Monday, November 9
Shadow

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த செழியனின் ‘காகித மலர்’ – பார்வையாளர்களின் பாராட்டில் அரங்கம் அதிர்ந்தது!

டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் கவனம் ஈர்த்த செழியனின் ‘காகித மலர்’ – பார்வையாளர்களின் பாராட்டில் அரங்கம் அதிர்ந்தது!

உலகத் திரையிடலில் இரண்டு காட்சிகளும் ஹவுஸ்ஃபுல் – சர்வதேச திரைப்பட விமர்சகர்கள், தேர்வுக்குழுவினர் பாராட்டு!

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இயக்கி, ஒளிப்பதிவு செய்துள்ள ‘காகித மலர்’ (The Paper Flower) திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் Asian Future பிரிவில் திரையிடத் தேர்வாகி, உலகத் திரையிடலை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

டோக்கியோவில் நடைபெற்ற இந்தத் திரைப்பட விழாவில் ‘காகித மலர்’ திரைப்படம் இரண்டு முறை திரையிடப்பட்டது. இரண்டு காட்சிகளுமே பார்வையாளர்களால் நிரம்பி வழிந்தது படக்குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. ஜப்பானிய ரசிகர்கள் படத்தை ஆர்வத்துடன் பார்த்து ரசித்ததுடன், திரையிடல் முடிவில் எழுந்த நீண்ட கைதட்டல்கள் படத்திற்குக் கிடைத்த வரவேற்பைப் பறைசாற்றின.

இந்தச் சிறப்பான நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் பிரேமா செழியன் மற்றும் அவரது மகள் அதிதா செழியன் ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர். திரையிடலுக்குப் பிறகு நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ரசிகர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பிரேமா செழியன் தமிழிலும், அதிதா செழியன் ஆங்கிலத்திலும் பதிலளித்தனர். அவர்களின் பதில்கள் ஜப்பானிய மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

சர்வதேசத் தரத்தில் தமிழ் சினிமா – தேர்வுக்குழு உறுப்பினர் பாராட்டு!

‘காகித மலர்’ திரைப்படம் குறித்து டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழு உறுப்பினர் கென்ஜி இஷிசாகா (Kenji Ishizaka) தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியால் குறைந்த செலவிலும் தரமான திரைப்படங்களை உருவாக்க முடியும் என்பதற்கு செழியனின் ‘காகித மலர்’ ஒரு சிறந்த உதாரணம். திரைப்பட உலகில் ரத்தினங்களைப் போன்ற படைப்புகள் உருவாகி வருகின்றன. அந்த வகையில் உலகத் தரத்திலான படைப்பாக இப்படம் அமைந்துள்ளது.

இந்தியத் திரைப்படங்கள் என்றாலே பாலிவுட் படங்கள்தான் பலருக்கும் நினைவுக்கு வருகின்றன. ஆனால், பாலிவுட்டைத் தாண்டி இந்தியாவில் பல மொழிகளில் பல்வேறு தனித்துவமான திரைப்படங்கள் உருவாகின்றன என்பதை உலக ரசிகர்களுக்கு எடுத்துக்காட்டும் நோக்கத்தில்தான் இந்தப் படத்தைத் தேர்வு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்ததைப் போலவே படத்தைப் பார்த்த அனைவரும் வியந்து பாராட்டினர் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், திரைப்பட விமர்சகர் கேட்டி ரைஃப் (Katie Rife) தனது பாராட்டில், இனிமையும் இலக்கியத் தன்மையும் கொண்ட தமிழ் திரைப்படமான ‘காகித மலர்’, விழாவில் திரையிடப்பட்ட மற்ற படைப்புகளிலிருந்து தனித்துவமாகத் திகழ்ந்து தனது கவனத்தை ஈர்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக நாடுகளில் வெளியாகிறது ‘காகித மலர்’!

