
தென்னிந்திய சினிமாவில் புதிய முயற்சி… மெட்டா சினிமா பாணியில் உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ – டைட்டில் டீசர் வெளியீடு!
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களும், புதுமையான திரைக்கதை முயற்சிகளும் அவ்வப்போது கவனம் பெறுவது வழக்கம். அந்த வரிசையில், தென்னிந்திய சினிமாவில் முதல் முறையாக மெட்டா சினிமா (Meta Cinema) பாணியில் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘ஜெயில் மேட்ஸ்’. இயக்குநர் கே.பி. ஜெகன் இயக்கி, நடித்துள்ள இப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.பி. ஜெகன். இயக்குநராக மட்டுமின்றி நடிகராகவும் கவனம் பெற்ற இவர், தனது புதிய முயற்சியாக ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் அவர் இயக்குநர் ஜெகன் என்ற தனது சொந்த அடையாளத்திலேயே திரையில் தோன்றுவது படத்தின் முக்கியமான சிறப்பம்சமாகும்.
விஜய் வர்மா மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘வடம்’ படத்தில் நடித்த சனாஷ்கா ஸ்ரீ நடித்துள்ளார். இவர்களுடன் மௌனிகா சந்தோஷ், அருள்தாஸ், வெற்றிவேல் ராஜா, உறியடி சங்கர், சாய் அபிநயா, வீரசமர், கதிரவன் பாலு, திண்டுக்கல் அலெக்ஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர், சிவனடியார் வேடத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருப்பது கூடுதல் கவனம் பெறுகிறது.
படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பாடல்களுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவன், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, இயக்குநர் திரைவண்ணன் ஆகியோர் வரிகள் எழுதியுள்ளனர். அறிமுகப் பெண் கவிஞர் சக்தி உமா பாலகிருஷ்ணாவும் ஒரு பாடலை எழுதியுள்ளார். குறிப்பாக, மறைந்த இசையமைப்பாளரும் பாடகருமான தேனிசைத் தென்றல் தேவா கடைசியாகப் பாடிய ஆன்மீகப் பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியான அனுபவமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிமுக ஒளிப்பதிவாளர் சுக செல்வம் ஒளிப்பதிவையும், மணிகண்டன் சிவக்குமார் படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். வீரசமர் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். படத்தின் இரண்டாம் பாதியைப் பெரும்பாலும் இயற்கையாகப் பெய்த மழையிலேயே படமாக்கியிருப்பது படத்தின் உருவாக்கத்தில் இடம்பெற்றுள்ள சுவாரஸ்யமான அம்சங்களில் ஒன்றாகும்.
யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் தயாரிப்பு மேலாண்மையை சாமுவேல் சிவராஜ் கவனித்துள்ளார். முழுப் படப்பிடிப்பும் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் கதைக்கு பின்னால் இயக்குநர் கே.பி. ஜெகனின் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவம் ஒன்றும் அடிப்படையாக அமைந்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்தே இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எதார்த்தமான நகைச்சுவையுடன் திரில்லர் அம்சங்களையும் இணைத்து இப்படம் உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்பப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், படத்தைப் பார்த்த இயக்குநர்கள் பாண்டிராஜ் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், தங்களது நிறுவனத்தின் மூலம் ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தை வெளியிடவும் முன்வந்துள்ளனர்.
வழக்கமான திரைப்பட பாணியிலிருந்து விலகி, இயக்குநரே தனது அடையாளத்துடன் கதைக்குள் பயணிக்கும் மெட்டா சினிமா முயற்சியாக உருவாகியுள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் திரையரங்கு வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘Jail Mates’ Title Teaser Out: Director K.P. Jegan Brings a Unique Meta-Cinema Experience to South Indian Cinema
Tamil filmmaker K.P. Jegan, known for directing films such as Pudhiya Geethai, Kodambakkam, Raman Thediya Seethai and En Aaloda Seruppa Kaanom, is back with an unconventional cinematic venture titled Jail Mates. Promoted as South India’s first film in the Meta Cinema format, the film’s title teaser has been released, sparking curiosity among movie buffs.
Adding an interesting dimension to the project, K.P. Jegan plays himself on screen, appearing as director Jegan. Vijay Varma plays another lead role, while Sanashka Sri, who was seen in Vadam, plays the female lead.
The film also features an ensemble cast comprising Mounika Santhosh, Aruldoss, Vetrivel Raja, Uriyadi Shankar, Sai Abhinaya, Veerasamar, Kathiravan Balu and Dindigul Alex in significant roles. National Award-winning actor M.S. Bhaskar makes a special appearance as a Sivanaadiyar.
The music for Jail Mates has been composed by Srikanth Deva. The songs feature lyrics by director Vignesh Shivan, lyricist Karthik Netha and director Thiraivannan. Debutant female lyricist Sakthi Uma Balakrishna has also penned a song for the film. One of the major highlights is a soulful spiritual number rendered by the late music composer and singer Thenisai Thendral Deva, reportedly his final recorded song.
The film’s cinematography has been handled by debutant Sukha Selvam, while Manikandan Sivakumar is in charge of editing. Veerasamar has overseen the art direction. Interestingly, a major portion of the second half was shot using natural rainfall, adding an element of realism to the film’s visual presentation.
Produced by United Arts, the film’s production management is handled by Samuel Sivaraj. The entire film has been shot in Tiruchendur and its surrounding locations.
Interestingly, the story of Jail Mates draws inspiration from a real-life incident that took place in director K.P. Jegan’s life in 2017. Blending realistic humour with thriller elements, the film promises a different storytelling experience.
With all production and post-production work completed, the film has already received encouraging responses from directors Pandiraj and Vignesh Shivan, who watched it and expressed their support. They have also come forward to release the film through their production banner.
With its unconventional Meta Cinema approach, real-life inspiration and an intriguing combination of humour and suspense, Jail Mates is gearing up to offer audiences a different cinematic experience.
The makers are expected to announce the film’s audio launch event and theatrical release date soon.
Title Teaser: https://www.youtube.com/watch?v=JbzG65fILLM
