
மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ டிசம்பர் 4-ல் திரைக்கு வருகிறது – பிறந்தநாளில் வெளியான முக்கிய அறிவிப்பு
‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ என அடுத்தடுத்து கவனம் பெற்ற நடிகர் மணிகண்டன், தற்போது முற்றிலும் புதிய களத்தில் களமிறங்குகிறார். அவர் கதாநாயகனாக நடித்துள்ள ஆக்ஷன் திரைப்படமான ‘மக்கள் காவலன்’ வரும் டிசம்பர் 4, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மணிகண்டனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இந்த அறிவிப்பு, படத்தின் வெளியீட்டு தேதியை மட்டுமின்றி, அவரது திரைப்பயணத்தில் அடுத்த கட்டத்தையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை சந்தோஷ் குமார் எழுதி இயக்கியுள்ளார். ‘பைசன் காளமாடன்’ படத்துக்குப் பிறகு இந்த இரு நிறுவனங்களும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாதாரண மனிதனின் போராட்டம் எப்படி மக்கள் போராட்டமாகிறது?
கண்ணியத்துடன் வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஒரு சாதாரண மனிதனைச் சுற்றியே ‘மக்கள் காவலன்’ படத்தின் கதை நகர்கிறது.
அவர் எதிர்கொள்ளும் ஊழல் நிறைந்த அமைப்பு, அவருக்கு இரண்டு வழிகளை மட்டுமே விட்டுவைக்கிறது — ஒன்று சரணடைவது; மற்றொன்று எதிர்த்து நிற்பது.
ஆரம்பத்தில் தனது உயிரையும் வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்கான போராட்டமாகத் தொடங்கும் இந்தப் பயணம், நாளடைவில் மிகப்பெரிய போராட்டமாக மாறுகிறது. அந்தச் சூழல், விரும்பியே தலைவராக மாறாத ஒருவரை மக்களின் முன்னால் நிற்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.
போராட்டம் தீவிரமடையும்போது அதற்கான விலையும் அதிகரிக்கிறது. ஒரு கட்டத்தில் தனி மனிதனுக்கும் மக்களுக்காக நிற்கும் ஒருவருக்கும் இடையிலான எல்லையே மறைந்து போகிறது என்பதுதான் படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது.
பிறந்த சூழ்நிலை, சமூகத் தடைகள் அல்லது தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகள் எதுவாக இருந்தாலும், அவை ஒருவரின் கனவுகளுக்கு எல்லையாக இருக்க வேண்டியதில்லை என்ற கருத்தையும் படம் முன்வைக்கிறது.
முதல் முறையாக ஆக்ஷன் ஹீரோவாக மணிகண்டன்
மணிகண்டனின் முந்தைய படங்கள் பெரும்பாலும் அவரது நடிப்புத் திறனையும் இயல்பான கதாபாத்திரங்களையும் முன்னிறுத்திய நிலையில், ‘மக்கள் காவலன்’ அவரது முதல் முழுமையான ஆக்ஷன் ஹீரோ படமாக உருவாகியுள்ளது.
எழுத்து, டப்பிங் மற்றும் சிறிய கதாபாத்திரங்கள் என திரைத்துறையில் தனது பயணத்தைத் தொடங்கிய மணிகண்டன், தற்போது முன்னணி நடிகராக வளர்ந்திருப்பது அவரது நீண்டகால பயணத்தின் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.
அந்தப் பயணத்தில் தொடர்ந்து தன்னை வேறுபட்ட கதாபாத்திரங்களில் முயற்சி செய்து வரும் மணிகண்டனுக்கு, ‘மக்கள் காவலன்’ மற்றொரு புதிய முயற்சியாக அமைந்துள்ளது.
மீண்டும் இணையும் ‘பைசன்’ கூட்டணி
‘பைசன் காளமாடன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு பிர்லா ஸ்டுடியோஸ் – நீலம் ஸ்டுடியோஸ் கூட்டணியில் உருவாகும் அடுத்த திரைப்படம் இது.
