந்து பாடியுள்ளனர். நாட்டுப்புற இசை மற்றும் இன்றைய யூத் பீட் இரண்டையும் கலந்து ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முதல் பாடலான “ஆரா 10/10” ஏற்கனவே 100 மில்லியன் பார்வைகளை கடந்த நிலையில், “மீசைய முறுக்கு 2” படத்தின் இசை ஆல்பம் இந்த ஆண்டின் அதிகம் பேசப்படும் ஆல்பங்களில் ஒன்றாக மாறியுள்ளது. மூன்று பாடல்களும் வெற்றி பெற்றிருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது இன்னும் அதிகரித்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள இந்த படம் முழுக்க முழுக்க யூத் மற்றும் குடும்ப ரசிகர்களை குறிவைத்து உருவாகி வருகிறது. காதல், நகைச்சுவை, இசை, மாஸ் தருணங்கள் என கமர்ஷியல் அம்சங்கள் நிரம்பிய படமாக இது இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.
அவ்னி மூவிஸ் மற்றும் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கேதிகா சர்மா, சைத்ரா ஜே ஆச்சார், ரம்யா ரங்கநாதன், நாசர், கருணாஸ், ஆடுகளம் நரேன் மற்றும் கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசை வெளியீடுகள் மூலமே ரசிகர்களிடம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள “மீசைய முறுக்கு 2”, திரையரங்க வெளியீட்டிற்கு முன்பே ஹிட் பட்டியலில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“‘Govindamma’ Crosses 1 Million Views – Hiphop Aadhi Strikes Again with Another Chartbuster!”
The latest song “Govindamma” from ’s upcoming film has turned into an instant fan favorite, crossing 1 million views within a short span of its release.
Following the massive response to the previously released tracks “Aara 10/10” and “Pappali Pazhame,” the third single “Govindamma” has continued the film’s winning musical streak. Packed with energetic folk beats, vibrant visuals, and Aadhi’s refreshing vintage-inspired look, the song has quickly grabbed the attention of music lovers.
The track features vocals by Hiphop Tamizha Aadhi along with Kaushik Krish, Gaana Vinoth, Gaana Ulagam Dharani, and Gaana Sudhakar. Blending rural folk energy with contemporary music elements, the song delivers a festive and celebratory vibe that resonates strongly with audiences.
With the first single “Aara 10/10” already surpassing 100 million views, the soundtrack of Meesaya Murukku 2 is emerging as one of the most talked-about Tamil music albums of the year. The success of all three singles has significantly raised expectations for the film.
Written, composed, and directed by Hiphop Tamizha Aadhi, the film is being shaped as a complete commercial entertainer targeting both youth and family audiences. Romance, comedy, music, emotions, and mass appeal are expected to be the film’s major highlights.
Produced by Avni Movies and Benz Media Private Limited, the film also stars , , , , , , and in pivotal roles.
Even before its theatrical release, Meesaya Murukku 2 has already created strong buzz among fans through its successful music releases, positioning itself as one of the most anticipated Tamil entertainers of the year.
