Thursday, September 10
Shadow

விஜய் சல்காவோங்கருக்கு மீண்டும் நெருக்கடி… உண்மை வெளிவருமா?

விஜய் சல்காவோங்கருக்கு மீண்டும் நெருக்கடி… உண்மை வெளிவருமா?

அக்டோபர் 2-ல் திரையரங்குகளில் ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ – வெளியானது பரபரப்பான டிரெய்லர்

மும்பை: இந்திய சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள ‘த்ரிஷ்யம்’ திரைப்படத் தொடரின் அடுத்த அத்தியாயமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படம், வரும் அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட டிரெய்லர் தற்போது வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

விஜய் சல்காவோங்கர் என்ற சாதாரண குடும்பத் தலைவன், தனது குடும்பத்தைப் பாதுகாப்பதற்காக எவ்வாறு அசாதாரணமான புத்திசாலித்தனத்தையும் திட்டமிடலையும் கையாண்டார் என்பதே ‘த்ரிஷ்யம்’ தொடரின் மையக்கரு. முந்தைய இரண்டு பாகங்களிலும் பார்வையாளர்களை தொடர்ந்து பதற்றத்தில் வைத்திருந்த இந்தக் கதை, தற்போது அதன் இறுதி அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது.

‘த்ரிஷ்யம் 2’ முடிவடைந்த இடத்திலிருந்தே புதிய கதை தொடங்குகிறது. ஆனால், ஏற்கனவே தெரிந்த பாதையில் பயணிக்காமல், முற்றிலும் புதிய கதைக்களத்தையும் திரைக்கதையையும் இந்தப் பாகம் கொண்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மீண்டும் ஒருமுறை சோதனைக்கு உள்ளாகும் விஜய்

பல ஆண்டுகளாக ஒரு உண்மை புதைந்து கிடக்கிறது. சல்காவோங்கர் குடும்பமும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. இதுவரை ஒவ்வொரு நெருக்கடியையும் முன்கூட்டியே கணித்து ஒரு படி முன்னிலையில் இருந்த விஜய் சல்காவோங்கர், இந்த முறை எதிர்பாராத அளவுக்கு வலுவான சவாலை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறார்.

விஜய் சல்காவோங்கராக அஜய் தேவ்கன் மீண்டும் தனது கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு எதிராக, பல ஆண்டுகளாக விடை கிடைக்காமல் இருக்கும் வழக்கின் உண்மையை எப்படியாவது வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் குற்றப்பிரிவு எஸ்.பி. ராஜ்வீர் சிங் தோமர் களமிறங்குகிறார்.

இந்த கதாபாத்திரத்தில் ஜெய்தீப் அஹ்லாவத் நடித்துள்ளார். விஜய் இதுவரை சந்தித்திராத வகையில் திட்டமிட்டு செயல்படும் ஒரு வலிமையான எதிரியாக ராஜ்வீர் சிங் தோமர் உருவெடுப்பதை டிரெய்லர் உணர்த்துகிறது.

புத்திசாலித்தனமா… அல்லது புதிய விசாரணை உத்தியா?

விஜயின் பழைய திட்டங்கள், குடும்பத்தைச் சுற்றியுள்ள ரகசியங்கள், கடந்த காலத்தில் விடை காணப்படாமல் போன கேள்விகள் என அனைத்தும் மீண்டும் கதைக்குள் கொண்டு வரப்படுகின்றன. ஒருபுறம் குடும்பத்தைப் பாதுகாக்க விஜய் மேற்கொள்ளும் ஒவ்வொரு நகர்வும், மறுபுறம் உண்மையை கண்டுபிடிக்க ராஜ்வீர் சிங் தோமர் மேற்கொள்ளும் விசாரணையும் கதையின் பரபரப்பை அதிகரிக்கின்றன.

இதற்கிடையே பிரகாஷ் ராஜின் வருகையும் கதைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மேலும் தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர் உள்ளிட்ட முந்தைய பாகங்களில் இடம்பெற்ற முக்கிய கதாபாத்திரங்களும் மீண்டும் திரும்பியுள்ளனர்.

கடந்த காலத்தின் ரகசியங்கள் மீண்டும் மேலெழும்பும்போது, இதுவரை பதிலில்லாமல் இருந்த கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பையும் டிரெய்லர் ஏற்படுத்துகிறது.

கோவாவில் தொடங்கி கோவாவிலேயே அடுத்த கட்டம்

‘த்ரிஷ்யம்’ கதையின் முக்கிய பின்னணியாக இடம்பெற்ற கோவாவில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத் தொடரின் வெற்றியையும் அதன் ரசிகர் வரவேற்பையும் கொண்டாடும் வகையில், விஜய் சல்காவோங்கர் கதையுடன் தொடர்புடைய முக்கிய இடங்களை மையமாகக் கொண்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களுக்கு பிரத்யேக திரைப்பட அனுபவம் வழங்கப்பட்டது.

முந்தைய பாகங்களின் முக்கியமான தருணங்களை நினைவுபடுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் நிறைவாக, பனாஜியில் பிரம்மாண்டமான டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், மிருணாள் ஜாதவ் உள்ளிட்ட நடிகர்களுடன் இயக்குநரும் எழுத்தாளரும் தயாரிப்பாளருமான அபிஷேக் பதக் கலந்து கொண்டார்.

