Sunday, October 11
Shadow

அல்லு அர்ஜுனின் மனைவி என்பதைத் தாண்டி… தனக்கென ஒரு உலகை உருவாக்கிய சினேகா ரெட்டி!

அல்லு அர்ஜுனின் மனைவி என்பதைத் தாண்டி… தனக்கென ஒரு உலகை உருவாக்கிய சினேகா ரெட்டி!

திரையுலகின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் மனைவி என்ற அடையாளம் சினேகா ரெட்டிக்கு ஏற்கனவே பிரபலத்தைத் தேடிக் கொடுத்திருந்தாலும், அதற்குள் மட்டுமே தன்னைச் சுருக்கிக்கொள்ளாமல் தனக்கென ஒரு தனி பாதையை உருவாக்கி வருகிறார் சினேகா.

தொழில்முனைவு, குடும்பம், உடற்பயிற்சி, பயணம், ஃபேஷன் என தனது விருப்பங்களையும் அன்றாட வாழ்க்கையின் அழகான தருணங்களையும் சமூக வலைதளங்கள் வழியாக ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார். இதன் மூலம், சினிமா பின்னணி இல்லாமலேயே தனக்கென ஒரு பெரிய டிஜிட்டல் ரசிகர் வட்டத்தையும் உருவாக்கியுள்ளார்.

சினேகா ரெட்டியின் தொழில்முனைவுப் பயணத்தில் முக்கிய இடம் பிடிப்பது ‘பிகாபூ’ (Picaboo) ஸ்டுடியோ. தொழில் சார்ந்த பணிகளில் கவனம் செலுத்துவதோடு, தனது தனிப்பட்ட ஆர்வங்களுக்கும் அவர் தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

குறிப்பாக உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையில் சினேகாவுக்கு இருக்கும் ஆர்வம் அவரது சமூக வலைதளப் பதிவுகளிலும் தெரிகிறது. தனது வொர்க்அவுட் மற்றும் லைஃப்ஸ்டைல் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

 

அதேபோல், குழந்தைகளுடன் செலவிடும் நேரத்திற்கும் அவரது வாழ்க்கையில் முக்கிய இடம் இருக்கிறது. குடும்பத்துடன் இருக்கும் தருணங்கள், சுற்றுலா பயணங்கள், ஃபேஷன் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சிறிய சந்தோஷங்கள் என பல்வேறு விஷயங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவது அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சினேகாவின் சமூக வலைதள இருப்பும் குறிப்பிடத்தக்கது. 9.1 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள அவர், வெறும் பிரபல நடிகரின் மனைவி என்ற நிலையைக் கடந்து, தனக்கென ஒரு டிஜிட்டல் சமூகத்தையும் உருவாக்கியுள்ளார்.

அல்லு அர்ஜுனுடனான திருமணம் சினேகாவை பொதுவெளியில் அறிமுகப்படுத்திய முக்கிய காரணமாக இருந்தாலும், அதன் பின்னர் தனது சொந்த விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் மூலம் தனித்த அடையாளத்தை உருவாக்கியிருப்பதே அவரது பயணத்தின் குறிப்பிடத்தக்க அம்சமாக பார்க்கப்படுகிறது.

தொழில், குடும்பம், உடற்பயிற்சி, பயணம், ஃபேஷன் என தனக்கு பிடித்த விஷயங்களை ஒருங்கிணைத்து, தனது வாழ்க்கை முறையையே தனக்கான அடையாளமாக மாற்றியிருக்கிறார் சினேகா ரெட்டி.

More Than Allu Arjun’s Wife: How Sneha Reddy Has Built an Identity of Her Own

Being the wife of one of Telugu cinema’s biggest stars comes with immense public attention. But Sneha Reddy has gradually carved out an identity that goes well beyond being known as Allu Arjun’s wife.

An entrepreneur, mother, fitness enthusiast and digital personality, Sneha has built a strong presence on social media, where she has more than 9.1 million followers. Her online space offers glimpses into various aspects of her life, from family moments and travel to fitness, fashion and lifestyle.

Entrepreneurship is another important part of Sneha’s journey. She is associated with Picaboo Studio, which remains one of the key highlights of her professional life. Alongside her business interests, she continues to focus on the things she enjoys personally, particularly fitness and wellness.

Sneha regularly shares glimpses of her workout routines and lifestyle with her followers. Her interest in fitness has become a familiar part of her social media presence, giving fans a closer look at her everyday routine.

Family, too, remains an important part of her world. Sneha often shares special moments with her children, offering followers a glimpse into her life away from the spotlight. Her travel diaries, fashion choices and candid family posts have also helped her connect with a wider digital audience.

While her marriage to Allu Arjun brought her into the limelight, Sneha has steadily developed a space of her own over the years. Her growing social media following reflects the interest she has generated independently through her lifestyle, personality and entrepreneurial pursuits.

Today, Sneha Reddy is recognised not just as the wife of a popular actor, but also as an entrepreneur, mother and social media personality with a strong digital following of her own.

Her journey is a reflection of how she has embraced multiple roles while creating an identity that extends far beyond her association with the film industry.