டோக்கியோ திரைப்பட விழாவில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ஜப்பான் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்பட விநியோகஸ்தர்களும் ‘காகித மலர்’ திரைப்படத்தைத் தங்கள் நாடுகளில் திரையிடவும் விநியோகிக்கவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் இப்படத்தின் சர்வதேசப் பயணம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றிய எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத், ஒலி அமைப்பாளர் தபஸ் நாயக், இயக்குநர் செழியனின் உதவியாளர்களான பிச்சுமணி, ஆர்.பி. ராஜா, ராஜ்கிரண், ஜோசப் இருதயராஜ், பேச்சியப்பன், நடிகர் பராந்தக சோழன், நடிகை ஜனனி செண்பகா உள்ளிட்ட அனைவருக்கும் தயாரிப்பாளர் பிரேமா செழியன் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், உயிரெழுத்து பதிப்பகத்தின் சுதிர், அன்னம் பதிப்பகத்தின் கதிர் மற்றும் பபாசி அமைப்பினருக்கும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இந்த அங்கீகாரம், பாராட்டுகள் மற்றும் வெற்றிகள் அனைத்தையும் தனது அன்பிற்குரிய செழியனின் திரைப்பாதங்களில் சமர்ப்பிப்பதாகவும் பிரேமா செழியன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தமிழ் திரைப்படம் சர்வதேச மேடையில் கவனம் பெற்று, உலக ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவது தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. டோக்கியோவில் தொடங்கிய ‘காகித மலர்’ திரைப்படத்தின் சர்வதேசப் பயணம் இனி பல நாடுகளிலும் தொடரவுள்ளது.

Chezhiyan’s ‘The Paper Flower’ Wins International Acclaim at Tokyo International Film Festival; Both Screenings Witness Housefull Response!

The film receives an enthusiastic response from Japanese audiences, with international critics and jury members praising its unique storytelling and cinematic excellence.

Cinematographer and filmmaker Chezhiyan’s latest directorial venture, The Paper Flower, has received significant international recognition after being selected for the Asian Future section of the 39th Tokyo International Film Festival. The film had its World Premiere at the prestigious festival, with both scheduled screenings witnessing a housefull response.

The film was warmly received by Japanese audiences, who watched it with great interest and appreciation. Both screenings concluded with enthusiastic applause from the audience, marking a memorable moment for the film’s team.

The special screenings were attended by the film’s producer, Mrs. Prema Chezhiyan, along with her daughter, Miss Adhitha Chezhiyan, who is pursuing her education in Singapore.

Following the screenings, an interactive Q&A session was held, during which audiences raised several questions about the film. Prema Chezhiyan responded in Tamil, while Adhitha Chezhiyan answered in English. Their responses were translated into Japanese for the benefit of the audience.

The film also received encouraging appreciation and positive feedback from festival jury members, international film enthusiasts and media representatives.

Tokyo International Film Festival Jury Member Praises the Film

Kenji Ishizaka, a jury member of the Tokyo International Film Festival, praised The Paper Flower, highlighting its cinematic quality and global appeal.

He said, “In the digital age, it is possible to create outstanding films even with limited budgets. We have witnessed remarkable cinematic gems in the world of filmmaking, and Chezhiyan’s The Paper Flower is an excellent example of such a creation. It is a film that possesses international standards.

Generally, when people think of Indian cinema, Bollywood films are the first to come to mind. However, India has a wide range of unique and distinctive films beyond Bollywood. We selected this film to showcase that diversity of Indian cinema to audiences across the world.

As we had anticipated, audiences were surprised, impressed and highly appreciative of the film.”

International Film Critic Katie Rife Appreciates ‘The Paper Flower’

International film critic Katie Rife also praised the film, describing it as a sweet and bookish Tamil film that stood out among the other selections at the Tokyo International Film Festival and successfully captured her attention.

International Distributors Show Interest in the Film

Following its successful World Premiere, The Paper Flower has attracted the attention of film distributors from Japan and several other countries. Distributors have expressed interest in screening and distributing the film in their respective territories, opening up exciting possibilities for its international journey.

The film features the contributions of several talented technicians and artistes. Producer Prema Chezhiyan extended her heartfelt gratitude to editor Sreekar Prasad, sound designer Tapas Nayak, and Chezhiyan’s assistants Pitchumani, R.P. Raja, Rajkiran, Joseph Irudhayaraj and Pechiyappan. She also thanked actor Paranthaga Chozhan, actress Janani Shenbagam and everyone who contributed to the film.

She further expressed her gratitude to Sudhir of Uyirezhuthu Publications, Kathir of Annam Publications and the BAPASI organisation for their valuable support.

Expressing her happiness over the international recognition, producer Prema Chezhiyan dedicated all the success, appreciation and accolades to her beloved Chezhiyan.

With its remarkable reception at the Tokyo International Film Festival, The Paper Flower has marked an important milestone for Tamil cinema on the international stage. The film is now set to continue its journey across various countries, bringing Chezhiyan’s distinctive cinematic vision to audiences worldwide.