Wednesday, November 18
Shadow

சர்வதேச திரைப்பட விழாவில் தடம் பதிக்கும் தமிழ் சினிமா! IFFI 2026-ன் ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வான சத்யசிவாவின் ‘அறிவு’!

சர்வதேச திரைப்பட விழாவில் தடம் பதிக்கும் தமிழ் சினிமா! IFFI 2026-ன் ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வான சத்யசிவாவின் ‘அறிவு’!

பெண்ணுரிமையைப் பேசும் அழுத்தமான படைப்புக்கு உலகத் திரைப்பட அரங்கில் அங்கீகாரம் – டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

தமிழ்த் திரையுலகிற்குப் பெருமை சேர்க்கும் வகையில், Movietron Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI 2026), இந்தியன் பனோரமாவின் ‘New Horizons’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சர்வதேசத் திரைப்பட விழாவின் கவனத்தை ஈர்த்துள்ள ‘அறிவு’, தமிழ் சினிமாவின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க படைப்பாகப் பேசப்படுகிறது.

சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், ‘கழுகு’ திரைப்படத்தின் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்த இயக்குநர் சத்யசிவா இப்படத்தை இயக்கியுள்ளார். ‘உறியடி’ விஜய்குமார் மற்றும் கயல் ஆனந்தி இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பெண்களின் உரிமைகள், அவர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சினைகள் மற்றும் சமத்துவத்திற்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக அக்கறை கொண்ட அழுத்தமான கருத்துகளை, விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் சினிமா மொழியின் வழியாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியாக ‘அறிவு’ அமைந்துள்ளது.

இப்படத்தில் I.M. விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். தில் ராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். வெற்றி கிருஷ்ணன் படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். S.K. கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

சாய்பிரபு ஜெயக்குமார் இணைத் தயாரிப்பாளராகப் பொறுப்பேற்றுள்ளார். ராமு M. தயாரிப்பு மேற்பார்வையாளராகவும், அரவிந்த் நிர்வாகத் தயாரிப்பாளராகவும், தென்னரசு தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பே இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியிருப்பது படக்குழுவினருக்கு உற்சாகத்தையும், தமிழ் சினிமாவுக்கு சர்வதேச அளவில் கூடுதல் கவனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மேலும் பல சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் ‘அறிவு’ திரைப்படத்தைத் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

பொழுதுபோக்குடன் சமூகப் பொறுப்பையும் இணைக்கும் திரைப்படங்களுக்கு சர்வதேச அரங்கில் கிடைக்கும் வரவேற்பை எடுத்துக்காட்டும் வகையில், ‘அறிவு’ படத்தின் இந்தத் தேர்வு அமைந்துள்ளது. விழாத் திரையிடலைத் தொடர்ந்து, ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் வரவுள்ளது.

இயக்குநர் சத்யசிவாவின் இயக்கத்தில், Movietron Production தயாரித்துள்ள ‘அறிவு’ திரைப்படம் வரும் டிசம்பர் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. சர்வதேச அங்கீகாரத்துடன் திரைக்கு வரத் தயாராகும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Tamil Cinema Makes Its Mark on the International Stage! Director Sathyasiva’s ‘Arivu’ Selected for the ‘New Horizons’ Section at IFFI 2026

A powerful film highlighting women’s rights earns international recognition even before its theatrical release; Vijay Kumar and Kayal Anandhi headline the film, which is set for a worldwide release on December 11.

Adding another proud moment to Tamil cinema, ‘Arivu’, produced by Movietron Production, has been selected for screening in the ‘New Horizons’ section of Indian Panorama at the 57th International Film Festival of India (IFFI 2026), scheduled to be held in Goa.

Earning recognition at one of India’s prestigious international film festivals even before its theatrical release, ‘Arivu’ is emerging as a noteworthy addition to contemporary Tamil cinema.

Produced by Saiv Vinoth Jayakumar and directed by Sathyasiva, who previously earned recognition for his film ‘Kazhu gu’, the film features ‘Uriyadi’ Vijay Kumar and Kayal Anandhi in the lead roles.

Centred on women’s rights and the social challenges faced by women, ‘Arivu’ explores socially relevant themes through an engaging cinematic narrative. With a strong social message at its core, the film aims to highlight important issues affecting society while delivering an impactful cinematic experience.

The film also features I.M. Vijayan, Singampuli and Deepa Shankar in significant roles. Music has been composed by D. Imman, while D. Raju has handled the cinematography. Vetri Krishnan is in charge of editing, and S.K. has served as the art director.

Saiprabhu Jayakumar serves as the co-producer. Ramu M. is the production supervisor, Aravind is the executive producer, and Thennarasu has handled production management.

The selection of ‘Arivu’ for screening at IFFI 2026, even before its theatrical release, marks a significant recognition for the film and its team. The achievement is also expected to bring greater international attention to Tamil cinema.

Following its selection, the team is planning to submit the film to several other international film festivals, further expanding its presence on the global cinema circuit.

With its socially relevant theme and focus on women’s rights, ‘Arivu’ seeks to combine meaningful storytelling with compelling cinema. Its selection for an international film festival has already generated considerable interest among audiences.

Produced by Movietron Production and directed by Sathyasiva, ‘Arivu’ is all set for a worldwide theatrical release on December 11. With international recognition ahead of its release, the film is expected to create strong anticipation among Tamil cinema audiences.