சர்வதேச அரசியலின் மறுபக்கத்தைத் துணிச்சலுடன் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’!
சர்வதேச அரசியலின் மறுபக்கத்தைத் துணிச்சலுடன் பேசும் ‘சிவப்பு நட்சத்திரம்’!
பணப் பதுக்கல், உணவுப் பதுக்கல், செயற்கைப் பஞ்சம் என உலக அரசியலின் பின்னணியில் ஒளிந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகளை சமரசமின்றி பேச வருகிறது ‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்படம்.
உலக நாடுகளின் அரசியல் நகர்வுகளுக்குப் பின்னால் இருக்கும் அதிகாரப் போட்டிகள், பொருளாதார ஆதிக்கம், இயற்கை வளங்களின் சுரண்டல் எனப் பல்வேறு முக்கியமான விஷயங்களை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது ‘சிவப்பு நட்சத்திரம்’ திரைப்படம்.
பணம் மற்றும் இயற்கை வளங்கள் ஒரு சிலரின் ஆதிக்கத்திற்குள் முடங்கும்போது ஏற்படும் பாதிப்புகள், தானியங்கள் பதுக்கப்படுவதன் மூலம் செயற்கையாக உருவாக்கப்படும் உணவுப் பஞ்சங்கள், இவற்றுக்குப் பின்னால் செயல்படும் சர்வதேச அரசியல் திட்டங்கள் எனப் பல அதிரடியான கருத்துகளை இப்படம் முன்வைக்கிறது. குறிப்பாக, அயல்நாடுகளின் தீவுகளில...
