Monday, August 24
Shadow

100 படங்களின் இசைப் பயணத்தை கொண்டாடிய வேல்முருகன்! ஜி.வி. பிரகாஷ் பிறந்தநாளில் தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ச்சி மரியாதை

100 படங்களின் இசைப் பயணத்தை கொண்டாடிய வேல்முருகன்!
ஜி.வி. பிரகாஷ் பிறந்தநாளில் தங்கச் சங்கிலி அணிவித்து நெகிழ்ச்சி மரியாதை

திரையுலகில் வெற்றிகள், விருதுகள், சாதனைகள் என பல்வேறு அங்கீகாரங்கள் கிடைப்பது வழக்கம். ஆனால் ஒரு கலைஞரின் வெற்றியை அவரால் உருவாக்கப்பட்ட மற்றொரு கலைஞர் மனமார பாராட்டுவது மிகவும் அரிதான தருணம். அப்படிப்பட்ட நெகிழ்ச்சியான நிகழ்வு இன்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமாரின் பிறந்தநாளில் அரங்கேறியது.

100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு தடத்தைப் பதித்திருக்கும் ஜி.வி. பிரகாஷ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இசையில் தொடர்ந்து பல வெற்றிப்பாடல்களைப் பாடியுள்ள பின்னணிப் பாடகர் வேல்முருகன், தனது அன்பும் நன்றியுமாக ஒரு சிறப்பு பரிசை வழங்கினார்.

‘100 Films GV Sir’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியை ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு அணிவித்து தனது மகிழ்ச்சியையும் மரியாதையையும் வெளிப்படுத்தினார் வேல்முருகன். இந்த சந்திப்பின்போது வேல்முருகனின் மகளும் இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தனும் உடனிருந்தனர்.

இன்று நாட்டுப்புறப் பாடல்களின் அடையாளக் குரலாக விளங்கும் வேல்முருகனின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது ‘ஆடுகளம்’ திரைப்படம். அந்தப் படத்தில் ஜி.வி. பிரகாஷ் வழங்கிய வாய்ப்பே அவரை ரசிகர்களிடையே பரவலாக அறிமுகப்படுத்தியதோடு, தொடர்ந்து பல திரைப்படங்களில் பாடும் வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது.

அதன்பிறகு ‘ஒத்த சொல்லால’, ‘போட்டது பத்தல’, ‘கருப்பு நிறத்தழகி’, ‘கத்தரிப் பூவழகி’ உள்ளிட்ட பல பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்பாடல்கள் வேல்முருகனின் குரலையும், ஜி.வி. பிரகாஷின் இசையையும் மக்களின் மனதில் ஆழமாகப் பதித்தன.

இந்த சந்திப்புக்குப் பிறகு தனது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட வேல்முருகன் கூறியதாவது:

“எனது இசைப் பயணத்தில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றவர் ஜி.வி. பிரகாஷ் சார். ‘ஆடுகளம்’ முதல் அண்மையில் வெளியான ‘பராசக்தி’ வரை சுமார் 25 திரைப்படங்களில் தொடர்ந்து என்னை நம்பி பாடும் வாய்ப்புகளை வழங்கியுள்ளார். ஒரு பாடகராக என்னை மக்கள் மத்தியில் கொண்டு சென்ற அடித்தளத்தை அமைத்தவர் அவர்தான்.

இன்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, 19 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத்துறையில் பயணித்து வருகிறேன் என்றால் அதற்கு காரணமானவர்களில் முதன்மையானவர் ஜி.வி. பிரகாஷ். எனக்கும் என் குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உருவாக்கித் தந்த அந்த அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி சொல்ல வார்த்தைகள் போதாது.

அவரது பிறந்தநாளில் என் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் சிறிய முயற்சியாகத்தான் இந்த தங்கச் சங்கிலியை வழங்கினேன். இன்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார்.

ஒரு இசையமைப்பாளரின் வெற்றியை அவரது பாடகர் தனது சொந்த வெற்றியாகக் கருதி கொண்டாடிய இந்த தருணம், திரையுலகில் இன்னும் மனிதநேயம், நன்றியுணர்வு மற்றும் உண்மையான உறவுகள் உயிருடன் இருப்பதை உணர்த்தும் அழகான நிகழ்வாக அமைந்தது.

Velmurugan Honours G.V. Prakash Kumar with a Gold Chain on His Birthday, Celebrating His 100-Film Musical Journey

Success, awards, and milestones are common in the film industry. However, it is rare and truly special when an artist’s achievements are celebrated with heartfelt gratitude by another artist whose career was shaped by that success. Such an emotional and memorable moment unfolded today on the birthday of renowned music composer G.V. Prakash Kumar.

Marking G.V. Prakash Kumar’s remarkable achievement of composing music for over 100 films, popular playback singer Velmurugan, who has delivered several memorable songs under the composer’s music direction, presented him with a special gift as a token of love and gratitude.

Velmurugan honoured G.V. Prakash Kumar by adorning him with a gold chain engraved with the words “100 Films GV Sir.” The touching gesture symbolized his appreciation for the composer’s contribution to his life and career. Velmurugan’s daughter and music composer N.R. Raghunanthan were also present during the occasion.

Today, Velmurugan is widely recognized as one of the most distinctive folk singers in Tamil cinema. While he had sung in a few films earlier, it was the opportunity given by G.V. Prakash Kumar in Aadukalam that brought him widespread recognition and transformed his career. The breakthrough not only earned him industry acclaim but also opened doors to numerous film opportunities and international stage performances.

Over the years, several songs sung by Velmurugan under G.V. Prakash Kumar’s composition became major hits among audiences. Tracks such as Otha Sollaala from Aadukalam, Pottadhu Pathala from Saguni, Karuppu Nirathazhagi from Komban, and Kathari Poovazhagi from Asuran remain popular and continue to be celebrated by music lovers.

Speaking about the occasion, Velmurugan shared:

“G.V. Prakash Sir holds a very special place in my musical journey. From Aadukalam to the recently successful Parasakthi, he has continuously trusted me and given me opportunities in nearly 25 films. He is the one who laid the foundation for my identity as a playback singer and helped me reach the hearts of the audience.

Today, if I have sung over a thousand songs and successfully completed nearly 19 years in the music industry, G.V. Prakash Sir is one of the biggest reasons behind that journey. The opportunities he gave me have played a major role in shaping a happy life for me and my family.

Words are not enough to express my gratitude. This gold chain is simply a small gesture to convey my love and appreciation on his birthday. Meeting and wishing him in person today was a truly joyful and unforgettable experience.”

The heartfelt celebration stood as a beautiful reminder that genuine gratitude, respect, and enduring relationships continue to thrive in the film industry. More than a birthday tribute, it was a touching acknowledgement of the bond between a composer who created opportunities and a singer who transformed those opportunities into a remarkable career.