பெரிய திரைக்கான ஆக்ஷன் களத்தையும், சமூகப் பின்னணியுடன் கூடிய கதையையும் இணைக்கும் முயற்சியாக இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மணிகண்டனுடன் வாகை சந்திரசேகர், ஏ. வெங்கடேஷ், ஆர்.கே. விஜய்முருகன், சண்முகம் முத்துசாமி, சபுமோன், உன்னி மாயா, திவ்யா ஸ்ரீபாதா, ஜென்சன் திவாகர், லல்லு, ஜெமினி மணி, ரகு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்திற்கு பிரதீபன் செல்வரத்னம் ஒளிப்பதிவு செய்துள்ளார். அருள் மோசஸ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். பாப்பநாடு சி. உதயகுமார் தயாரிப்பு வடிவமைப்பை கவனித்துள்ளார்.
‘பைசன் காளமாடன்’ படத்துக்குப் பிறகு மீண்டும் இப்படத்திற்கும் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். சண்டைப் பயிற்சியை டான் அசோக் மேற்கொள்ள, ஒலி வடிவமைப்பை ஆண்டனி ஜெயரூபன் கவனித்துள்ளார். ஆடை வடிவமைப்பு – சுரேஷ்குமார்; ஒப்பனை – ராமச்சந்திரன்.
‘மக்கள் காவலன்’ – டிசம்பர் 4, 2026 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்.
K. Manikandan’s ‘Makkal Kaavalan’ to Hit Theatres on December 4, Marks Actor’s First Action Lead Role
K. Manikandan is stepping into a new territory with his upcoming film ‘Makkal Kaavalan’, which marks the actor’s first outing as the lead in an action drama. The film has now got a release date, with the makers announcing that it will arrive in theatres worldwide on December 4, 2026.
The announcement was made on Manikandan’s birthday, adding significance to the occasion as the film represents another new phase in his steadily evolving career.
Produced jointly by Birla Studios and Neelam Studios, ‘Makkal Kaavalan’ is written and directed by Santhosh Kumar. The film comes after the commercial success of ‘Bison Kaalamaadan’ and marks the next collaboration between the two production houses.
From an ordinary man to a people’s protector
At the centre of ‘Makkal Kaavalan’ is an ordinary man who wants nothing more than to live with dignity. However, when he finds himself trapped within a corrupt system, he is left with two choices — surrender or fight back.
What begins as a personal struggle for survival gradually develops into a much larger battle. Circumstances eventually force him into a position of leadership that he never actively sought.
As the conflict intensifies, the consequences of resistance become increasingly costly. The film explores how the line between an ordinary individual and someone who stands up for an entire community can slowly disappear.
The story also revolves around the idea of refusing to let one’s circumstances, background or the obstacles around them determine the limits of their ambition.
Manikandan enters a new action space
Known for choosing varied and character-driven roles, Manikandan has established himself as one of the prominent young actors in Tamil cinema through films such as ‘Good Night’, ‘Lover’ and ‘Kudumbasthan’.
His journey in the industry began with work across writing, dubbing and supporting roles before he moved into leading parts. With ‘Makkal Kaavalan’, he now takes on a full-fledged action-oriented role for the first time.
The film therefore marks a noticeable change of genre for the actor, while continuing his recent run of leading roles.
‘Bison Kaalamaadan’ team reunites
‘Makkal Kaavalan’ is the second collaboration between Birla Studios and Neelam Studios following ‘Bison Kaalamaadan’. The film brings together the former’s focus on large-scale theatrical cinema with the latter’s emphasis on emotionally driven and socially rooted stories.
The cast includes Vaagai Chandrasekar, A. Venkatesh, R.K. Vijaymurugan, Shanmugam Muthusamy, Sabumon, Unni Maya, Divya Sripada, Jenson Dhivakar, Lallu, Gemini Mani and Raghu, alongside Manikandan in the lead role.
Pratheepan Selvaratnam has handled the cinematography, while Arul Moses is in charge of editing. Pappanadu C. Udayakumar has worked on the production design.
The film has music by Nivas K. Prasanna, marking his reunion with the team after ‘Bison Kaalamaadan’. Don Ashok has choreographed the action sequences, with Anthony Jayaruban handling sound design. Costume design is by Sureshkumar, while Ramachandran has handled the makeup.
With its action-driven premise and Manikandan taking on a new kind of protagonist, ‘Makkal Kaavalan’ is set to bring a different side of the actor to the big screen.
‘Makkal Kaavalan’ releases worldwide in theatres on December 4, 2026.
