Sunday, November 8
Shadow

சர்வதேச அரசியலின் மறுபக்கத்தைத் துணிச்சலுடன் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’!

சர்வதேச அரசியலின் மறுபக்கத்தைத் துணிச்சலுடன் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’!

பணப் பதுக்கல், உணவுப் பதுக்கல், செயற்கைப் பஞ்சம் என உலக அரசியலின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளை சமரசமின்றி பேச வருகிறது ‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்படம்.

உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரப் போட்டிகள், பொருளாதார ஆதிக்கம், இயற்கை வளங்களின் சுரண்டல் எனப் பல்வேறு முக்கியமான விஷயங்களை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது ‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்படம்.

பணம் மற்றும் இயற்கை வளங்கள் ஒரு சிலரின் ஆதிக்கத்திற்குள் முடங்கும்போது ஏற்படும் பாதிப்புகள், தானியங்கள் பதுக்கப்படுவதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் உணவுப் பஞ்சங்கள், இவற்றுக்குப் பின்னால் செயல்படும் சர்வதேச அரசியல் திட்டங்கள் எனப் பல அதிரடியான கருத்துகளை இப்படம் முன்வைக்கிறது. குறிப்பாக, அயல்நாடுகளின் தீவுகளில் அமர்ந்து உலக நாடுகளுக்கான சட்டங்களும் திட்டங்களும் தீர்மானிக்கப்படுவதாகக் கூறப்படும் சர்வதேச அரசியலின் மறுபக்கத்தை எந்தவித சமரசமும் இன்றி அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

புதுமுகங்களை முன்னிறுத்தி, துணிச்சலான அரசியல் கருத்துகளைத் திரையில் பேச முயன்றிருக்கும் இப்படத்தில், பொதுவுடைமை அரசியல் தலைவராகவும் ஆசானாகவும் பொன்வண்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டல்ஹௌசி பிரபு கதாநாயகனாகவும், வர்ஷா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் ஓஏகே சுந்தர், பழ. கருப்பையா, சித்தார்த், தீரன், பாலமுருகன், டெல்டா வீரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி டல்ஹௌசி பிரபு இயக்கியுள்ளார். பி.கே ஒளிப்பதிவு செய்துள்ளார். டி.சி இசையமைத்துள்ளார். கனல் கண்ணன் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். செந்தில் வீரா படத்தொகுப்பு செய்துள்ளார். தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். பாடல்களை ஞானக்கரவேல் எழுதியுள்ளார். மக்கள் தொடர்புப் பணிகளை கோவிந்தராஜ் கவனிக்கிறார்.

கர்ணா மற்றும் டாக்டர் தினேஷ் முருகேசன் இணைத் தயாரிப்பில், லீஹரி பிக்சர்ஸ் சார்பில் B. சின்னத்தம்பி மற்றும் ஹரி சங்கர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

வழக்கமான சினிமா கதைக்களத்திலிருந்து விலகி, சர்வதேச அரசியல், பொருளாதார ஆதிக்கம் மற்றும் பொதுவுடைமைச் சிந்தனைகளைத் திரைப்படத்தின் வழியாக விவாதிக்க முன்வந்திருக்கும் ‘சிவப்பு நட்சத்திரம்’, அதன் துணிச்சலான கருத்துகளால் கவனம் ஈர்க்கிறது.

‘Red Star’ Takes on the Hidden Realities of International Politics with a Bold and Uncompromising Narrative!

From the hoarding of wealth and food grains to the creation of artificial famines, ‘Red Star’ explores the disturbing realities of global politics and economic dominance without making any compromises.

Moving beyond conventional cinematic themes, ‘Red Star’ is an ambitious film that attempts to expose the power struggles, economic control and exploitation of natural resources operating behind the political decisions of nations.

The film explores how the hoarding of wealth leads to the destruction of natural resources and how the stockpiling of food grains can create artificial shortages and famines. It also examines the international political strategies allegedly formulated behind closed doors, including decisions concerning laws and policies that influence nations, reportedly shaped on islands in foreign countries.

With a bold and uncompromising approach, the film brings these politically significant issues to the forefront. Featuring a predominantly fresh cast, ‘Red Star’ aims to spark conversations about global power structures, economic inequality and the politics of resource control.

Veteran actor Ponvannan plays a significant role as a Communist political leader and mentor. Dalhousie Prabhu plays the male lead, while Varsha stars as the female lead. The film also features OAK Sundar, Pazha Karuppaiah, Siddharth, Theeran, Balamurugan and Delta Veera in important roles.

Dalhousie Prabhu has written the story, screenplay and dialogues, apart from directing the film. Cinematography is handled by P.K., while T.C. has composed the music. Action sequences are choreographed by Kanal Kannan, editing is by Senthil Veera, and Dinesh Master has choreographed the dance sequences. Gnanakaravel has penned the lyrics, while Govindaraj is handling the film’s public relations.

Karna and Dr. Dinesh Murugesan serve as co-producers. The film is produced by B. Chinnathambi and Hari Shankar under the banner of Leehari Pictures.

With its focus on international politics, economic dominance and communist ideology, ‘Red Star’ seeks to offer a different cinematic experience by bringing politically charged subjects and thought-provoking issues to the screen.