மேலும் ஜியோஸ்டாரின் இந்தி மற்றும் ஆங்கில பொழுதுபோக்கு பிரிவின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அலோக் ஜெயின், ஸ்டார் ஸ்டுடியோ18 நிறுவனத்தின் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் அஜித் அந்தாரே, தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

வலுவான நட்சத்திரப் பட்டாளம்

அபிஷேக் பதக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படத்தில் அஜய் தேவ்கன், தபு, ஸ்ரியா சரண், ரஜத் கபூர், ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ், கமலேஷ் சாவந்த், இஷிதா தத்தா, மிருணாள் ஜாதவ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை அபிஷேக் பதக், ஆமில் கீயான் கான் மற்றும் பர்வீஸ் ஷேக் இணைந்து எழுதியுள்ளனர்.

ஸ்டார் ஸ்டுடியோ18 வழங்கும் இப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. அலோக் ஜெயின், அஜித் அந்தாரே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் ஆகியோர் தயாரிப்பாளர்களாக இணைந்துள்ளனர்.

‘த்ரிஷ்யம்’ தொடரின் முந்தைய பாகங்கள் உருவாக்கிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், விஜய் சல்காவோங்கரின் கதை உண்மையிலேயே முடிவுக்கு வருகிறதா? அல்லது அவரது புத்திசாலித்தனம் மீண்டும் ஒருமுறை விசாரணை அமைப்பைத் தோற்கடிக்கிறதா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது புதிய டிரெய்லர்.

இதற்கான விடையை அறிய ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Vijay Salgaonkar Faces His Biggest Challenge Yet: ‘Drishyam The Conclusion’ Trailer Promises a Gripping Final Chapter

Mumbai: The much-loved ‘Drishyam’ franchise is set to return with its highly anticipated final chapter, ‘Drishyam The Conclusion’, which is slated to hit theatres on October 2. The trailer of the film has now been unveiled, offering a glimpse into a tense new battle between Vijay Salgaonkar and a determined police officer who is unwilling to let the truth remain buried.

Directed by Abhishek Pathak, the film picks up from where ‘Drishyam 2’ left off. However, the makers have taken the story in a new direction with a fresh storyline and an entirely new screenplay, promising audiences another suspense-filled chapter in the Salgaonkar family saga.

Vijay Salgaonkar Has a New Enemy

For years, the truth surrounding the Salgaonkar family has remained buried. Vijay Salgaonkar has consistently managed to stay one step ahead, using his intelligence and carefully planned moves to protect his family.

But this time, the stakes are higher.

Ajay Devgn returns as Vijay Salgaonkar, the character who has become synonymous with the ‘Drishyam’ franchise. However, he now faces a formidable new opponent in Jaideep Ahlawat, who plays Crime Branch SP Rajveer Singh Tomar.

Unlike those who have previously pursued the case, Rajveer is determined to uncover the truth at any cost. His arrival sets the stage for an intense battle of intelligence, strategy and psychological warfare.

A New Investigation, More Secrets and Higher Stakes

The trailer suggests that the mystery surrounding the Salgaonkar family is far from over. As Rajveer Singh Tomar takes charge of the seemingly impossible case, Vijay finds himself facing a challenge unlike anything he has encountered before.

The return of several familiar faces adds another layer of intrigue to the story. Tabu, Shriya Saran and Rajat Kapoor reprise their respective roles, while Prakash Raj’s presence is expected to bring a fresh dimension to the narrative.

With secrets from the past resurfacing and unanswered questions coming closer to the surface, every move made by Vijay and the investigating team could change everything.

The trailer hints at a high-stakes confrontation where brains meet strategy, leaving audiences wondering whether Vijay will once again manage to stay ahead or whether Rajveer will finally succeed in uncovering the truth.

Trailer Launch Held in Goa

The trailer launch of ‘Drishyam The Conclusion’ was held in Goa, a location that holds a special connection with the world of the ‘Drishyam’ franchise.

As part of the celebrations, members of the media and social media personalities were taken through a special experience featuring significant locations associated with Vijay Salgaonkar and his story. The event revisited memorable moments from the earlier films before culminating in a grand trailer launch event in Panaji.

The event was attended by Ajay Devgn, Tabu, Shriya Saran, Rajat Kapoor, Jaideep Ahlawat and Mrunal Jadhav, along with director, writer and producer Abhishek Pathak.

Also present were Alok Jain, Head of Hindi & English Entertainment (Streaming, TV & Studios) at JioStar and producer; Ajit Andhare, President and Producer at Star Studios18; and producer Kumar Mangat Pathak.

Power-Packed Cast Returns

‘Drishyam The Conclusion’ features an ensemble cast including Ajay Devgn, Tabu, Shriya Saran, Rajat Kapoor, Jaideep Ahlawat, Prakash Raj, Kamlesh Sawant, Ishita Dutta and Mrunal Jadhav.

The screenplay and dialogues have been written by Abhishek Pathak, Aamil Keeyan Khan and Parveez Sheikh.

Presented by Star Studios18 and produced by Panorama Studios, the film is produced by Alok Jain, Ajit Andhare, Kumar Mangat Pathak and Abhishek Pathak.

The ‘Drishyam’ franchise has consistently sparked conversations among Indian audiences with its unique blend of family drama, crime and suspense. With ‘Drishyam The Conclusion’, the makers now promise to take Vijay Salgaonkar’s story towards its ultimate showdown.

Will Vijay once again outsmart the system, or will Rajveer Singh Tomar finally bring the long-hidden truth to light?

‘Drishyam The Conclusion’ releases in theatres on October 2.