ஆண்டுதோறும் வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ் திரை விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
ஆண்டுதோறும் வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ் திரை விருதுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கோலாகலம்**
சென்னை:
தமிழக அரசின் திரைப்படக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான முக்கிய அறிவிப்பாக, வெள்ளித்திரை, சின்னத்திரை மற்றும் தமிழ் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்தார். இந்த அறிவிப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியனின் 2026–2028 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் வெளியிடப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில், திரைப்படத் துறையின் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் ஊடகத் ...




