
வெளியீட்டுக்கு முன்பே இசையால் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்ற ‘விஸ்வநாத் & சன்ஸ்’… சூர்யாவின் ‘தி ஒன் ரூல்’ ரசிகர்களின் புதிய கொண்டாட்டப் பாடல்!
திரையரங்குகளில் வெளியாகும் முன்பே தனது இசை ஆல்பத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை முழுமையாக ஈர்த்து வருகிறது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம். ஏற்கனவே வெளியான ‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய இரண்டு பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ சமூக வலைதளங்களிலும், இசை தளங்களிலும் வேகமாக கவனம் பெற்று வருகிறது.
உற்சாகம், கம்பீரம், அதிரடி என அனைத்தையும் ஒருங்கே இணைக்கும் இந்தப் பாடல், சூர்யாவை இதுவரை காணாத புதிய எனர்ஜியுடன் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. திரையில் அவரது மாஸ் தோற்றத்தையும், தன்னம்பிக்கை நிறைந்த உடல்மொழியையும் வலுப்படுத்தும் வகையில் பாடல் காட்சிகள் அமைந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் இது விரைவாக கொண்டாட்டப் பாடலாக மாறியுள்ளது.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் மீண்டும் ஒரு முறை தனது துள்ளலான இசையின் மூலம் பாடலுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு தாளமும் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில், பாடலாசிரியரும் பாடகருமான கானா காதர் எழுதி, பாடியிருப்பது பாடலின் தனித்துவத்தை மேலும் உயர்த்தியுள்ளது. அவரது குரலின் ராவான தன்மையும், வரிகளின் துடிப்பும் பாடலை உடனடியாக மனதில் பதிய வைக்கிறது.
தொடர்ச்சியாக வெளியாகியுள்ள மூன்று பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருப்பதால், ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படத்தின் ஒவ்வொரு அப்டேட்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி வரும் நிலையில், இசை ஆல்பமே படத்தின் வெற்றிக்கான வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளதாக திரையுலக வட்டாரங்கள் கருதுகின்றன.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படத்தை சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் சூர்யதேவர நாக வம்ஷி மற்றும் சாய் சௌஜன்யா இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படம் சுதந்திர தின வார இறுதியை முன்னிட்டு, ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
Suriya Turns Up the Heat with “The One Rule” as Vishwanth & Sons Builds Massive Pre-Release Buzz
Even before its theatrical release, Vishwanth & Sons is making waves through its music. Following the overwhelming response to the first two singles, Pattampoochi and The Wedding Song, the makers have now unveiled the film’s third track, The One Rule, which is already gaining momentum across music streaming platforms and social media.
Packed with pulsating beats, infectious energy, and a powerful visual appeal, The One Rule presents Suriya in a striking new avatar. The high-voltage track perfectly complements his charismatic screen presence, making it an instant crowd favourite and one of the most talked-about songs from the film’s album.
Music composer G. V. Prakash Kumar once again delivers a foot-tapping, adrenaline-filled composition that is expected to become another chartbuster. Adding a distinctive edge to the track is Gana Kadhar, who has both penned the lyrics and lent his voice to the song. His energetic delivery and raw style amplify the song’s intensity, making it instantly memorable.
With three back-to-back successful singles, Vishwanth & Sons has significantly raised expectations ahead of its release. Each new update from the film has generated strong excitement among audiences, while its music album continues to play a major role in building anticipation for the big-screen experience.
Directed by Venky Atluri, Vishwanth & Sons is produced by Suryadevara Naga Vamsi and Sai Soujanya under the banners of Sithara Entertainments and Fortune Four Cinemas, and is presented by Srikara Studios. Positioned as a wholesome family entertainer, the film is all set for a grand worldwide theatrical release on August 14, during the Independence Day weekend.
