
பண்டிக காலத்தை குறிவைக்கும் ‘டாக்ஸிக்’… ஆகஸ்ட் 26-ல் உலகளாவிய வெளியீட்டை அறிவித்த படக்குழு!
இந்திய சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ (Toxic: A Fairy Tale for Grown-Ups) திரைப்படம், 2026 ஆகஸ்ட் 26-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ராகிங் ஸ்டார் யாஷ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதியுடன், புதிய போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் யாஷ் ஏற்றுள்ள ராயா (Raya) மற்றும் டிக்கெட் (Ticket) ஆகிய இரு முக்கிய கதாபாத்திரங்களின் தோற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இதன் மூலம் படத்தின் மர்மம் நிறைந்த கதை உலகம் குறித்த ஆர்வம் மேலும் அதிகரித்துள்ளது.
பொதுவாக வெளியாகும் திரைப்பட போஸ்டர்களிலிருந்து மாறுபட்டு, இந்த புதிய போஸ்டர் அதிகாரம், உணர்ச்சி, உறவுகளின் சிக்கல் மற்றும் மறைக்கப்பட்ட ரகசியங்கள் போன்ற அம்சங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இதனால் ‘டாக்ஸிக்’ திரைப்படம் எந்த வகையான கதைக்களத்தை மையமாகக் கொண்டுள்ளது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
2026-ஆம் ஆண்டின் முக்கிய பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது. வரமகாலட்சுமி விரதம், ஓணம், ஈத் மற்றும் ரக்ஷா பந்தன் உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக வரும் காலகட்டத்தில் படம் வெளியாக இருப்பதால், இந்தியா மட்டுமின்றி உலகளாவிய சந்தைகளிலும் அதிக வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதன்கிழமை வெளியீட்டை தேர்வு செய்திருப்பதன் மூலம் நீண்ட விடுமுறை நாட்களின் பலனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் படக்குழு திட்டமிட்டுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன. பல மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடையும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனம் பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படம், யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணையும் முதல் படைப்பாகும். KVN Productions மற்றும் யாஷின் Monster Mind Creations நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படம், இந்திய சினிமாவின் மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’, கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ‘டாக்ஸிக்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் மற்றும் உலகளாவிய திரையரங்கு வெளியீட்டு திட்டங்கள் மீது ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களின் கவனம் திரும்பியுள்ளது. பிரம்மாண்டமான தயாரிப்பு, பான்-இந்தியா அணுகுமுறை மற்றும் சர்வதேச சந்தையை நோக்கிய பார்வை ஆகியவற்றால், ‘டாக்ஸிக்’ 2026-ஆம் ஆண்டின் முக்கியமான திரைப்பட வெளியீடுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.

‘Toxic’ Targets Festive Release Window; Makers Announce Worldwide Release on August 26
The makers of Toxic: A Fairy Tale for Grown-Ups, one of the most anticipated films in Indian cinema, have officially announced that the film will have a worldwide theatrical release on August 26, 2026.
Along with the release date announcement, a new poster featuring Rocking Star Yash has also captured the attention of fans. The poster showcases Yash’s two key avatars, Raya and Ticket, offering audiences another glimpse into the mysterious and intriguing world of the film.
Unlike conventional promotional posters, the newly released artwork hints at themes of power, emotional conflict, complex relationships, and hidden secrets. The visual has further heightened curiosity among moviegoers about the film’s storyline and overall narrative universe.
The film is strategically scheduled to arrive during one of the biggest festive periods of 2026. With festivals such as Varamahalakshmi Vratham, Onam, Eid, and Raksha Bandhan falling around the release period, industry observers believe the film is well-positioned to attract large audiences across both domestic and international markets.
By opting for a Wednesday release, the makers aim to take full advantage of the extended holiday window, allowing the film to reach a wider audience across regions and demographics. Designed as a multilingual cinematic event, Toxic is expected to appeal to movie lovers across India and beyond.
Directed by acclaimed filmmaker Geetu Mohandas, the film marks her first collaboration with Rocking Star Yash. Produced jointly by KVN Productions and Yash’s Monster Mind Creations, Toxic is regarded as one of the most ambitious projects currently being made in Indian cinema.
Shot simultaneously in Kannada and English, the film is set for release in Kannada, Tamil, Telugu, Hindi, Malayalam, and English. The ensemble cast includes leading stars such as Nayanthara, Kiara Advani, Huma Qureshi, Rukmini Vasanth, and Tara Sutaria in pivotal roles.
With the release date now officially locked, attention has shifted to the film’s upcoming promotional campaign and global theatrical rollout plans. Backed by large-scale production values, a strong pan-India appeal, and growing international interest, Toxic is shaping up to be one of the most significant theatrical releases of 2026.
