
நான்கு மொழிகளில் உருவாகும் சமுத்திரக்கனியின் ‘ஸ்கூல் பஸ்’ – கன்னடப் பதிப்பில் கிச்சா சுதீப் இணைந்தது எப்படி?
இயக்குநராக மீண்டும் களமிறங்கும் சமுத்திரக்கனி… தமிழில் சசிகுமார், கன்னடத்தில் கிச்சா சுதீப் – கிளைமாக்ஸில் கவனம் ஈர்க்கும் சாய்தன்ஷிகா!
தென்னிந்தியத் திரையுலகில் நடிகராகத் தொடர்ந்து பல்வேறு மொழிப் படங்களில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரக்கனி, அடிப்படையில் ஒரு இயக்குநர் என்பதையும் மறந்துவிட முடியாது. நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தாலும், தனது இயக்கப் பயணத்தையும் கைவிடாமல் அடுத்ததாக ‘ஸ்கூல் பஸ்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
நான்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழி ரசிகர்களையும் சென்றடையும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மொழியிலும் அந்தந்தத் திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நடிகர்கள் இடம்பெறுவது இப்படத்தின் தனிச்சிறப்பாக அமைந்துள்ளது.
தமிழ்ப் பதிப்பில் சசிகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதே கதாபாத்திரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளப் பதிப்புகளில் அந்தந்த மொழிகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். கன்னடப் பதிப்பில் இந்த முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார் கிச்சா சுதீப்.
குறிப்பாக, இப்படத்தின் கதையையும் தனது கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தையும் முழுமையாகப் புரிந்துகொண்ட கிச்சா சுதீப், தாமாகவே முன்வந்து இப்படத்தில் நடிக்கச் சம்மதித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, கன்னடப் பதிப்பின் வெளியீட்டு உரிமையையும் அவரே கைப்பற்றியிருப்பது படத்தின் மீதான அவரது நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.
இப்படத்தில் சசிகுமாருடன் சாய்தன்ஷிகாவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சுமார் 15 நிமிடங்கள் இவரது கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டே திரைக்கதை நகர்கிறது. இந்த நீண்ட காட்சியில் இதுவரை அவர் வெளிப்படுத்தாத முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
கிளைமாக்ஸில் சாய்தன்ஷிகாவின் நடிப்பு படத்தின் உணர்வுப்பூர்வமான பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபுறம் நான்கு மொழிகளில் உருவாகும் கதை, மறுபுறம் ஒவ்வொரு மொழிக்கும் ஏற்ற முன்னணி நட்சத்திரங்களின் பங்களிப்பு எனப் பல சிறப்பம்சங்களுடன் தயாராகி வரும் ‘ஸ்கூல் பஸ்’, சமுத்திரக்கனியின் இயக்கத்தில் மற்றொரு குறிப்பிடத்தக்க படைப்பாக அமையுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samuthirakani Returns to Direction with ‘School Bus’ – Kichcha Sudeep Joins the Kannada Version!
Sasikumar to Play a Key Role in the Tamil Version, While Kichcha Sudeep Headlines the Kannada Adaptation; Saithanshika Set to Make a Strong Impact in the Climax!
Samuthirakani, who has been actively working across the South Indian film industries as an actor, is now returning to his roots as a filmmaker. Although he has been busy portraying diverse characters in films across multiple languages, the actor-director continues to pursue his passion for direction. His upcoming directorial venture, titled ‘School Bus’, is currently taking shape.
Being made simultaneously in four languages – Tamil, Telugu, Malayalam and Kannada – the film aims to reach audiences across different regions of South India. One of the major highlights of the project is the inclusion of prominent actors from each respective film industry.
In the Tamil version, Sasikumar plays a significant role. The same character will be portrayed by prominent actors in the Telugu and Malayalam versions, while popular Kannada star Kichcha Sudeep has taken up the role in the Kannada version.
Interestingly, after understanding the importance and depth of his character, Kichcha Sudeep reportedly came forward on his own and expressed his willingness to be part of the film. Adding further significance to his association with the project, he has also acquired the Kannada distribution rights of the film.
Apart from Sasikumar, Saithanshika plays another important character in ‘School Bus’. The film’s climax, which runs for approximately 15 minutes, revolves primarily around her character. The actress is said to have delivered a performance that is markedly different from anything she has done before.
Her performance in this crucial climax sequence is expected to be one of the major emotional highlights of the film and a significant strength of the narrative.
With an interesting storyline, a four-language production strategy and leading actors representing different film industries, Samuthirakani’s ‘School Bus’ is generating considerable expectations. The film is expected to be an important addition to his journey as a filmmaker.
