
சொல்லப்படாத ஆசைகளின் மொழியாக வரும் ‘சின்ன சின்ன ஆசை’ – இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி இணையும் மனதை வருடும் பயணம்!
மனிதர்களின் வாழ்க்கையில் வெளிப்படையாக பேசப்படாத ஏராளமான ஆசைகளும், நினைவுகளும், உணர்வுகளும் மறைந்து கிடக்கின்றன. அவற்றை மிக இயல்பாகவும், மனதைத் தொடும் விதமாகவும் திரையில் சொல்ல வருகிறது ‘சின்ன சின்ன ஆசை’.
பாபுஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் அபிஜித் பாபுஜி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை வர்ஷா வாசுதேவ் எழுதி இயக்கியுள்ளார். மனித உறவுகளின் மென்மையான தருணங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூன் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் சினிமாஸ் இப்படத்தை வெளியிடுகிறது.
புனித நகரமான காசியில் எதிர்பாராத விதமாக சந்திக்கும் இரு மனிதர்களின் வாழ்க்கைப் பயணத்தில் உருவாகும் உணர்வுகளையும், அவர்களுக்குள் சொல்லப்படாமல் இருக்கும் ஆசைகளையும் மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. வாழ்க்கையை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கும் இந்த திரைப்படம், பார்வையாளர்களுக்கு நெருக்கமான அனுபவமாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.

மலையாள சினிமாவின் திறமையான நடிகரான இந்திரன்ஸ், அனுபவமிக்க நடிகை மதுபாலா மற்றும் தேசிய விருது பெற்ற நடிகை அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் தம்பி ராமையா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், விஷ்ணு அகஸ்தியா மற்றும் சாய் ஜனனி உள்ளிட்டோர் கதையின் முக்கிய திருப்பங்களுக்கு உயிரூட்டியுள்ளனர்.
குறிப்பாக, இதுவரை திரையில் காணாத புதிய பரிமாணங்களில் இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா தோன்றுகின்றனர். அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரமும் படத்தின் உணர்வுப்பூர்வமான மையமாக அமைகிறது. அதேசமயம், தம்பி ராமையா மற்றும் காளி வெங்கட் ஆகியோரின் கதாபாத்திரங்கள் கதைக்கு நகைச்சுவையும் மனிதநேயமும் சேர்க்கின்றன.
‘96’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்ற கோவிந்த் வசந்தா, இந்தப் படத்திற்காக ஆறு இனிமையான பாடல்களை வழங்கியுள்ளார். அவரது இசை, படத்தின் உணர்வுகளை மேலும் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளதாக படக்குழு தெரிவிக்கிறது.
ஒளிப்பதிவை ஃபைஸ் சித்திக் மேற்கொண்டுள்ள நிலையில், படத்தொகுப்பை ரெக்சன் ஜோசப் கவனித்துள்ளார். கலை இயக்கம் சாபு மோகன், உடை வடிவமைப்பு சமீரா சனீஷ், ஒலி வடிவமைப்பு ரெங்கநாத் ரவி மற்றும் ஒப்பனை ரஞ்சித் அம்பாடி ஆகியோர் தொழில்நுட்ப அணியில் இடம்பெற்றுள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ள ‘சின்ன சின்ன ஆசை’ திரைப்படம் சென்சார் வாரியத்தின் ‘யு’ சான்றிதழைப் பெற்றுள்ளது. படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
“ஒவ்வொரு மனிதரின் உள்ளத்திலும் நிறைவேறாத சிறு சிறு ஆசைகள் இருக்கின்றன. அந்த உணர்வுகளின் அழகை இயல்பாகவும் உண்மையாகவும் திரையில் பதிவு செய்யும் முயற்சிதான் ‘சின்ன சின்ன ஆசை’. எல்லா தரப்பு ரசிகர்களையும் இணைக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாக இப்படம் இருக்கும்” என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘Chinna Chinna Aasai’ Arrives as a Heartfelt Celebration of Unspoken Dreams and Human Emotions
Every human life is filled with countless unspoken desires, cherished memories, and emotions that often remain hidden beneath the surface. Bringing those delicate feelings to the screen with warmth and authenticity is Chinna Chinna Aasai.
Produced by Abhijith Babuji under the banner of Babuji Productions and written and directed by Varsha Vasudev, the film is set to hit theatres on June 19. AGS Cinemas will release the film across Tamil Nadu.
Set against the spiritual backdrop of Varanasi, the story revolves around two individuals who meet unexpectedly, leading to a journey filled with emotions, self-discovery, and unspoken aspirations. Through its touching narrative, the film offers a fresh perspective on life and human relationships, promising an experience that audiences can deeply connect with.
The film stars acclaimed Malayalam actor Indrans, veteran actress Madhubala, and National Award-winning actress Aparna Balamurali in pivotal roles. They are joined by Thambi Ramaiah, Kaali Venkat, Jaffer Sadiq, Vishnu Agasthya, and Sai Janani, all of whom play significant characters that enrich the story.
Notably, Indrans and Madhubala will be seen in roles unlike anything they have portrayed before, while Aparna Balamurali’s character forms the emotional core of the narrative. Thambi Ramaiah and Kaali Venkat bring warmth, humour, and humanity to the film through their memorable performances.
Music for the film has been composed by Govind Vasantha, whose work in 96 won widespread acclaim. Featuring six melodious tracks, the soundtrack is expected to further elevate the film’s emotional depth and resonate strongly with audiences.
The technical crew includes cinematographer Faiz Siddik, editor Reckson Joseph, art director Sabu Mohan, costume designer Sameera Saneesh, sound designer Renganaath Ravee, and makeup artist Ranjith Ambadi.
Produced in Tamil, Telugu, Malayalam, and Kannada, Chinna Chinna Aasai has received a U certificate from the Censor Board. The film’s audio rights have been acquired by Think Music.
Speaking about the film, the makers said, “Every individual carries little dreams and wishes within their heart. Chinna Chinna Aasai is our attempt to capture those emotions with honesty and sensitivity. With its engaging screenplay, heartfelt performances, and strong technical craftsmanship, we believe the film will connect with audiences from all walks of life.”
