Friday, October 16
Shadow

தந்தை – மகள் பாசத்தின் மெல்லிய உணர்வுகளை இசையில் சொல்லும் டி. இமானின் ‘ஜோ ஜோ மா’!

தந்தை – மகள் பாசத்தின் மெல்லிய உணர்வுகளை இசையில் சொல்லும் டி. இமானின் ‘ஜோ ஜோ மா’!

‘சிக்னல் அட் 11.30’ படத்தில் மனதை வருடும் தாலாட்டுப் பாடல் வெளியீடு – ஹரிசரணின் குரலில் உயிர்பெறும் உணர்வுப்பூர்வமான இசை!

சில பாடல்கள் கேட்பதற்கு மட்டுமல்ல; மனதுக்குள் இருக்கும் அன்பையும் பாசத்தையும் மீண்டும் உணரச் செய்வதற்கும் உருவாகின்றன. அப்படியொரு உணர்வுப்பூர்வமான இசைப் படைப்பாக, அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையில், தந்தை – மகள் உறவின் ஆழமான பாசத்தை மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது.

ஹரிசரணின் மென்மையான குரலும், பாடலாசிரியர் மோகன்ராஜனின் உணர்வுகளைத் தொட்டுச் செல்லும் வரிகளும் இணைந்து, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையிலான வார்த்தைகளால் விவரிக்க முடியாத அன்பை இசை வழியாக வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக, தந்தையின் அரவணைப்பையும் மகளின் மீதான அளவற்ற பாசத்தையும் பிரதிபலிக்கும் இப்பாடல், கேட்பவர்களின் மனதில் நெருக்கமான உணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தந்தை – மகள் பாசத்தைப் பேசும் பாடல்கள் என்றாலே, ‘விஸ்வாசம்’ திரைப்படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல் பலரது நினைவுகளிலும் முதலில் வந்து நிற்கும். அந்தப் பாடல் ரசிகர்களின் தனிப்பட்ட உணர்வுகளோடும் குடும்ப நினைவுகளோடும் இரண்டறக் கலந்துள்ளது. அந்த வரிசையில், பாசத்தின் மென்மையையும் உறவின் உன்னதத்தையும் இசையின் வழியாகக் கடத்தும் முயற்சியாக ‘ஜோ ஜோ மா’ பாடல் கவனம் ஈர்க்கிறது.

டி. இமானின் இசை, ஹரிசரணின் குரல், மோகன்ராஜனின் வரிகள் என மூன்றும் இணைந்துள்ள விதம் பாடலுக்கு உணர்வுப்பூர்வமான வலிமையைச் சேர்க்கிறது. இதன் மூலம் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, புஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனிஷ்காந்த் மற்றும் ஆர்யன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் ஷிவானி சுப்பிரமணி இணைந்து தயாரித்துள்ளனர். ஏ.கே. நாகராஜன் நிர்வாகத் தயாரிப்புப் பொறுப்பைக் கவனித்துள்ளார்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி, படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் மற்றும் கலை இயக்குநர் முனி கிருஷ்ணன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உறவுகளின் ஆழத்தையும் பெற்றோரின் அன்பையும் இசையின் வழியாக உணர்த்தும் ‘ஜோ ஜோ மா’ பாடல், ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் முக்கியமான இசை ஈர்ப்பாக அமைந்துள்ளது.

 

 

D. Imman’s ‘Jo Jo Maa’ Celebrates the Heartwarming Bond Between a Father and Daughter!

‘Jo Jo Maa’ from ‘Signal at 11.30’ Out Now – Haricharan’s Soulful Vocals Bring the Emotions of a Father-Daughter Bond to Life!

Some songs do more than just entertain; they touch the heart and bring the deepest emotions of love and affection to the surface. One such heartfelt musical offering is ‘Jo Jo Maa’, released from the upcoming film Signal at 11.30, produced by Alar Studios. Composed by National Award-winning music director D. Imman, the song beautifully captures the profound bond between a father and his daughter.

Haricharan’s soothing vocals, combined with the emotionally rich lyrics penned by lyricist Mohan Rajan, bring alive the unconditional love shared between parents and their children. Reflecting a father’s affection, care and tenderness towards his daughter, ‘Jo Jo Maa’ is crafted to strike an emotional chord with listeners.

When it comes to songs that celebrate the father-daughter relationship in Tamil cinema, ‘Kannana Kanne’ from Viswasam remains an unforgettable favourite. More than just a film song, it has become deeply connected with audiences’ personal memories, family relationships and emotions. In a similar vein, ‘Jo Jo Maa’ seeks to capture the tenderness of parental love and the beauty of an unbreakable bond through music.

The combination of D. Imman’s evocative composition, Haricharan’s expressive voice and Mohan Rajan’s heartfelt lyrics lends the song a special emotional depth. With its emphasis on the warmth of family relationships, ‘Jo Jo Maa’ has also heightened anticipation for Signal at 11.30.

Written and directed by Malarvizhi Nadesan, the film features Santhosh Prathap, Bhavya Trikha, Pujita Ponnada, Jayaprakash, Munishkanth and Aryan in pivotal roles. The film is produced by Malarvizhi Nadesan and Shivani Subramani under the banner of Alar Studios, with A.K. Nagarajan serving as the executive producer.

The technical team includes cinematographer Raja Bhattacharjee, editor R. Kalaivanan and art director Muni Krishnan.

With its heartfelt portrayal of parental affection and the timeless bond between a father and daughter, ‘Jo Jo Maa’ promises to be one of the emotional musical highlights of Signal at 11.30.