
5000 மாணவர்களின் ஆரவாரத்தில் வெளியான ‘நந்தினி’! – இளைஞர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய பால் டப்பாவின் அதிரடி இசை விருந்து!
விஜய் மில்டனின் ‘தொண்டர் படை’ படத்தின் முதல் பாடலுக்கு கல்லூரி மாணவர்கள் மத்தியில் உற்சாக வரவேற்பு!
இளைஞர்களின் இசை ரசனைக்கு ஏற்ற அதிரடியான ராப் இசையுடன் வெளியாகியிருக்கிறது விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’. சவேதா கல்விக் குழுமத்தில் சுமார் 5000 மாணவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்தப் பாடல் வெளியீட்டு விழா, மாணவர்களின் ஆரவாரத்தாலும் உற்சாகத்தாலும் களைகட்டியது.
இன்றைய இளைஞர்களிடையே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கும் ராப் இசைக் கலைஞர் பால் டப்பா, இந்தப் படத்தில் நடிகராக மட்டுமல்லாமல், ‘நந்தினி’ பாடலின் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், நடனக் கலைஞர் எனப் பல பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது துள்ளலான இசையும், சமகால இளைஞர்களின் ரசனைக்கேற்ற பாடல் வெளிப்பாடும் இணைந்திருப்பதால், ‘நந்தினி’ பாடல் கவனம் ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது.

வழக்கமான பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியாக இல்லாமல், நேரடியாக இளைஞர்களின் மத்தியில் பாடலை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற படக்குழுவின் விருப்பத்துக்கு ஏற்ப, சவேதா கல்விக் குழுமத்தில் இந்த விழா நடைபெற்றது. கல்விக் குழுமத்தின் நிறுவனர் மற்றும் வேந்தரான டாக்டர் என்.எம். வீரையன் பாடலை வெளியிட்டார். நிகழ்ச்சியில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றனர். திரையிடப்பட்ட பாடலை மாணவர்கள் உற்சாகத்துடன் ரசித்து, கைதட்டி ஆரவாரம் செய்தது விழாவுக்கு மேலும் உற்சாகம் சேர்த்தது.
‘நந்தினி’ பாடலில் வேடன், பால் டப்பா, கிஷோர், அம்மு அபிராமி ஆகியோர் இணைந்து குரல் கொடுத்துள்ளனர். இசை, வரிகள், பாடல் பாடும் விதம் என அனைத்திலும் பால் டப்பாவின் தனித்துவமான பாணி வெளிப்பட்டிருப்பதுடன், அவரது நடனமும் பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பை அளிக்கிறது. இளைஞர்களின் கொண்டாட்ட மனநிலைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு கல்லூரி மாணவர்களிடம் கிடைத்த வரவேற்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
ரஃப் நோட் புரொடக்ஷன் (Rough Note Production) தயாரிப்பில், தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியுள்ளார். ராஜ் தருண், பரத், ஆரி அர்ஜுனன், சுனில், ராதா ரவி, கிஷோர், பால் டப்பா, அம்மு அபிராமி, பிரசன்னா பாலச்சந்திரன், பரத் சீனி, விஜேதா வசிஸ்ட், ஜெஃப்ரி, இம்மான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்டமான கதைக்களத்தையும், இளம் ரசிகர்களைக் கவரும் அம்சங்களையும் மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ திரைப்படத்தை வரும் டிசம்பர் மாத இறுதியில் வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் பாடலான ‘நந்தினி’ இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள வரவேற்பைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

‘Nandhini’ Unleashes a Musical Storm Among 5,000 Students! Vijay Milton’s ‘Thondar Padai’ Kicks Off with a High-Energy Rap Anthem
Pal Dabba’s Electrifying Performance Wins Over the Youth at a Grand Song Launch Event!
The first single, ‘Nandhini’, from director Vijay Milton’s upcoming Tamil-Telugu bilingual film Thondar Padai – Chapter 1: Gods and Soldiers, has been unveiled amid tremendous excitement at Saveetha Educational Institutions, in the presence of nearly 5,000 students. The grand launch turned into a lively celebration, with the young audience welcoming the song with enthusiastic cheers and applause.
Popular rapper Pal Dabba, who has carved a niche for himself among today’s youth, plays a role in the film and has taken on multiple responsibilities for ‘Nandhini’. Besides composing the track, he has penned the lyrics, lent his voice and showcased his dance moves, bringing his distinctive style and energy to the song.
In a departure from conventional promotional events, the team chose to launch the first single directly among college students, aiming to connect with its primary young audience. Dr. N.M. Veeraiyan, Founder and Chancellor of Saveetha Educational Institutions, officially unveiled the song. Members of the film’s cast and technical crew were also present at the event. The enthusiastic response from the 5,000 students, who cheered and celebrated the song during its screening, added to the festive atmosphere.
Featuring an energetic musical arrangement and contemporary rap influences, ‘Nandhini’ is designed to appeal to the tastes of the younger generation. Vedan, Pal Dabba, Kishore and Ammu Abhirami have joined forces as singers for the track. Pal Dabba’s contribution across composition, lyrics, vocals and dance adds a distinctive identity to the song, while the enthusiastic reception at the launch has further raised expectations surrounding the film.
Produced by Rough Note Production, Thondar Padai – Chapter 1: Gods and Soldiers is directed by Vijay Milton and is being made as a bilingual film in Tamil and Telugu. The ensemble cast includes Raj Tarun, Bharath, Aari Arjunan, Sunil, Radha Ravi, Kishore, Pal Dabba, Ammu Abhirami, Prasanna Balachandran, Bharath Seeni, Vijetha Vasisht, Jeffrey and Iman Annachi, among others. The film’s music is composed by Sam C.S.
Mounted on a grand canvas and featuring elements aimed at attracting younger audiences, Thondar Padai – Chapter 1: Gods and Soldiers is tentatively scheduled for release in late December. Following the enthusiastic response to its first single, ‘Nandhini’, audiences can look forward to further announcements from the film’s team in the coming days.
