Wednesday, November 18
Shadow

ஓவியா – ராஜாபிரபு நடிப்பில் உருவாகும் ‘கிளிக்’ திரைப்படம்!

ஓவியா – ராஜாபிரபு நடிப்பில் உருவாகும் ‘கிளிக்’ திரைப்படம்!

இளமைத் துள்ளலும், எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டெய்னர்!

ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜாபிரபு தயாரித்து கதாநாயகனாக நடிக்க, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘கிளிக்’ (Click).

இப்படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சுந்தர் மஹாஸ்ரீ, அஸ்மிதா, அமுதவாணன், லொள்ளு சபா மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்றைய இளைய தலைமுறையினரின் ரசனைக்கு ஏற்ற வகையில், இளமைத் துள்ளல், சஸ்பென்ஸ், நகைச்சுவை மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. குறிப்பாக, ஜென் சி (Gen Z) தலைமுறையினருடன் எளிதில் ஒன்றிணையும் வகையில் புதுமையான கதைக்களத்தையும் விறுவிறுப்பான திரைக்கதையையும் கொண்டு ‘கிளிக்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

உறவுகளுக்குள் ஏற்படும் மகிழ்ச்சியான தருணங்கள், உணர்வுப்பூர்வமான நிகழ்வுகள், எதிர்பாராத சம்பவங்கள் எனப் பல்வேறு அம்சங்களை சுவாரஸ்யமாக இணைத்து, அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இளமைக்கே உரிய உற்சாகத்துடன் சஸ்பென்ஸ் கலந்த பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக ‘கிளிக்’ அமையும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:

தயாரிப்பு நிறுவனம் : ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts)

தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் : ராஜாபிரபு

இயக்கம் : சுந்தர் மஹாஸ்ரீ

ஒளிப்பதிவு : அருண் குமார்

இசை : ஜோசப் சந்திரசேகர்

நிர்வாகத் தயாரிப்பு : சையத் ஜாஃபர்

இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் இதர பணிகள் தொடர்பான அடுத்தடுத்த தகவல்களுடன், திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளமை, காதல், சஸ்பென்ஸ் எனப் பல சுவாரஸ்யமான அம்சங்களுடன் உருவாகும் ‘கிளிக்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Oviya and Rajaprabhu Team Up for ‘Click’ – A Youthful Suspense Entertainer!

Produced by Rajaprabhu under the banner of JRP International Cine Arts and directed by Sundar Mahasri, ‘Click’ promises a refreshing blend of youthful energy, suspense and entertainment.

JRP International Cine Arts is all set to present its upcoming film Click, produced by Rajaprabhu and directed by Sundar Mahasri. Featuring Oviya and Rajaprabhu in the lead roles, the film is being crafted as a youthful suspense entertainer packed with exciting twists and engaging entertainment.

Apart from producing the film, Rajaprabhu also plays the male lead. With a fresh storyline that blends youthful charm, suspense and entertaining elements, Click is designed to connect effortlessly with today’s generation.

Featuring a Gen Z-centric narrative and an engaging screenplay, the film explores the excitement of relationships, emotional moments and unexpected twists. The makers aim to offer audiences a complete theatrical experience filled with fun, excitement and suspense.

Cast and Crew

Cast: Oviya, Rajaprabhu, Sundar Mahasri, Asmitha, Amudhavanan, Lollu Sabha Manohar, Salma Fairoz and Arul Selvam.

Production Banner: JRP International Cine Arts

Producer: Rajaprabhu

Director: Sundar Mahasri

Cinematography: Arun Kumar

Music: Joseph Chandrasekar

Executive Producer: Syed Zafar

With its youthful storyline, engaging suspense and entertaining elements, Click is expected to attract the attention of moviegoers, particularly younger audiences.

Further updates regarding the film, including its release plans, are expected to be announced soon.