Friday, November 6
Shadow

ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்!

ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றிக்கு வாழ்த்து! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தீபாவளி சிறப்புப் பரிசு வழங்கிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு. ஜி.கே.எம். தமிழ்குமரன், துணைத் தலைவர் திரு. எஸ். கமலக்கண்ணன், செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், பொருளாளர் திரு. சுபாஷ் சந்திரபோஸ், இணைச் செயலாளர் திருமதி சுஜாதா விஜயகுமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் நேரில் சென்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்தனர்.

அப்போது, ஜெயிலர் 2 திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பரிசையும் வழங்கி மகிழ்ந்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது இல்லத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை அனைவருக்கும் அன்புடன் வழங்கி, தீபாவளி நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

திரைப்பட வெற்றிக்கான வாழ்த்துகளும், பண்டிகைக் கால அன்புப் பரிமாற்றமும் நிறைந்த இந்தச் சந்திப்பு, திரையுலகினரிடையே நிலவும் அன்பையும் நட்பையும் பரஸ்பர மரியாதையையும் வெளிப்படுத்தும் இனிய நிகழ்வாக அமைந்தது.

 

Tamil Film Producers Council Congratulates Superstar Rajinikanth on the Success of Jailer 2 and Presents a Special Diwali Gift

Chennai: Members of the Tamil Film Producers Council met Superstar Rajinikanth in person to extend their heartfelt congratulations on the grand success of his film Jailer 2 and present him with a special gift on the occasion of Diwali.

The delegation included Tamil Film Producers Council President Thiru G.K.M. Tamilkumaran, Vice President Thiru S. Kamalakkannan, Secretary Thiru Radhakrishnan, Treasurer Thiru Subash Chandra Bose, Joint Secretary Mrs. Sujatha Vijayakumar, and members of the Executive Committee.

During the meeting, the office-bearers conveyed their warm wishes to Superstar Rajinikanth for the tremendous success of Jailer 2 and presented him with a special Diwali gift as a token of their affection and appreciation.

In a heartwarming gesture, Rajinikanth reciprocated their goodwill by distributing homemade sweets prepared at his residence to all the members and extending his warm Diwali greetings.

The memorable interaction was a wonderful celebration of camaraderie, mutual respect and goodwill within the Tamil film industry, making the festive occasion even more special.